
பல பெண்களுக்கு மார்பகங்களில் முடி இருப்பது முற்றிலும் இயல்பானது. ஆனால் அதைப் பற்றி பேச பெண்கள் மிகவும் சங்கடமாக உணர்கிறார்கள், பல பெண்கள் இந்த சிக்கலை எதிர்கொள்கிறார்கள். மார்புப் பகுதியில் முடி பருவமடையும் போது அல்லது ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் காரணமாக தோன்றலாம். இது இயற்கையானது மற்றும் மார்பு பகுதியில் முடி இருப்பதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. வீட்டிலேயே மார்பக முடியை அகற்ற சில எளிய வழிகள் உள்ளன.
இந்த பதிவும் உதவலாம்: செரிமானம் முதல் தூக்கம் வரை நன்மை பயக்கும் வாழைப்பழ தேநீர்!!
கத்தரிக்கோல் பயன்படுத்தி உங்கள் மார்பக முடியை வெட்டி எடுத்து விடலாம். ஆனால் கவனம் தேவை மார்பக பகுதிகள் மிகவும் மென்மையானது அவற்றில் கத்திரிக்கோலை பயன்படுத்தும் போது கவனமாக கையாளுங்கள்.

Tweezing என்பது தேவையற்ற முடியை அகற்றுவதற்கான ஒரு எளிய வழியாகும். உங்கள் மார்பக பகுதிகளில் முடி குறைவாக இருக்கும்போது இது வேலை செய்யும். மேலும், நீளமான முடியில் மட்டும் Tweezing-கை பயன்படுத்தவும் இல்லையெனில் தோலை காயப்படுத்தலாம். நீங்கள் வலியை உணராமல் இருக்க ட்வீசிங்கை வேகமாக செய்வது நல்லது. நீங்கள் முடியை வேருடன் பிடுங்குவதால் இது ஒரு சிறந்த தீர்வாகும். மேலும் அந்த பகுதியைச் சுற்றி விரைவான முடி வளர்ச்சியைத் தடுக்கிறது. அதிகமாக முடி இருந்தால் இதை முயற்சி செய்ய வேண்டாம்.
மார்பகங்களைச் சுற்றி வழக்கமான முடி அகற்றும் கிரீம் பயன்படுத்த வேண்டாம் ஏனெனில் இங்கு தோல் மிகவும் மென்மையாக இருக்கும். அதற்காக விற்க்கப்படும் கிரீம் பயன்படுத்துங்கள். மார்பகப் பகுதியில் 5 முதல் 10 நிமிடங்களுக்கு மேல் கிரீம் விடாதீர்கள். ஈரமான துணியைப் பயன்படுத்தி துடைக்கவும்.

வீட்டிலேயே வேக்சிங் கிட் வாங்கி தேவையற்ற முடியை அகற்ற முயற்சி செய்யலாம். உணர்திறன் பகுதிகளுக்கு ஏற்ற வேக்சிங் கிட் கிடைக்குமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் இதனால் அதிக வலியை ஏற்படுத்தாது. வேக்சிங் கிட்டை சிறு சிறு துண்டுகளாக வெட்டி முடிகள் இருக்கும் பகுதிகளில் மட்டும் பயன்படுத்தவும்.
மார்பகங்களில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற இது மற்றொரு எளிய வழி. நீங்கள் முக ரேசரை மார்பக பகுதிக்கு பயனபடுத்துங்கள், மார்பக தோல் இலகுவாக இருப்பதால் அவற்றை சரியாக கையால முடியும். நீங்கள் அந்த பகுதியில் லேசான ஷேவிங் ஜெல் அல்லது கிரீம் பயன்படுத்தலாம். உங்கள் முடி வளரும் திசையில் ரேசரை மெதுவாக நகர்த்தவும். பின் சிறிது பருத்தி கொண்டு பகுதியை சுத்தம் செய்யவும்.

மார்பு முடியில் மஞ்சள் மற்றும் கடலை மாவைப் பயன்படுத்தி தடித்த பேஸ்ட்டைப் உருவாக்கி இயற்கையான முறையில் முடியை அகற்ற உதவும். பேஸ்ட்டை அந்த இடத்தில் தடவி மெதுவாக தேய்த்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
எலுமிச்சை மற்றும் தேனை ஒன்றாக கொதிக்க வைக்கும் போது கலவையானது மெழுகாக மாறும். அதன்பின் வீட்டில் தயாரிக்கப்பட்ட மெழுகு உங்கள் மார்புப் பகுதியில் தடவி பின்னர் அதை எதிர் திசையில் இழுக்கவும்.இந்த வழிகாட்டி உங்கள் மார்பகங்களில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்ற உதவும் என்று நம்புகிறோம்.
இந்த பதிவும் உதவலாம்: பெண்கள் காலையில் இந்த 3 காரியங்களை செய்தால் 45 வயது வரை கூட முதுமை வராது
எங்களின் இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தது என்று நம்புகிறேன். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரவும், லைக் செய்யவும். மேலும் இது போன்ற கட்டுரைகளை படிக்க எங்கள் வலைத்தளமான Harzindagi உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com