மறதி நோய் பாதிப்பை சரி செய்ய நீங்கள் செய்ய வேண்டியது?

உடல் ஆரோக்கியத்தில் எந்தளவிற்கு அக்கறையுடன் செயல்படுகிறீர்களே?மறதி நோய் உள்பட எவ்வித உடல் நல பாதிப்பும் ஏற்படாது.
image
image

மறதி என்பது நம்மில் அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது. சின்ன சின்ன விஷயங்களை மறப்பது என்பது எதார்த்தம். அதையே தொடர்ச்சியாக செய்தால் நோயாக மாறும் என்பதை மறந்துவிடாதீர்கள். ஆம் மறதி தானே என்று அலட்சியாக விடும் போது டிமென்ஷியா ( மறதி நோய்) பாதிப்பை ஏற்படுத்தும். இதோ இன்றைக்கு மறதி நோய் ஏற்படக் காரணம் மற்றும் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக அறிந்துக் கொள்ளலாம்..

மூளையில் ஏதாவது பாதிப்பு மற்றும் எதிர்பாராதவிதமாக தலையில் ஏற்படக்கூடிய காயம் மூளை வரை செல்லும் போது பாதிப்பு ஏற்படும். இதை முறையாக கண்டுகொள்ளாமல் அலட்சியமாக விட்டு விட்டால் வயதான காலத்தில் நினைவாற்றல் இழப்பு ஏற்படும். அதாவது டிமென்சியா எனப்படும் மறதி நோய் பாதிப்பை சந்திக்க நேரிடும்.

இதோடு மட்டுமின்றி சமீபத்தில் சீனாவில் உள்ள தியான்ஜின் மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான பிரச்சனை உள்ளவர்களுக்கு மறதி நோய் பாதிப்பு என்ற தகவல் வெளியாகியுள்ளது.இதய செயல்பாடுகள் சிறப்பாக உள்ளவர்களுக்கு மறதி நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை எனவும் கூறப்பட்டுள்ளது..

மறதி நோய் பாதிப்புகள்:

  • நாம் 60 வயதை எட்டும் போது உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். பல நேரங்களில் வயதானவர்களின் செயல்பாடுகள் குழந்தைகள் போன்று மாறக்கூடும். அதுவும் டிமென்சியா எனப்படும் மறதி நோய் பாதிப்பு இருக்கும் பட்சத்தில் உடன் இருப்பவர்களைக் கூட நியாபகம் இருக்காது.
  • ஒரே செயல்களை மீண்டும் மீண்டும் செய்வது முதல் பல் துலக்குதல், குளித்தல் போன்ற அன்றாடம் செய்யக்கூடிய எந்தவொரு பணிகளையும் செய்வதைக் கூட டிமென்ஷியா பாதிப்பால் மறந்துவிடுவார்கள்..
  • தலைவலி, உடல் சோர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகளையும் எதிர்கொள்ள நேரிடும்.

பாதிப்பைத் தடுக்க செய்ய வேண்டியது?

  • மறதி நோய் பாதிப்பால் எந்தவொரு வேலையையும் முறையாக செய்ய முடியாமல் அவதிப்படுவார்கள். இந்நேரத்தில் அவர்களுக்கு அன்றாடம் செய்யக்கூடிய பணிகளைக் கூட எப்படி செய்ய வேண்டும்? என்பது குறித்து குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது போன்று அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
  • உடல் ஆரோக்கியத்திற்கு எந்தளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ? அந்தளவிற்கு மறதி நோய் உள்பட எவ்வித உடல் நல பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

dementia treatment

  • வீடுகளில் வயதானவர்கள் யாரும் இருந்தால் அவர்களைத் தனிமையில் விட்டு விடக்கூடாது. அனைவரும் அவர்களுடன் ஒன்றாக இருக்க வேண்டும். வெளியூரில் இருந்தால் கூட வீடியோ கால் வாயிலாக தொடர்பில் இருக்க வேண்டும். யார் யார் பேசுகிறீர்கள்? என்பதை அவ்வப்போது அவர்களுக்கு நினைவூட்ட வேண்டும்.
  • வயதான காலத்தில் ஏற்படக்கூடிய மறதி பாதிப்பைத் தவிர்க்க புத்தகங்களைப் படிக்க சொல்ல வேண்டும்.
  • குறிப்பிட்ட வயதை எட்டியவுடன் முறையான உடல் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

உடல் ஆரோக்கியத்திற்கு எந்தளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ? அந்தளவிற்கு மறதி நோய் உள்பட எவ்வித உடல் நல பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்..

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP