
உடல் எடை குறைப்பு பயணம் (weight loss journey) சமீபகாலமாக அதிகரித்துள்ளது 1 வாரம் வெயிட் லாஸ் லாஞ்ச் என தொடங்கி 2 வாரம், 3 வாரம், 1 மாதம், 50 நாட்கள் வரை நீள்கிறது. இது போல் நாட்கள் மற்றும் மாத கணக்கில் வெயிட் லாஸ் பிளானை தயார் செய்து, உடல் எடையை குறைக்க தொடங்குவது நல்ல ரிசல்ட்டை தருவது உறுதியாகியுள்ளது. பொதுவாக பெண்கள், இந்த வெயிட் லாஸ் சேலஞ்சில் முழு கவனத்தை திருப்பி தங்களது முழு உழைப்பை கொட்டுகின்றன. டயட், உடற்பயிற்சி, வொர்க்கவுட்ஸ் என முழுமையாக செயல்பட்டு எளிதில் தங்களது உடல் எடையை குறைக்கின்றன.
அந்த வகையில் இந்த பதிவில் 3 வாரத்தில் உடல் எடையை குறைத்து ஒல்லியாக பின்பற்ற வேண்டிய டயட், செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி விரிவாக பார்ப்போம். இதை முறையாக பின்பற்ற்றினால் உடல் எடையை 3 வாரத்தில் எளிமையாக குறைக்கலாம்.
உணவில் முக்கியமான மாற்றத்தை கொண்டு வர வேண்டும். ஆரோக்கியமான உணவுகள்,வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளை மட்டும் தான் எடுத்து கொள்ள வேண்டும். ஹோட்டல் மற்றும் ஜங்க் ஃபுட்ஸ்களை அறவே தவிர்க்கவும். அதே போல் டீ, காபி போன்றவற்றையும் விட்டு விட வேண்டும். கூல் ட்ரிங்க்ஸ், கார்ப்போ பானங்களையும் எடுத்து கொள்ள கூடாது. உடலுக்கு மிகவும் கெடுதல் தரும்ம் பரோட்டா, சாட் உணவுகளையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

தினமும் வெந்நீர் மட்டுமே குடிக்க வேண்டும். உணவுக்கு முன்பு பின் என சீரான இடைவெளியில் வெந்நீர் குடிக்க வேண்டும் . அதே போல் முடிந்தால் க்ரீன் டீ தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்கவும். தொப்பையை குறைக்க இந்த கிரீன் டீ பெரிதும் உதவும்.
கட்டாயம் நட்ஸ்களை ஊற வைத்து தான் சாப்பிட வேண்டும். முதல் நாள் இரவே ஊற வைத்து எடுத்து கொள்ளவும். காலையில் நட்ஸ் சாப்பிட்டு முடித்த பின்பு அந்த நீரை அப்படியே குடிக்க வேண்டும் இதுவும் முக்கியம்.
மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ், வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய் திண்பண்டங்களை தொடவே கூடாது. பானி பூரி, தயிர் பூரி, காளான் போன்றவற்றையும் நிறுத்தி கொள்ளவும். அதற்கு பதில் விதைகளை பட்டரில் வறுத்து தினமும் ஆரோக்கிய ஸ்நாக்ஸாக சாப்பிடவும். அதே போல் வேக வைத்த கடலை, சுண்டல் போன்றவற்றை சாப்பிடலாம்.
வெள்ளை உணவுகளான சர்க்கரை, உப்பு, வெள்ளை அரிசி, மாவு, போன்றவற்றை சாப்பிட கூடாது. அதற்கு பதில் ராகி அரிசி, திணை அரிசி, ராகி சேமியா, போன்றவற்றை தான் சாப்பிட வேண்டும்.
அதே போல் தினமும் காலை மற்றும் மாலை வாக்கிங் செல்ல மறக்க கூடாது. ஒரு நாளைக்கு கட்டாயம் 2000 ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும்.
இவை எல்லாவற்றையும் சரியாக 3 வாரங்கள் பின்பற்றினால் போதும், உடல் பருமனை குறைத்து ஒல்லியான தோற்றத்துக்கு மாறி விடலாம். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com