Migraine Headache Home Remedy: தலை சுற்றும் பிரச்சனையா? இந்த வீட்டு வைத்தியத்தை செய்து பாருங்க!

பலருக்கும் அடிக்கடி தலை சுற்றும் பிரச்சனை உள்ளது. இதனை வீட்டு வைத்தியத்தில் குணமாக்குவது எப்படி என்று பார்க்கலாம்.

 
migraine

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலருக்கும் தலைவலி என்பது ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. ஒரு சிலருக்கு தலைவலி ஏற்பட்டால் காபி குடிக்கும் பழக்கம் உள்ளது. அந்த காபியை குடித்த பிறகு தலை வலி பறந்து விட்டதாக உணர்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. தலைவலியின் போது சூடாக காபி குடித்தால் சற்று நேரத்திற்கு உங்கள் உடல் புத்துணர்ச்சியாக செயல்படும். இதனால் தலைவலியை நீங்கள் மறந்து விடுவீர்கள்.

வீட்டு வேலை செய்யும் பெண்கள், அலுவலகம் செல்லும் பெண்கள், கல்லூரியில் படிக்கும் பெண்கள் என்று எல்லாருக்கும் இந்த தலைவலி பிரச்சனை ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக ஒற்றை தலைவலி, மைக்ரேன் போன்ற பிரச்சனைகள் அதிகம் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்கு முதன்மை காரணம் அவர்களின் உணவு முறை பழக்கங்கள், சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் இருப்பது, போதுமான தூக்கம் இல்லாமல் இருப்பது, அதிக நேரம் செல்போன் அல்லது லேப்டாப் உபயோகிப்பது போன்றவை தான். மாத்திரை மருந்து ஏதும் இல்லாமல் வீட்டு வைத்தியத்தில் இந்த தலைவலி, தலைசுற்றல், மைக்ரேன் போன்ற பிரச்சனைகளை சரி செய்வது எப்படி என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

தலைசுற்றல் ஏற்பட காரணங்கள்:

severe migraine

சில நேரங்களில் நம் மூளைக்கு போதுமான அளவு இரத்தம் பாயாததால், மூளைக்கு ஆக்ஸிஜன் போதாது.அதே போல மூளையில் கட்டி அல்லது வீக்கம் இருந்தாலும் அடிக்கடி தலை சுற்றல் ஏற்படும். மேலும் குறைந்த இரத்த அழுத்தம், இரத்த சோகை, இதய பதற்றம், ஒற்றை தலைவலி போன்ற பிரச்சனைகளும் தலை சுற்றலை உண்டாக்கும். மேலும் வயிற்றுக் கோளாறு பிரச்சனை, பார்வை கோளாறு, நரம்புக் கோளாறுகள் இவற்றாலும் தலை சுற்றல் ஏற்படலாம். இன்னும் சிலருக்கு உடலில் பித்தம் அதிகமானால் தலைச்சுற்றல் ஏற்படலாம்.

தலைசுற்றலை குணமாக்க வீட்டு வைத்தியம்:

Almond soaked

7 அல்லது 8 பாதாம் பருப்பு எடுத்து அவற்றை 7 அல்லது 8 பரங்கி விதைகளுடன் சேர்த்து, அதோடு ஒரு ஸ்பூன் கசகசா, மூன்று டேபிள் ஸ்பூன் கோதுமை இவற்றுடன் கலந்து தண்ணீரில் ஒரு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். காலையில் பாதாம் பருப்புகளின் தோலை நீக்கி, எல்லாவற்றையும் மிக்சியில் சேர்த்து நன்றாக கூழாக அரைத்துக் கொள்ளவும். தனியாக 2 டேபிள் ஸ்பூன் நெய்யில் 1/2 டேபிள் ஸ்பூன் கிராம்பை போட்டு வறுக்கவும். இதனுடன் அரைத்து வாய்த்த பாதாம் கூழை சேர்த்து சிறிது பால் விட்டு காய்ச்சவும். இந்த கலவையை தேவையான அளவு சர்க்கரை சேர்த்து தினசரி சில நாட்களுக்கு குடித்து வந்தால் நாளடைவில் தலை சுற்றல் பிரச்சனை குணமாகும்.

அதே போல இஞ்சியை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி, பாத்திரத்தில் இட்டு வதக்கவும். நன்கு வதக்கிய பின் கொஞ்சம் தேனைச் சேர்த்து, வதக்கி கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, சிறிது காய்ந்தவுடன் இறக்கி வடிகட்டி வைக்கவும். இதனை தினமும் ஒரு கப் 2 அல்லது 3 வேளை குடித்து வந்தால் தலைச்சுற்றல் நிற்கும் என்று கூறப்படுகிறது.

Image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP