Summer Drinks: உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க செமையான 10 பானங்கள்!!

உடலை குளிர்ச்சியாக இருக்க செய்யும் பானங்களை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம்.

summer juice

கோடை காலத்தில் ஏற்படும் வெப்பம் மற்றும் வியர்வை காரணமாக உடலில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டு.உடலில் நீர்ச்சத்து குறைவதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதிக வெப்பம் உடலின் செரிமானத்தையும் பாதிக்கும். அதனால்தான் கோடையில் அதிகமான பானங்களை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

அதிக வெப்பத்தைப் போக்கவும், நீர்ச்சத்து குறைவதைத் தடுக்கவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், கோடைக்காலத்தில் பயன்படுத்தக்கூடிய சில குளிர்பானங்களைப் பற்றி பார்க்கலாம், ஃபேட் டு ஸ்லிம் குரூப்பைச் சேர்ந்த பிரபல சர்வதேச உணவியல் நிபுணரும், ஊட்டச்சத்து நிபுணருமான ஷிகா ஏ. சர்மா இந்த பானங்களில் நன்மையை பற்றி கூறியுள்ளார்.

கொய்யா கிரீன் டீ

கொய்யா கிரீன் டீ கோடைகால பானங்களில் ஒன்றாகும். இது உடலை உடனடியாக குளிர்விப்பது மட்டுமல்லாமல் ஆற்றலையும் வழங்குகிறது. இதை தயாரிக்க கொய்யா சாறு மற்றும் கிரீன் டீயை சம அளவில் சேர்த்து, எலுமிச்சை மற்றும் 1/2 டீஸ்பூன் வறுத்த சீரகத்தை சேர்த்து, ஐஸ் சேர்த்து பரிமாறவும். இந்த பானம் உடல் எடையையும் கட்டுப்படுத்தும்.

கரும்புச்சாறு

sugarcane juice

கரும்புச்சாறு கோடை காலத்திற்கான மற்றொரு சிறந்த ஆற்றல் பானமாகும். கோடைக்காலத்தில் நீங்கள் பலவீனமாக உணரும் போதெல்லாம் இந்த சாற்றுடன் 1/2 எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிடுங்கள்.

கிவி பஞ்ச்

இந்த பானத்தை தயாரிக்க 3 தோல் நீக்கிய கிவியை எடுத்து, 2 எலுமிச்சை சாறு மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து, ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து, 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி தூள் சேர்க்கவும். இந்த பானம் உடலுக்கு குளிர்ச்சியை வழங்குவதுடன் எடையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

குளிர்ந்த தேநீர்

ஐஸ் டீ உடலுக்கு குளிர்ச்சி தரும் சிறந்த பானம். இதை தயாரிக்க 4 கப் தண்ணீரில் 1/2 டீஸ்பூன் இஞ்சியுடன் 6 பிளாக் டீ பேக்குகளை கலந்து, தேநீர் பைகள் மற்றும் இஞ்சியை அகற்றி, 1/4 டீஸ்பூன் தேனுடன் பானத்தை கலந்து ஐஸ் கட்டி சேர்த்து பரிமாறவும்.

தர்பூசணி-தேங்காய் பானம்

watermelon juice

தர்பூசணி மற்றும் தேங்காய் இரண்டும் உடலுக்கு குளிர்ச்சியை வழங்குவதோடு, அவற்றில் உள்ள அதிக நீர்ச்சத்தும் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். இந்த பானத்தை தயாரிக்க 2 கப் தர்பூசணியை ஜூஸ், 1 எலுமிச்சை சாறு மற்றும் 1 கப் தேங்காய் தண்ணீர் சேர்த்து கலந்து, 1/4 தேக்கரண்டி பச்சை ஏலக்காய் தூள் சேர்த்து பரிமாறவும்.

இஞ்சி பானம்

இஞ்சி பானம் உடலை குளிர்விக்க சிறந்த வழி. 1 கிளாஸ் குளிர்ந்த நீரில் 2 டீஸ்பூன் இஞ்சி சாற்றைக் கலந்து, மேலே ஐஸ் கட்டிகளைச் சேர்த்துப் பரிமாறவும்.

வெள்ளரி தண்ணீர்

வெள்ளரிக்காய் கோடை காலத்தில் குளிர்ச்சியைத் தருவதோடு, வெப்ப தாக்கத்தையும் குறைக்க உதவுகிறது. 1 கிளாஸ் ஐஸ் தண்ணீரில் துண்டுகளாக நறுக்கிய 1 எலுமிச்சை மற்றும் 1/2 வெள்ளரி துண்டுகளை போட்டு, 1 தேக்கரண்டி வறுத்த சீரகப் பொடி மற்றும் ஒரு சிட்டிகை கருப்பு மிளகு சேர்க்கவும். இந்த பானம் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குவதோடு எடையையும் கட்டுப்படுத்த உதவுகிறது.

இஞ்சி சாறு

ginger juice

1 கப் துருவிய இஞ்சியை 8 கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். இந்த தண்ணீரில் 1 கப் ஸ்டீவியாவை கலந்து 1 மணி நேரம் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறவைக்கவும். இந்த நீரின் மேல் ஐஸ் சேர்த்து பாருகலாம்.

ஜல்ஜீரா

இந்த பதிவும் உதவலாம்: ஒரு கப் லெமன் டீ குடித்தால் உடலுக்கு இத்தனை நன்மைகளா?

எலுமிச்சை மற்றும் புதினா இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் ஜல்ஜீரா பல வயிற்று பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது. இதை செய்ய 1 கிளாஸ் தண்ணீரில் கருப்பு உப்பு, 1/2 எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் புதினா சாறு கலந்து, 1/2 தேக்கரண்டி வறுத்த சீரகத்தை சேர்த்து நன்கு கலக்கவும். இந்த பானத்தில் ஐஸ் கட்டிகளை சேர்த்து மகிழுங்கள்.

மோர்

வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் சிறந்த பானம் மோர். நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்பாக வைத்து உடல் எடையை கட்டுப்படுத்துகிறது. 1 கிளாஸில் மோரில் 1/2 டீஸ்பூன் வறுத்த அரைத்த சீரகம், 1 சிட்டிகை கருப்பு மிளகு தூள் மற்றும் 1/4 தேக்கரண்டி கருப்பு உப்பு சேர்த்து, கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால், பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Herzindagi-யுடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP