herzindagi
gut facebook

Unhealthy Gut: 7 அறிகுறிகளை வைத்து குடலின் ஆரோக்கியமற்ற தன்மையை கண்டுப்பிடிக்கலாம் தெரியுமா?

குடலின் ஆரோக்கியம் மோசமடையும் போது உடலில் சில அறிகுறிகள் தோன்றத் தொடங்குகின்றன, அவை சரியான நேரத்தில் அடையாளம் காணப்பட வேண்டும்.
Editorial
Updated:- 2023-07-06, 23:07 IST

மோசமான செரிமானம் பல நோய்களுக்கு மூல காரணமாக இருக்கலாம். நமது செரிமானம் சரியாக இல்லாதபோது பல நோய்கள் உடலைத் தாக்க ஆரம்பிக்கும். அது நோய் எதிர்ப்புச் சக்தியையும் பாதிக்கிறது. ஆரோக்கியமாக இருக்க, உணவை சரியாக ஜீரணிப்பதும், உணவில் இருந்து முழு ஆற்றலைப் பெறுவதும், உடலில் இருந்து நச்சுகள் வெளியேறுவதும் மிகவும் முக்கியம். நமது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க பல உறுப்புகள் இணைந்து செயல்படுகின்றன. இதில் குடல் முக்கிய பங்கு வகிக்கிறது. குடல்கள் நம் உடலில் உள்ள உணவை ஜீரணிக்கும் வேலையை மட்டும் செய்யாமல் உடலில் உள்ள ஆரோக்கியமற்ற நச்சுப் பொருட்களையும் வெளியேற்றுகிறது.

குடல்கள் சரியாக வேலை செய்யாதபோது அதன் அறிகுறிகள் நம் உடலில் தெளிவாகத் தெரியும். இந்த அறிகுறிகளை சரியான நேரத்தில் அடையாளம் காண்பது மிகவும் முக்கியம். இதனுடன் குடல் ஆரோக்கியத்திற்காக சில பழக்கவழக்கங்களிலிருந்தும் விலகி இருக்க வேண்டும். இது குறித்த தகவல்களை உணவு நிபுணர் மன்பிரீத் நமக்கு அளித்து வருகிறார். டயட்டீஷியன் மன்ப்ரீத் டெல்லி பல்கலைக்கழகத்தில் ஊட்டச்சத்து பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். அவர் ஒரு ஹார்மோன் மற்றும் குடல் ஆரோக்கிய பயிற்சியாளர்.

 

இந்த பதிவும் உதவலாம்: இந்த 5 பெரிய காரணங்கள் மலச்சிக்கல் பிரச்சனைக்கு பின்னால் இருக்கலாம்

மோசமான குடல் ஆரோக்கியத்தின் அறிகுறிகள்

gut  problem

  • அதிக சர்க்கரை பசி இருந்தால் அது உங்கள் குடல் ஆரோக்கியம் மோசமாகி வருவதைக் குறிக்கும்.

 

  • பகல் முழுவதும் வேலை செய்து மாலையிலோ அல்லது இரவிலோ களைப்பு ஏற்படுவது சகஜம். ஆனால் காலையில் எழுந்தவுடன் சோர்வாக உணர்ந்தால், நாள் முழுவதும் சோர்வாகவும், பலவீனமாகவும் உணர்ந்தால், கண்டிப்பாக குடலில் ஏதாவது பிரச்சனை இருக்கும். 

 

  • மோசமான குடல் ஆரோக்கியம் மாதவிடாய் அல்லது PMS போது நிறைய அசௌகரியங்களுக்குப் பின்னால் இருக்கலாம். அதே நேரத்தில் மாதவிடாய் ஒழுங்கற்றதாக இருப்பதும் குடல் ஆரோக்கியத்தின் மோசமான அறிகுறியாகும்.

 

  • நோய்களால் அடிக்கடி சூழப்பட்டிருந்தால் இதற்குப் பின்னால் குடல் ஆரோக்கியத்தில் பிரச்சைகள் இருக்கலாம். 

 

  • உடல் ஆரோக்கியமாக இருக்க சரியான தூக்கமும் அவசியம். உங்களுக்கு நல்ல தூக்கம் வரவில்லையென்றாலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 

  • குடல் ஆரோக்கியம் மோசமாக இருப்பதன் அறிகுறிகளில் ஒன்று காலையில் வயிற்றை சரியாக சுத்தம் செய்ய முடியாது. 

 

  • உணவை விழுங்குவதில் சிரமம் இருந்தால் அல்லது சாப்பிட்ட பிறகு குமட்டல் ஏற்பட்டால் இதுவும் குடல் ஆரோக்கியம் குன்றியிருப்பதற்கான அறிகுறியாகும்.

 

இந்த பழக்கங்களில் இருந்து விலகி இருங்கள்

gut unhealthy food

 

  • குடல் ஆரோக்கியமாக இருக்க உணவை சரியாக மென்று சாப்பிட வேண்டும்.

 

  • உணவில் தயிரை சேர்த்துக் கொள்ளுங்கள். தயிர் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது.

 

  • வறுத்த மற்றும் காரமான உணவுகளில் இருந்து விலகி இருங்கள்.

 

  • சமநிலை உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.

 

  • மன அழுத்தத்திலிருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள்.

 

இந்த பதிவும் உதவலாம்: மலச்சிக்கலை விரட்டிட காலையில் எழுந்தவுடன் இதை செய்யுங்கள்!

உங்களுக்கு ஏதேனும் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால், கட்டுரையின் கீழே உள்ள கருத்துப் பெட்டியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். எங்கள் கட்டுரைகள் மூலம் உங்கள் சிக்கலை தீர்க்க முயற்சிப்போம்.

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளை படிக்க ஹர்சிந்தகியுடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com