ஒரு சிலருக்கு தினமும் இரவு எவ்வளவு முயற்சி செய்தாலும் தூக்கம் வராமல் தவிப்பார்கள். புரண்டு புரண்டு படுத்தும் நள்ளிரவு வரை தூக்கம் வராத பல நாட்களை நீங்கள் கடந்து இருக்கலாம். அந்த வரிசையில் படுத்த உடனே நிம்மதியான தூக்கம் பெறுவதற்கு என்ன செய்யலாம் என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். இனிமே தூக்கம் வராத இரவுகளை நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. உடனடியாக நல்ல ஆழ்ந்த தூக்கத்தை பெறுவதற்கு சில குறிப்புகளை இங்கு பார்க்கலாம். இந்த குறிப்புகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பின்பற்றி பயனடையலாம்.
ஒரு மனிதனுக்கு சராசரியாக 8 முதல் 9 மணிநேர தூக்கம் அவசியம். இது உங்கள் உடலை ஆரோக்கியமாக பராமரிக்க பெரிதும் உதவும். உங்களால் சில நேரங்களில் தூக்கத்திற்காக ஒன்பது மணி நேரம் ஒதுக்க முடியாத நிலையில் குறைந்தது 7 மணி நேரமாவது தூங்க முயற்சி செய்ய வேண்டும். தினமும் போதுமான நேரம் தூங்கினால் நம் உடல் நோய்வாய்ப்படுவதை தவிர்க்க முடியும்.
தினசரி இரவு தூங்க செல்வதற்கு முன்பு சுத்தமான ஜில் தண்ணீரில் உங்கள் முகத்தை கழுவ வேண்டும். இது உங்களை நிதானமாக்கி உங்களுக்கு மன நிம்மதியை அளிக்க உதவுகிறது. இதற்குப் பின் நீங்கள் தூங்கு செல்லும்போது படுத்த உடனே நல்ல ஆழ்ந்த தூக்கம் வர வாய்ப்புகள் அதிகம்.
நம்மில் பலரும் தினசரி இரவு தூங்குவதற்கு முன்பு மொபைல் பயன்படுத்துவது வழக்கமாக கொண்டுள்ளோம். இந்த நிலையில் இரவு உணவிற்குப் பிறகு உங்கள் மொபைல் போன் பயன்படுத்துவது தூக்கம் வராமல் இருக்க ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. குறிப்பாக தூங்க செல்வதற்கு அரை மணி நேரம் முன்பு மொபைல் போன், லேப்டாப், டிவி போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மேலும் உங்கள் இரவு உணவிற்கு பிறகு 20 அல்லது 30 நிமிடம் நடைப்பயிற்சி செய்யலாம் அல்லது உங்களுக்கு பிடித்த புத்தகங்களை படிக்கலாம். இது போன்ற ஆரோக்கிய பழக்கங்கள் உங்கள் மனதை அமைதிப்படுத்தி மன நிம்மதியுடன் நல்ல ஆழ்ந்த தூக்கத்தை பெறுவதற்கு உதவி செய்யும்.
தினமும் இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன்பு உங்கள் கால்களுக்கு நல்ல ஓய்வு கொடுக்கும் வகையில் அவற்றை நேராக தளர்த்தி வைத்து படுக்க வேண்டும். இதற்குப் பிறகு நீங்கள் தூங்க முயற்சி செய்ய வேண்டும். உங்கள் கால்களுக்கு தேவையான ஓய்வு கொடுத்தாலே போதும் உடனடியாக சிறிது நேரத்திலேயே நல்ல ஆழ்ந்த தூக்கம் வரும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஒரு சிலர் இரவு படுக்கைக்கு சென்ற பிறகு தேவையில்லாத மற்ற விஷயங்களை பற்றி அதிகமாக யோசிப்பார்கள். பொதுவாகவே படுக்கைக்கு சென்ற பிறகு அதிக நேரம் யோசித்தால் தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். நம்மில் பலருக்கும் இது போன்ற பழக்கம் இருக்கும். ஆனால் அதை உடனடியாக மாற்றிக் கொள்வது நல்லது. தினமும் இரவு படுக்கையில் எதைப்பற்றியும் யோசிக்காமல் நேர்மறை எண்ணங்களுடன் தூங்க செல்ல வேண்டும். இது உங்களை கவலைகளை மறந்து நல்ல ஆழ்ந்த தூக்கத்தை பெறுவதற்கு பெரிதும் உதவி செய்கிறது.
இந்த நிலையில் இது போன்ற ஆரோக்கிய குறிப்புகளை பின்பற்ற ஒரு சிலருக்கு ஆரம்பத்தில் சிரமமாக இருக்கலாம். ஆனால் ஒரு சில நாட்களில் இதுவே உங்கள் வழக்கமாக மாறிவிடும். எந்த ஒரு விஷயத்தையும் தொடர்ந்து 21 நாட்கள் செய்தால் போதும் அதுவே நம் வழக்கமாக மாறிவிடும் என்று கூறுவது போல உங்கள் தூக்கத்தை பாதிக்கும் மற்ற விஷயங்களை தவிர்த்து இந்த ஆரோக்கிய குறிப்புகளை 21 நாட்கள் பின்பற்றி பாருங்கள் நீங்களும் இரவு படுத்த உடனே தூங்கி விடலாம்.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com