
மோசமான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு பழக்க வழக்கங்களால் பல்வேறு உடல் நல பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இதில் தைராய்டும் அடங்கும். ஆண்களை விட பெண்களே தைராய்டு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
உடலில் முக்கிய சுரப்பியான தைராய்டு வளர்ச்சிதை மாற்றம் மற்றும் இதர உடல் செயல்பாடுகளுக்கு உதவுகிறது. தைராய்டு நோயால் பாதிக்கப்படும் பொழுது சோர்வு, முடி உதிர்வு, ஒழுங்கற்ற மாதவிடாய், பதட்டம் போன்ற அறிகுறிகள் தென்படலாம். ஒரு சில உணவுகளை உங்கள் அன்றாட உணவு முறையில் சேர்த்துக் கொள்வதன் மூலம் தைராய்டை கட்டுப்படுத்தலாம். இது பற்றிய தகவல்களை ஆயுர்வேத நிபுணரான டாக்டர் சீதாலி அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: உடல் சூட்டை தணிக்க இந்த 3 தண்ணீரை முயற்சி செய்யவும்!
ஒரு சில உணவுகள் கழுத்தில் உள்ள தைராய்டு ஹார்மோன்களை செயல்படுத்துகிறது. இந்த 3 உணவுகளும் அனைத்து வகையான தைராய்டு ஏற்றத்தாழ்வுகளான ஹைப்போ, ஹைப்பர் மற்றும் ஆட்டோ இம்யூன் நிலைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும்.

பூசணி விதைகளில் துத்தநாகம் நிறைந்துள்ளது. இது வைட்டமின், தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. மேலும் தைராய்டு அளவுகளை சமநிலைப்படுத்த உதவும்.
தினம் ஒரு டீஸ்பூன் பூசணி விதையை சாப்பிடுங்கள்.

ஆரஞ்சை விட எட்டு மடங்கும், மாதுளை பழங்களை விட 17 மடங்கும் வைட்டமின் C நெல்லிக்காயில் உள்ளது. தலைமுடியின் ஆரோக்கியம் முதல் தைராய்டு அளவுகளை கட்டுக்குள் வைப்பது வரை இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
நெல்லிக்காயில் துத்தநாகத்துடன் செலினியமும் உள்ளது. இவ்விரண்டும் தைராய்டு சுரப்பிகள் சீராக செயல்பட மிகவும் அத்தியாவசியமானவை. மேலும் நெல்லிக்காயில் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. தைராய்டு அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்க நெல்லிக்காய் சாப்பிடலாம்.
இரண்டு டீஸ்பூன் நெல்லிக்காய் சாறை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து காலை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் குடிக்கவும்.

பச்சை பயிரில் புரதம் ஆன்டி ஆக்ஸிடன்ட் கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளன. மேலும் இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து தைராய்டு நோயால் ஏற்படும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்.
உடலில் ஏற்படும் அயோடின் பற்றாக்குறையை போக்கவும் பச்சைப்பயிறு சாப்பிடலாம். எளிதில் ஜீரணமாக கூடிய இந்த பயறு வகை உங்கள் வயிற்றுக்கு உகந்தது.
உங்கள் அன்றாட உணவில் பச்சை பயிரை தோசை, சுண்டல் போன்ற உணவுகளாக செய்து சாப்பிடலாம்.
தைராய்டு அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்க இந்த மூன்று உணவுகளையும் உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: எள்ளுடன் வெல்லம் சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com