
தினமும் போதுமான சூரிய ஒளியைப் பெறுவது உங்கள் மனநிலை மற்றும் தூக்கத்தை மேம்படுத்துவதோடு சில நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. இலகுவான சருமம் கொண்டவர்கள் தினமும் பத்து முதல் பதினைந்து நிமிடங்களுக்கு சூரிய ஒளியில் நின்றால் போதுமானது.
எனினும் அதிகரித்த மெலனின் காரணமாக கருமையான சருமம் கொண்டவர்களுக்கு 25 முதல் 40 நிமிடங்கள் வரை சூரிய ஒளி தேவைப்படும். ஆனால் நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருந்தால் சரும பாதிப்பு மற்றும் சருமப் புற்றுநோய் ஏற்படும் உள்ளது. எனவே நீங்கள் வெளியில் இருக்கும் போது சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம்.
சூரிய ஒளியின் முக்கிய நன்மைகளில் ஒன்றாக வைட்டமின் டி-ஐ குறிப்பிடலாம். இது உங்கள் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சூரிய ஒளி உங்கள் சரும செல்களில் உள்ள கொழுப்பில் இருந்து வைட்டமின் டி உருவாக்க உடலுக்கு உதவுகிறது. வைட்டமின் டி சூரிய ஒளி வைட்டமின் என்றும் அழைக்கப்படுகிறது. வைட்டமின் டி உங்கள் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும்
வைட்டமின் டி எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. சூரிய ஒளி வைட்டமின் உங்கள் உடல் கால்சியத்தை எளிதில் உறிஞ்ச உதவுகிறது. இது வலுவான எலும்புகளுக்கு அவசியமாகும். மேலும் ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் ஆஸ்டியோபீனியா போன்ற நிலைமைகளைத் தடுக்க உதவுகிறது. எலும்புகள் ஆரோக்கியமாக இருப்பது எலும்பு முறிவுகளை தடுத்திடும்.
மேலும் படிங்க Boosting Bone Health : எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும் பயனுள்ள பயிற்சிகள்
வீட்டின் உட்புற சூழல்களில் பல்வேறு வகையான பாக்டீரியாக்களை கொண்ட தூசி இருக்கலாம். அதனால் ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை ஏற்படக்கூடும். எனவே சூரிய ஒளியானது வீட்டிற்குள் அதிகளவு கிடைத்தால் தூசியில் வாழும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படும்.
குறிப்பிட்ட ஒரு ஆய்வில் வீட்டிற்குள் சூரிய ஒளி வெளிப்பட்ட பிறகு ஆறு விழுக்காடு பாக்டீரியாக்கள் மட்டுமே உயிர் பிழைத்தன. மேலும் புற ஊதா கதிர்கள் வீட்டில் உள்ள தூசியில் வாழும் பாக்டீரியாக்களை அழிப்பதால் காற்றின் தரமும் மேம்படும்.
உடலில் உள்ள சர்க்காடியன் ரிதம் சூரியனின் ஒளி - இருண்ட சுழற்சிக்கு காரணமாக விளங்குகிறது. அதாவது இரவில் தூங்கவும் காலையில் எழுந்திருக்கவும் சர்க்காடியன் உதவுகிறது. எனவே உங்கள் தூக்க தரத்தை மேம்படுத்த சூரிய ஒளியில் நிற்கவும்.
உதாரணமாக மாலையில் தூங்குவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க காலையில் பிரகாசமான சூரிய ஒளியில் நிற்குமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். சூரிய ஒளியின் வெளிப்பாடு உங்கள் மெலடோனின் அளவை அதிகரிக்கிறது. மேலும் மெலடோனின் உங்கள் உடலின் சர்க்காடியனை ஒழுங்குபடுத்துவதிலும், இருட்டாக இருக்கும் போது தூங்க உதவுவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
போதுமான அளவு சூரிய ஒளியைப் பெறுவது மனநிலைக் கோளாறுகளை எதிர்த்துப் போராட உதவும். குறிப்பாக பருவகால பாதிப்புக் கோளான SAD என்பது ஒரு வகையான மனச்சோர்வு ஆகும். இது பொதுவாக இலையுதிர் மற்றும் குளிர்காலத்தில் சூரிய ஒளி குறைவாக இருக்கும் போது ஏற்படும்.
சூரிய ஒளியின் பற்றாக்குறை மூளையின் ஹைபோதாலமஸ் செயல்படும் விதத்தை பாதிக்கலாம் என்று கருதப்படுகிறது. போதுமான சூரிய ஒளி பெறாதது செரோடோனின் அளவைக் குறைக்கலாம். இது மனச்சோர்வுக்கு பங்களிக்கும். எனவே அதிக சூரிய ஒளியைப் பெறுவது உங்கள் செரோடோனின் அளவையும் உங்கள் மனநிலையையும் அதிகரிக்கும்.
மேலும் படிங்க Sunscreen Benefits : குளிர்காலத்திலும் சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்க! ஏன் தெரியுமா ?
உங்கள் சருமத்தின் நிறத்தைப் பொறுத்து சூரிய ஒளியில் 10 நிமிடங்களுக்கு நேரடியாக நிற்கலாம். உங்கள் சருமம் கருமையாக இருந்தால் அதன் பலனை அறுவடை செய்ய சூரிய ஒளியில் அதிக நேரம் எடுக்கும்.
காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை சூரிய வெளிச்சத்திற்கு உகந்த நேரம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இந்த நேரத்தில் நீங்கள் ஏராளமான புர ஊதா B கதிர்களைப் பெறுவீர்கள். இது உடலில் வைட்டமின் டி உருவாக்க அனுமதிக்கிறது. மேலும் புற ஊதா A கதிர்களால் தோல் புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்தையும் குறைக்கிறது.
இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் இணைந்திருங்கள்
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com