ரவையில் இருந்து தயாரிக்கப்படும் உணவு ஒருபுறம் மிகவும் சுவையாகத் இருந்தாலும், மற்றொரு புறம் அது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். சிலர் காலை உணவுகளில் மட்டும் அல்ல இனிப்பு வகைகளில் கூட இதை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
கோதுமையில் ஆரோக்கியமான கார்போஹைட்ரேட் உள்ளது, இது உடலின் சக்தியை அதிகரிக்க வல்லது. ரவை கோதுமையிலிருந்து தயாரிக்கப்படுவதால் இது உடலின் சத்தியை அதிகரிக்க உதவுகிறது. அதனால் ரவையை கட்டாயமாக உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
இதுவும் உதவலாம்:உடல் எடையை குறைக்க உதவும் 1 மாத டயட் பிளான்
ரவையில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது, இதனால் உடலில் அதன் குறைபாட்டைத் தடுக்கும். இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது, அது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே, உங்களுக்கு இரத்த சோகை பிரச்சனை இருந்தால், ரவையால் செய்யப்பட்ட உணவு வகைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ரவையில் கால்சியம் அதிகம் உள்ளது. எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த கால்சியம் அவசியம் தேவைப்படும். ஒரு ஆராய்ச்சியின் படி, 100 கிராம் ப்ளீச் செய்யாத ரவை மாவில் 17 மில்லிகிராம் கால்சியம் உள்ளது.
ரவை ஆரோக்கியமான நரம்பு மண்டலத்தை பராமரிக்கவும் உதவுகிறது. இதில் மெக்னீசியம், ஜிங்க் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
இதுவும் உதவலாம்:மலச்சிக்கல் தீர சோம்பை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?
ரவை கோதுமையிலிருந்து தயாரிக்கப்படுகிறது மற்றும் கோதுமையை விட ஆரோக்கியமானது. உடல் எடையை குறைக்க இது மிகவும் நல்லது. இதன் சிறந்த அம்சம் என்னவென்றால், அதிலிருந்து செய்யப்படும் உணவுகள் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். ரவையை உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் எடையை குறைக்கலாம். ரவையில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. இது நீண்ட நேரம் வயிறை நிறைவாக வைத்து இருக்கும். இது ஆரோக்கியமற்ற உணவு அல்லது அதிகப்படியான உணவை உண்ணுவதைத் தடுக்கிறது. இதன் காரணமாக எடை கட்டுப்படுத்தப்படுகிறது. ரவையில் கொலஸ்ட்ரால் பூஜ்ஜியம் அளவே இருப்பதால் உடல் எடை அதிகரிப்பதை தடுக்கிறது. ரவையில் இருந்து தயாரிக்கப்படும் இட்லி போல, தினமும் ரவையை ஏதாவது ஒரு வடிவில் சமைத்து உட்கொள்ளலாம்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image source: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com