வயது, பிரசவம், ஹார்மோன் பிரச்சனைகள் போன்ற காரணங்களால் உங்கள் உடல் எடை கூறி விட்டதா? நீங்கள் விரும்பினால் உங்கள் எடையை குறைத்து சரியான வரம்புக்குள் கொண்டு வர முடியும். இதற்கு நிறைய செலவு செய்து ஜிம் செல்லவேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய வாழ்க்கை முறையில் ஒரு சில எளிய மாற்றங்களை செய்தால் போதும்.
உங்களுக்கு காலையில் எழுந்தவுடன் டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் இருந்தால் அதை மாற்றிக் கொள்ளுங்கள். இதற்கு பதிலாக சீரகம் இஞ்சி டீ குடிக்க தொடங்கலாம். இந்த வழக்கத்தை பின்பற்றிய ஒரு மாதத்திலேயே உங்களால் நல்ல விளைவுகளை காண முடியும்.
இந்த பதிவும் உதவலாம்: ஒல்லியாக ஆசையா? அக்ரூட் பருப்புகளை இப்படி சாப்பிடுங்க!
சீரகத்தில் பொட்டாசியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் C, E, K, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. உங்களுடைய அன்றாட உணவில் சீரகத்தை சேர்த்துக் கொண்டால் ஜீரணிக்கும் திறன் மேம்படும். இதனால் மலச்சிக்கல் போன்ற வயிறு சார்ந்த பிரச்சனைகளையும் தவிர்க்கலாம். இதில் உள்ள பண்புகள் உடலில் உள்ள நச்சுக்களை சுத்தப்படுத்த உதவுகிறது. சீரகம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவுவதாக ஆய்வுகள் மூலமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இஞ்சி செரிமான மண்டலத்தின் செயல்முறையை மேம்படுத்தும். காலையில் எழுந்தவுடன் இஞ்சி தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள நீர் தேக்கத்தை குறைக்கலாம். இது கபா மற்றும் வாத தோஷத்தை சீராக்கி செரிமானத்திற்கும் உதவுகிறது. தேவையற்ற கொழுப்பை குறைக்கவும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது பசி உணர்வை குறைத்து உடலில் உள்ள கூடுதல் கொழுப்பை எரிக்க உதவுகிறது.
இத்தகைய பண்புகள் உடைய இஞ்சி மற்றும் சீரக கலவையை காலையில் எடுத்துக் கொள்ளும் பொழுது வளர்ச்சிதை மாற்றம் அதிகரித்து, அதிகப்படியான கலோரிகளை குறைக்க முடியும். இதை குடித்து வந்தால் எடை குறைவதோடு மட்டுமின்றி உடலில் உள்ள கழிவுகளும் வெளியேறும்.
இந்த பதிவும் உதவலாம்: எந்த நிற வாழைப்பழத்தில் அதிக சத்துக்கள் உள்ளது தெரியுமா? இனி பலன் தெரிந்து சாப்பிடுங்க!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com