நவீன வாழ்க்கையின் அவசரத்தில் நமது உணவு பழக்கமும், உணவு சாப்பிடும் நேரமும் முற்றிலும் மாறிவிட்டது. இதன் விளைவாக நிலையற்ற மற்றும் சில நேரங்களில் குழப்பமான மனநிலைக்கு ஆளாகிறோம். நீங்கள் தினமும் உணவு உட்கொள்ளும் நேரம் உடல் ஆரோக்கியத்தில் எவ்வளவு முக்கியமானதாக இருக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? காலப்போக்கில் உணவிற்கான நேரம் இதய ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
சாதாரண வளர்சிதை மாற்றம் மற்றும் இருதய ஆரோக்கியத்தை பராமரிக்க காலை உணவின் முக்கியத்துவத்தை பல ஆராய்ச்சிகள் எடுத்துக்காட்டுகின்றன. அதே போல இரவு நேர உணவு தமனிகள், உடல் பருமன், அசாதாரண லிப்பிட் மற்றும் பெண்களில் வளர்சிதை மாற்ற நோய் ஆகியவற்றுடன் தொடர்புடையது.
கார்டியோமெடபாலிக் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஒரு சாத்தியமான முறையானது நேர-கட்டுப்படுத்தப்பட்ட உணவு (TRE) ஆகும். இரவு நேர உண்ணாவிரதத்தை 12 மணி நேரத்திற்கும் மேலாக நீட்டிப்பது உடல் எடை, இரத்த அழுத்தம் மற்றும் மனிதர்களில் வீக்கம் குறைவதைக் காட்டுகிறது. இரவு நேர உண்ணாவிரத காலம் CVD ( இதய குழலிய நோய் ) அபாயத்தை நேரடியாகவே பாதிக்கிறது.
மேலும் படிங்க 7 Best New Year Resolutions : மகிழ்ச்சிகரமான வாழ்விற்கு டாப் 7 புத்தாண்டு தீர்மானங்கள்
கார்டியோமெடபாலிக் ஆரோக்கியமானது ஆரம்பகால நேர - கட்டுப்படுத்தப்பட்ட உணவை உண்பதன் மூலம் செழிக்கிறது. காலை உணவுகள் மற்றும் நீண்ட இரவு நேர உண்ணாவிரம் டைப் 2 நீரிழிவு நோயின் குறைந்த அபாயத்துடன் இணைக்கிறது. சீக்கிரமாக சாப்பிட்டு முடித்தால் அது வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது.
NutriNet-Sante ஆய்வின் தரவுபடி ஒரு லட்சம் பெரியவர்கள் உணவு உட்கொள்ளும் நேரத்தை கணக்கிட்டு பார்த்த போது இளம் வயதுடையவர்கள், புகைப்பிடிப்பவர்கள் மற்றும் தாமதமாக உணவு உட்கொண்டவர்களுக்கு இதய நோய் ஆபத்து அதிகம் இருக்கிறது என தெரியவந்தது. ஏழு வருட விரிவான ஆய்வில் தாமதமாக உணவு உட்கொள்ளும் நபர்களுக்கும் CVD ஆபத்துக்கும் இடையே அதிக தொடர்பு இருப்பதை உறுதிப்படுத்தியது.
உணவு நேரத்தின் முக்கியத்துவத்தை இந்த NutriNet-Sante ஆய்வு பெரிதும் உணர்த்துகிறது. குறிப்பாக இரவு 9 மணிக்குப் பிறகு சாப்பிடுவது CVD ஆபத்தை 13 விழுக்காடு அதிகரிக்கிறது.
மேலும் படிங்க Alcoholism : சரக்கு அடிக்காதீங்க பாஸ்! ஆபத்து ரொம்ப அதிகம்
அதே போல செரிப்ரோவாஸ்குலர் நோய் (பெருமூளை) அபாயம் 8% அதிகரிக்கிறது. இரவு நேர உணவின் ஒவ்வொரு மணிநேர தாமதத்திலும், இரவு 9 மணிக்குப் பிறகு செரிப்ரோவாஸ்குலர் நோய் அபாயம் 28 விழுக்காடாக பெரும் உச்சத்தை அடைகிறது. ஆச்சரியம் அளிக்கும் வகையில் இரவு நேர உண்ணாவிரதம் பெருமூளை நோய் அபாயத்தில் ஏழு விடுக்காடு குறைத்திருக்கிறது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com