மிகச் சிறிய அளவிலான இலந்தை பழத்தில் ஆரஞ்சு பழத்தை விட அதிக வைட்டமின் சி உள்ளதென்றால் நம்ப முடிகிறதா ? ஆம். இலந்தை பழம் பொடுகு தொல்லைக்கு தீர்வு தரும். குளிர்காலத்தில் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்கவும் உதவும். குழந்தைகள் நோயினால் பாதிக்கப்பட்டு சோர்வாக இருந்தால் இலந்தை பழம் கொடுங்கள். இலந்தை பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
இலந்தை பழம்
சிறிய அளவில் மென்று சாப்பிடக் கூடிய சுவை கொண்ட இலந்தை பழம் சிவப்பு அல்லது சீன டேட்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இதில் குறைவான கலோரிகளும், அதிகளவு நார்ச்சத்தும் உள்ளன. இலந்தை பழத்தில் ஃபிளாவனாய்டுகள், பாலிசாக்கரைடுகள் மற்றும் ட்ரைடெர்பெனிக் அமிலங்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளன.
தூக்கத்தின் தரம் மேம்படும்
இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்கள் மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் அவை தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும். மூளையின் செயல்பாட்டையும் இலந்தை பழம் அதிகரிக்கிறது. இலந்தை விதையில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை சோதித்த போது அவை நம் தூங்கும் நேரத்தை அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
இலந்தை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு
உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை இலந்தை பழம் தடுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. அதே போல இந்த குளிர்கால பழம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இலந்தையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. அவை புற்றுநோய் எதிர்ப்பு கொண்டது.
செரிமானத்தை மேம்படுத்தும் இலந்தை
இலந்தை பழத்தில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. இது கலோரி குறைவு என்பதால் எளிதில் ஜீரணம் ஆகிவிடும். மலச்சிக்கல் பிரச்னையையும் இலந்தை பழத்தின் நார்ச்சத்து தடுத்துவிடும்.
மேலும் படிங்கஉச்சி முதல் பாதம் வரை; பதிமுக தண்ணீர் குடிங்க ஆரோக்கியம் பெறுங்க
இலந்தை பழத்தின் இதர நன்மைகள்
- இலந்தையில் குறைவான உப்பும், அதிகளவு பொட்டாசியமும் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவும்.
- நரம்பு மண்டலம் மற்றும் மூளையின் செயல்பாடுகளை சீராக்கி பதட்டத்தை குறைக்கும்.
- இலந்தையில் உள்ள இரும்புச் சத்து மற்றும் பாஸ்பரஸ் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும். மேலும் கால்சியம் உள்ளடக்கம் எலும்புகளின் வலுவை அதிகரிக்கும்.
- இலந்தையில் உள்ள வைட்டமின் ஏ, பி மற்றும் சி உடலில் காயங்கள் ஏற்பட்டால் அவற்றை விரைவில் குணப்படுத்தும் தன்மை கொண்டது.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation