ஹலீம் விதைகள் தற்போது மக்களிடையே பிரபலமாக இருக்கும் விதை ஆகும். ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகரும் இந்த விதைகள் நமக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த விதைகளில் வைட்டமின்கள் A, C, E, ஃபோலேட், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீசியம் மற்றும் புரதம் ஆகியவற்றால் நிறைந்துள்ளது. இது அனைத்து முக்கியமான அமினோ அமிலங்களையும் கொண்டுள்ளது. இதனை சாலியா விதை என்றும் சொல்வார்கள்.
பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறுவது, "ஆயுர்வேத மருத்துவத்தில் பிரசவத்திற்குப் பின் உடலை பழைய நிலைக்கு மீட்க உதவும் உணவுகளில் ஹலீம் விதைகளும் ஒன்றாக கூறபடுகிறது" என்று பகிர்ந்துள்ளார். மேலும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறுவது, "அனைத்து பெண்களும் இதை உட்கொள்ளலாம், குறிப்பாக பூப்படைய தயார் நிலையில் இருக்கும் பெண் குழந்தைகள், குழந்தைக்கு பால் கொடுக்கும் இளம் தாய்மார்கள், முடி உதிர்தல், தோல் அரிப்பு, அலோபீசியா ஆகியவற்றை எதிர்கொள்ளும் பெண்கள் என்று அனைவரும் இதை உட்கொள்ளலாம். இது மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது.
இதுவும் உதவலாம் :உடல் எடையை குறைக்க நெல்லிக்காய் சாறு எவ்வாறு உதவுகிறது தெரியுமா?
அஜீரணம் மற்றும் மலச்சிக்கலுக்கும் , இந்த விதைகள் ஒரு சிறந்த தீர்வாகஇருக்கிறது. அவற்றை தினசரி தவறாமல் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும், ஏனெனில் அவை செரிமான மண்டலத்தை மிகச்சிறப்பாக சுத்தம் செய்ய உதவுகின்றன. செரிமானமின்மைக்கு நிவாரணம் அளிக்கிறது, ஆனால் அதிக அளவு சாப்பிடக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனால் வயிறு உபாதை ஏற்பட வாய்ப்புள்ளது.
ஹலீம் விதைகளில் ஈஸ்ட்ரோஜனைப் போன்ற அதிக அளவு பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. இந்த ஹார்மோன் பெண் உடலுக்கு மிகவும் முக்கியமானது. மாதவிடாய் சுழற்சியை சீராக்க உதவும் பொருட்கள் இந்த விதைகளில் உள்ளன.
முக்கியமாக நீங்கள் இரும்புச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த விதைகள் உங்களுக்கு மிகவும் நல்ல ஊட்டச்சத்து நிறைந்த பொருளாகும். தினசரி உடலுக்கு தேவைப்படும் இரும்பு சத்தில் 60% இது பூர்த்தி செய்கிறது. உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு, தொடர்ந்து 2 மாதங்களுக்கு இதை உட்கொள்ள, உங்களுக்கு இரத்த சோகை நோய் சரியாகும் மற்றும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
பாலூட்டும் தாய்மார்களுக்கு ஹலீம் விதைகள் சிறந்த நற்பலன்களை தருகிறது. ஏனெனில் அதில் கேலக்டாகோக் என்ற பொருள் உள்ளது. இது தாய்ப்பாலின் உற்பத்தியை மேம்படுத்துகிறது. ஆலிவ் விதைகள் பெரும்பாலும் வெல்லம், நெய், ரவை, ஹலீம் விதைகள், பதப்படுத்தப்பட்ட தேங்காய் மற்றும் பொடித்த பாதாம் ஆகியவற்றால் செய்யப்பட்ட லட்டுகளாக செய்யப்பட்டு இளம் தாய்மார்களுக்கு வழங்கப்படுகின்றன.
இதுவும் உதவலாம் :பெண்கள் வெறும் வயிற்றில் என்ன சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் தெரியுமா?
இந்த விதைகளில் தாவரம் தொடர்பான செயலில் உள்ள கலவைகள் நிறைந்துள்ளன. அவை நுரையீரலின் செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகின்றன. இவற்றை தினசரி உட்கொள்வது ஆஸ்துமாவின் அறிகுறிகளைப் போக்க உதவும், ஆனால் அதற்கு முன்பு உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம். இருமலுக்கு இந்த விதைகளை மென்று சாப்பிடுவது நல்லது என்று பெரும்பாலானோர் பரிந்துரைக்கிறார்கள்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit : Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com