
கர்ப்ப காலம் மிகவும் அழகானது. குழந்தையை 10 மாதம் சுமப்பது சுமை அல்ல, பிறக்கப் போகும் குழந்தையை எதிர்பார்த்து நாட்களை கடத்துவது தான் மிகவும் கடினமானது. உங்கள் எதிர்பார்ப்புகள் புரிகிறது, ஆனால் இந்த 10 மாத்தத்தை ரசித்து வாழுங்கள். குழந்தையின் அசைவுகள், வளையோசை, விருந்து உபசரிப்பு, வளைகாப்பு என உங்களுக்கென கொடுக்கப்படும் சலுகைகளை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளுங்கள்!
கர்ப்பிணிகள் சந்திக்கும் முக்கிய பிரச்சனை இரும்புச்சத்து குறைபாடு. இதற்கு காலம் காலமாக பரிந்துரை செய்யப்படும் உணவுகளில் ஒன்று தான்" சுவரொட்டி ". சுவரொட்டி அல்லது ஆட்டின் மண்ணீரலில் உடல் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உங்கள் இரும்புச் சத்து குறைபாட்டை போக்க சுவரொட்டியை வாரத்திற்கு 1-2 முறை சமைத்து சாப்பிடலாம்.
இந்த பதிவும் உதவலாம்: 3 நாட்களில் 1 கிலோ எடையை குறைக்க வேண்டுமா, இதோ உங்களுக்கான 5 சூப்பர் டிப்ஸ்!

உடலில் போதுமான இரும்புச்சத்து இல்லாத காரணத்தினால் இரத்த சோகை ஏற்படுகிறது. உடல் உறுப்புகள் மற்றும் கருவில் வளரும் சிசுவுக்கு ஆக்சிஜன் மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்வதில் இரத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே கர்ப்பிணிகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்கவும், குழந்தையின் வளர்ச்சிக்கும் இரும்பு சத்து நிறைந்த சுவரொட்டியை எடுத்துக் கொள்ளலாம்.
புரதம் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு ஊட்டச்சத்து ஆகும். குழந்தையின் திசுக்கள், செல்கள் மற்றும் உறுப்புகளின் நல்ல வளர்ச்சிக்கு புரதம் தேவைப்படுகிறது. இது தாய்ப்பால் கொடுப்பதற்கு ஏற்ப மார்பக திசுக்களை உருவாக்கவும், கருப்பை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
சுவரொட்டியில் வைட்டமின் B9 மற்றும் B2 அதிக அளவில் உள்ளன. போலிக் ஆசிட் என்று அறியப்படும் வைட்டமின் B9 ஆனது இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுகிறது. இது குழந்தையின் மூளை மற்றும் முதுகுத்தண்டில் ஏற்படும் பிறவி குறைபாடுகளை தடுக்கிறது. மேலும் ஆரோக்கியமான நரம்பு மண்டலத்தை உருவாக்குவதில் வைட்டமின் B12 முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: ஆயுர்வேத மூலிகையான சீந்திலை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com