கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையில் நிகழக்கூடிய அற்புதமான தருணம். ஆனாலும் கர்ப்ப காலமான 9 மாத காலத்தை எதிர்கொள்வது என்பது பெண்களுக்கு மிகவும் சவாலான ஒன்றாகும். ஹார்மோன் மாற்றங்கள், உணவு முறையில் மாற்றம், முறையான தூக்கமின்மை என அவர்களின் வாழ்க்கையில் நிகழக்கூடிய அடிப்படை பழக்க வழக்கங்கள் அனைத்துமே முற்றிலுமே மாறிவிடும். இதோடு பல நேரங்களில் இந்த மாற்றங்களை அனுபவிப்பதே கர்ப்பிணிப் பெண்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தும். மனதளவில் நிகழக்கூடிய மாற்றங்கள் அனைத்தும் கோபத்தையும் ஏற்படுத்தும்.
கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய மன உளைச்சல், ஹைப்பர் டென்சன் கர்ப்பிணிகளை மட்டுமல்ல, கருவில் இருக்கும் குழந்தைகளையும் வெகுவாக பாதிக்கும். குறிப்பாக தாய்மார்களுக்கு ஏற்படும் உயர் இரத்த அழுத்தம் கருவில் உள்ள குழந்தைகளின் மூளை செயல்திறனைப் பாதிக்கும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். மேலும் நல்ல முறையில் பிரசவம் மற்றும் ஆரோக்கியமான முறையில் குழந்தைகளைப் பெற வேண்டும் என்றால், கர்ப்பிணிகளின் ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத்தைக் கண்காணிப்பது அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். இல்லையென்றால் பெரும் சிக்கல்களை அனுபவிக்க நேரிடும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும் படிங்க: தினமும் மன அழுத்தம் பாடாய்ப்படுத்துகிறதா? நீங்கள் செய்ய வேண்டியது இது தான்!
மேலும் படிங்க: மாதவிடாய் காலத்தில் அதீத வயிற்று வலியா? அப்ப நீங்கள் செய்ய வேண்டியது?
கர்ப்ப காலத்தில் அடிக்கடி மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும் என்பதால், வீடுகளிலேயே உயர் இரத்த அழுத்தத்தைக் கண்காணிக்கும் டிஜிட்டல் மானிட்டர்களைப் பயன்படுத்தவும். உங்களது உடலில் எப்போது மாற்றங்கள் ஏற்பட்டாலும் ரத்த அழுத்தத்தைக் கண்காணித்துக் கொள்வதால் பெரும் பாதிப்பிலிருந்து குழந்தையையும், சேயையும் காப்பாற்றிக்கொள்ள முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
Image Credit:Google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com