உடல்நலம் பாதிக்கப்பட்டால் ஓம தண்ணீர் குடிங்க; பல்வேறு பிரச்னைகளை உடனே தீர்க்கலாம்

அடிக்கடி வயிறு வலி அல்லது வயிறு உப்புசம் பிரச்னையா ? இயற்கையான முறையில் எடையை குறைக்க விருப்பமா ? இவை அனைத்திற்கும் ஒரு டம்ளர் ஓம தண்ணீர் தீர்வு தரும். இந்த பதிவில் ஓம தண்ணீர் குடித்தால் உடலுக்கு கிடைக்கும் எண்ணற்ற நன்மைகளை பார்க்கலாம்.
image

கிச்சனில் உள்ள மேஜிக் பொருளான ஓமம் உங்களுடைய உடல்நலப் பிரச்னைகள் அனைத்தையும் தீர்க்கும். மருத்துவப் பண்புகளை கொண்ட இந்த சிறிய பொருள் சமையலறையில் கிடைக்கும். இதன் காரணமாகவே உடல்நலப் பாதிப்பின் போது பெரியவர்கள் ஒரு டம்ளர் ஓம தண்ணீர் குடிக்க அறிவுறுத்துவார்கள். ஆயுர்வேத மருத்துவத்தில் ஓம தண்ணீரை நம்பகத்தன்மையுடன் பயன்படுத்தி வந்தனர். உடல்நலத்திற்கு ஓம தண்ணீர் அளிக்கும் பல்வேறு நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ajwain water

ஓம தண்ணீர் நன்மைகள்

நோய் தொற்றுகளுக்கு எதிர்ப்பு

நுண்ணுயிர் எதிர்ப்பு, ஒட்டுண்ணி எதிர்ப்பு பண்புகள் ஓம தண்ணீரில் உள்ளது. நோய் தொற்றுகளிடம் இருந்து உங்களை காப்பாற்றும். அடிக்கடி தொற்றுகளால் பாதிக்கப்பட்டால் வாரத்திற்கு 2-3 முறை ஓம தண்ணீர் குடிக்கவும்.

செரிமானத்திற்கு நல்லது

வாயு தொல்லை பிரச்னைக்கு ஓம தண்ணீர் குடிப்பது தீர்வாக அமையும். வாயு தொல்லையை தீர்த்து செரிமானத்தை மேம்படுத்தும். விரைவாகவும் குணமடையலாம்.

மூச்சு பிரச்னைகளுக்கு தீர்வு

அதிகாலத்தில் இருந்தே ஓம தண்ணீர் குடித்தால் நுரையீரல் சுத்தப்படுத்தப்பட்டு சுவாச கோளாறு ஏற்படாது. ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஓம தண்ணீர் மிக மிக நல்லது.

உடல் எடையைக் குறைக்கும்

ஓம தண்ணீர் குடித்தால் எடையைக் கூடுதலாக குறைக்கலாம். ஓம தண்ணீர் குடிப்பது சிரமமான காரியம் அல்ல. ஓம தண்ணீர் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும், உடல் எடையை ஆரோக்கியமாக நிர்வகிக்க உதவும்.

மாதவிடாய் வலிக்கு விடுதலை

ஓம தண்ணீரின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலியை குறைக்கும். இது ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம்.

சளி, இருமலுக்கு தீர்வு

ஓம தண்ணீர் குடித்தால் மூக்கடைப்பு சரியாகும், உடலில் இருந்து சளி எளிதில் வெளியேற்றப்படும். சளி, இருமல், நெஞ்சு எரிச்சல் பிரச்னைக்கு ஓம தண்ணீர் கட்டாயம் குடிக்கவும்.

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க, பல் வலி நீங்க, இதய ஆரோக்கியத்திற்கு ஓம தண்ணீர் குடியுங்கள்.

மேலும் படிங்கஇலந்தை பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

ஓம தண்ணீர் தயாரிப்பு

  • ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இரண்டு ஸ்பூன் ஓமம் போட்டு மிதமான தீயில் 8-10 நிமிடங்களுக்கு கொதிக்க விடுங்கள்.
  • கொதி வந்த பிறகு தண்ணீரை வடிகட்டி சூடு குறைந்தவுடன் குடியுங்கள்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP