உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் உணவில் கவனம் செலுத்துவது போலவே எடுத்து கொள்ளும் ஸ்நாக்ஸிலும் அதிக அக்கறையுடன் இருக்க வேண்டும். டயட்டில் இருந்து கொண்டு சாட் உணவுகளை எடுத்து கொண்டால் எந்த ரிசலட்டும் கிடைக்காது. டயட்டில் இருக்கும் போது மாலை நேரத்தில் நிச்சயமாக பசி எடுக்கும். அப்போது டீ, காபி, பஜ்ஜி, வடை, பானிபூரி போன்ற ஸ்நாக்ஸ் வகைகளை எடுத்து கொள்வதற்கு பதில் ஆரோக்கியம் நிறைந்த ஸ்நாக்ஸ்களை மட்டுமே எடுத்து கொள்ளவும்.
அந்த வகையில் இந்த பதிவில் உடல் எடையை குறைக்க உதவும் ஸ்நாக்ஸ் வகைகளை பற்றி பார்க்க போகிறோம்.
வேகவைத்த கொண்டைக்கடலை உடலுக்கு மிக மிக நல்லது. கொண்டைக்கடலை சாட்டில் புரதம் நிறைந்துள்ளது, இது எடை இழப்புக்கு ஏற்றது.
மாலை நேரத்தில் சக்கரவள்ளி கிழங்கை வேக வைத்து சாப்பிட்டால் உடல் எடையை எளிதில் குறைக்கலாம்.
டீ, காபி குடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் க்ரீன் டீ எடுத்து கொள்ளலாம்.பெண்களுக்கு க்ரீன் டீ தரும் நன்மைகள் ஏராளம். அதனுடன் சேர்த்து உடல் எடையை குறைக்க க்ரீன் டீ உதவுகிறது.
பழங்கள் மற்றும் காய்கறிகளை நறுக்கி அதில் எலுமிச்சை சாறு பிழிந்து சாலட்டாக சாப்பிடலாம். இது எடையை குறைக்க உதவும்.
உடல் எடையை குறைக்க உதவும் விதைகளான, பூசணி விதை, ஆளி விதை, சூரிய காந்தி விதை ஆகியவற்றை வறுத்து சாப்பிடலாம். அல்லது வறுத்து பொடியாக்கியும் உட்கொள்ளலாம்.
உடல் எடையை குறைக்க மாலை நேரத்தில் சூப் குடிப்பது மிகவும் பயன் தரும். காய்கறி சூப்களை குடிக்கலாம்.
பயிர்களை ஈர துணியில் கட்டி வைத்து, முளைக்கட்டிய பயிர்களாக மாலை நேரத்தில் சாப்பிடலாம். உடல் எடை ஈஸியாக குறையும்.
வேர்க்கடலையில் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன. இதை வேக வைத்து மாலை நேரத்தில் சாப்பிடலாம்.
உடல் எடையை குறைக்க மாலை நேரத்தில் வேக வைத்த சோளம் சாப்பிடலாம். இது பசியை கட்டுப்படுத்தும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com