
ஜாதிக்காய் எசன்ஷியல் எண்ணெயை பற்றி பெண்களாகிய நாம் கட்டாயமாக தெரிந்து கொள்ள வேண்டும். இந்த எண்ணெய் சுவை, புத்துணர்ச்சி மற்றும் நறுமணத்தை அதிகரிப்பதோடு மட்டுமின்றி உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளையும் தருகின்றன. ஜாதிக்காய் எண்ணெயில் கிருமி நாசினி, பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு போன்ற பண்புகளும் நிறைந்துள்ளன.
பெரும்பாலும் பிரியாணி உட்பட பாரம்பரியமான ஒரு சில இந்திய உணவுகளில் ஜாதிக்காய் பயன்படுத்தப்படுகிறது. இது உணவின் சுவையை பல மடங்கு அதிகரிக்கிறது. இதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. ஜாதிக்காய் எண்ணெய் பெண்களுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை இன்றைய பதிவில் படித்தறியலாம்…
இந்த பதிவும் உதவலாம்: முட்டையை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி தெரியுமா?

ஜாதிக்காய் எசன்ஷியல் எண்ணெய் மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வை நீக்கும் திறன் கொண்டது. ஜாதிக்காய் எண்ணெய் உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து, மன அழுத்தம் மற்றும் பதட்டத்திலிருந்து விடுபட உதவுகிறது.
ஜாதிக்காயில் உள்ள குணப்படுத்தும் பண்புகள் நரம்புகளை ரிலாக்ஸ் செய்ய உதவுகின்றன. இந்தப் பண்புகள் நரம்புகளை அமைதி படுத்தவும், செரோடோனின் ஹார்மோனை வெளியிடவும் உதவுகின்றன. இது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.
ஜாதிக்காய் எண்ணெயில் உள்ள கால்சியம், இரும்புச்சத்து, மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றன. இரத்த ஓட்டம் சீராக இருந்தால் உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும் ஆக்சிஜன் விநியோகம் சீராக நடைபெறும்.
வயிறு தொடர்பான பிரச்சனைகளால் நீங்கள் சிரமப்படுகிறீர்களா? அஜீரண தொந்தரவுகளை சரி செய்ய ஜாதிக்காய் எண்ணெய் உதவும். இதில் உள்ள சக்தி வாய்ந்த ஃபைட்டோ நியூட்ரியண்ட்கள் சிறந்த செரிமானத்திற்கு உதவுகின்றன. ஜாதிக்காய் எண்ணெய் பசியை கட்டுப்படுத்துவதோடு மட்டுமின்றி வாயு, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, மலச்சிக்கல், குமட்டல் போன்ற பிரச்சனைகளையும் தடுக்கிறது.

சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்க ஜாதிக்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் உடலில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவுகின்றன.
ஜாதிக்காய் எண்ணெயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், வாயில் உள்ள பாக்டீரியாக்கள் மற்றும் துர்நாற்றத்தை நீக்க உதவுகின்றன. இதைத் தவிர ஜாதிக்காய் எண்ணெயில் உள்ள ஆண்டி செப்டிக் பண்புகள் பல் மற்றும் ஈறு வலிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஜாதிக்காய் எண்ணெய் இயற்கையான வலி நிவாரணியாக செயல்படுகிறது. குறிப்பாக மாதவிடாய் நாட்களில் ஏற்படும் அசௌகரியம், ஹார்மோன் சமநிலையின்மை சோர்வு போன்றவற்றிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஜாதிக்காய் எண்ணெயில் உள்ள பண்புகள் தசைப்பிடிப்பை குறைக்கவும், மனநிலை மற்றும் ஹார்மோன் சமநிலையின்மையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
மூளை திறம்பட செயல்படவும், சோர்வை நீக்கவும், கவனிக்கும் திறனை அதிகரிக்கவும் ஜாதிக்காய் உதவும். இதில் உள்ள இயற்கையான சேர்மங்கள் நினைவாற்றலை கூர்மையாக வைத்துக் கொள்ள உதவுகின்றன.
இந்த பதிவும் உதவலாம்: கருஞ்சீரகத்தை ஏன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் தெரியுமா?
இந்த நன்மைகள் அனைத்தையும் பெற நீங்களும் ஜாதிக்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com