விக்கல் ஏன் ஏற்படுகிறது? காரணம் மற்றும் வீட்டு வைத்திய முறைகள்!

 குடல் பிரச்சனைகள், மாரடைப்பு, வீக்கம், நரம்பு மண்டல பாதிப்பு, வயிற்று வலி, சிறுநீரக பிரச்சனைகள் இருந்தாலும் மக்களுக்கு அதிகளவு விக்கல் வரக்கூடும்.

home remedy for hiccups'
home remedy for hiccups'

விக்கல் நம்மில் அனைவருக்கும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாகும். விக்கல் வந்தவுடன் உடனே தண்ணீர் குடித்தால் சரியாகிவிடும் என்பார்கள். ஆனாலும் ஒரு சிலருக்கு விக்கல் வருவது தொடர்ச்சியாக இருந்துக் கொண்டே இருக்கும். ஏன் விக்கல் வருகிறது? இதை நிறுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்த தகவல்களை இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

remedies for hiccups

விக்கல் வருவதற்கானக் காரணங்கள்:

நம்முடைய நெஞ்சுப்பகுதிக்கும், வயிற்றுக்கும் இடையிலான உதரவிதானம் என்ற பகுதி தானாகவே சுருங்க ஆரம்பிக்கும் போது விக்கல் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுவார்கள். இதோடு மட்டுமின்றி அவசர அவசரமான சாப்பிடுவது, உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் அருந்தாமல் இருப்பது போன்றவையும் விக்கல் ஏற்பட காரணங்களாக அமைகிறது. மேலும் காற்றின் வெப்பநிலை சில நேரங்களில் மாறுவதும் விக்கல் ஏற்படும். சில மணி நேரங்களுக்கு விக்கல் வந்தால் உடனே சரியாகிவிடும். ஒருவேளை ஒன்றிரண்டு நாள்களுக்கு மேல் விக்கல் நீடித்தால் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

இதோடு உணவில் அதிகளவு அமினோ அமிலம் சேரும் போது விக்கல் அதிகளவில் ஏற்படக்கூடும். இதெல்லாம் விக்கல் வருவதற்கான காரணங்கள். உடலில் சில உடல் நல பாதிப்புகள் இருந்தாலும் விக்கல் வரக்கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக இரைப்பை குடல் பிரச்சனைகள், மாரடைப்பு, வீக்கம், நரம்பு மண்டல பாதிப்பு, வயிற்று வலி, சிறுநீரக பிரச்சனைகள் இருந்தாலும் மக்களுக்கு அதிகளவு விக்கல் வரக்கூடும்.

விக்கலைத் தீர்க்கும் வீட்டு வைத்தியம்:

விக்கல் வந்தவுடனே நமது கைகள் தானாகவே தண்ணீரைத் தான் தேடும். ஒரு சிலருக்கு தண்ணீர் குடித்தவுடன் விக்கல் நின்றுவிடும். சிலருக்கு தொடர்ச்சியாக விக்கல் நீடித்தால் சில மூச்சுப் பயிற்சிகளை மேற்கொள்ளவும். விக்கல் வரக்கூடிய நேரத்தில், நன்றாக அமர்ந்துக் கொண்டு சில நிமிடங்களுக்கு மூச்சை உள்ளே இழுத்து அடக்க முயற்சி செய்யவும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மூச்சை வெளியே விடும் போது விக்கல் கொஞ்சம் கொஞ்சமாக குறையக்கூடும்.

மேலும் படிக்க:ஒவ்வொரு மாதமும் கடுமையான வலியுடன் மாதவிடாய் நாட்களை கழிக்கும் பெண்களுக்கு யோகா தீர்வை தருமா?

hiccupus treatment

விக்கல் வரும் சமயத்தில் சிறிதளவு வெள்ளை சர்க்கரை சாப்பிட்டால் விக்கல் தானாகவே நின்றுவிடும். மேலும் காற்றின் பற்றாக்குறையும் விக்கல் வருவதற்கு ஒரு காரணமாக அமையும் என்பதால் வீட்டை விட்டு வெளியே வருவது நல்லது. மேலும் ஒரு கையால் மற்றொரு கையைக் கொண்டு அழுத்தும் போது, கொஞ்சம் விக்கல் குறைய நேரிடும். இதோடு மட்டுமின்றி விக்கலை நிறுத்துவதற்காக தண்ணீர் குடிக்கும் போது, கையால் மூக்கை கொஞ்சம் மூடிக்கொண்டு குடிக்கவும். இதையெல்லாம் நீங்கள் தொடர்ச்சியாக பின்பற்றினாலே விக்கல் சட்டென்று பறந்துவிடும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

Image source - Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP