உங்களுக்கு நீர்க்கட்டி பிரச்சனை உள்ளதா?
மாதவிடாய் நாட்களில் லேசான உதிரப்போக்கு மட்டுமே ஏற்படுகிறதா?
மாதந்தோறும் மாதவிடாய் சீராக வரவில்லையா?
மாதக்கணக்கில் மாதவிடாய் வராமல் தடைப்பட்டு உள்ளதா?
அல்லது மாதவிடாயை வரவழைக்க மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறீர்களா?
இதுபோன்ற மாதவிடாய் பிரச்சனைகளை நீங்களும் எதிர்கொண்டால் இப்பதிவில் பகிரப்பட்டுள்ள ஆயுர்வேத குறிப்பு உங்களுக்கு நிச்சயம் ஒரு நல்ல தீர்வாக இருக்கும். இந்த ஆயுர்வேத வைத்தியம் பற்றிய தகவல்களை ஆயுர்வேத நிபுணர் தீக்ஷா பவ்சர் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: கற்றாழை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
ஹார்மோன் மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கலாம் என நிபுணர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ஹார்மோன்களை சமநிலைப்படுத்த இயற்கையான ஆயுர்வேத பொருட்களை பயன்படுத்துவது நல்லது. இது ஹார்மோன் சமநிலையின்மையின் அறிகுறிகளான எடை அதிகரிப்பு, மனநிலை மாற்றங்கள், தூக்கமின்மை, மனச்சோர்வு போன்றவற்றையும் தடுக்கிறது.
மாதவிடாய் சார்ந்த பிரச்சினைகளிலிருந்து விடுபட இந்த ஆயுர்வேத வைத்தியத்தை நீங்களும் முயற்சி செய்யலாம். இதன் செய்முறை பயன்படுத்தும் முறை மற்றும் பலன்கள் குறித்து இப்போது விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வெந்தயம் - 1 டீஸ்பூன்
- கருப்பு எள் - 1 டீஸ்பூன்
- ஆளி விதை - 1 டீஸ்பூன்
பயன்படுத்தும் முறை
- மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு பொடியாக்கிக் கொள்ளவும். இதிலிருந்து 1 டீஸ்பூன் (3-4 கிராம்) அளவு பொடியை எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன் அல்லது காலையில் குடிக்கலாம்.
- இந்த கலவையை 12 வாரங்களுக்கு தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் மாதவிடாயின் 2வது நாளிலிருந்து கடைசி நாள் வரை இதை நிறுத்திவிட்டு, மாதவிடாய் முடிந்த பிறகு மீண்டும் தொடரலாம்.
இந்த ஆயுர்வேத கலவையான கருப்பு எள், ஆளி விதை மற்றும் வெந்தயம் லேசான உதிரப்போக்கு முதல் ஒழுங்கற்ற மாதவிடாய் வரை பல்வேறு மாதவிடாய் பிரச்சனைகளுக்கு நன்மை தரும். இதைத் தவிர பின்வரும் நன்மைகளையும் உங்களுக்கு வழங்குகிறது.
- ஒவுலேஷன்
- ஆரோக்கியமான கருமுட்டை
- எண்டோமெட்ரியத்தின் தடிமனை இயல்பான அளவுகளுக்கு கொண்டு வரும்.
- அதிகப்படியான உதிராப்போக்கு
மாதவிடாய் பிரச்சனைகளுக்கு எள் தரும் நன்மைகள்
எள்ளில் நிறைந்துள்ள துத்தநாகம் இன்சுலின் உணர்திறன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் எனும் ஹார்மோனை மேம்படுத்த உதவுகிறது. இவை இயற்கையிலேயே வெப்பமானவை, மேலும் அதிகப்படியான கபாவை(தாமதமான மாதவிடாய்களுக்கு பொறுப்பு) குறைப்பதன் மூலம் மாதவிடாயை ஒழுங்குபடுத்துகிறது.
மாதவிடாய் பிரச்சனைகளுக்கு வெந்தயம் தரும் நன்மைகள்
வெந்தயத்தில் பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் நிறைந்துள்ளன. இவை ஈஸ்ட்ரோஜன் அளவுகளில் நேர்மறையான விளைவை ஏற்படுத்துகின்றன. இது எண்டோமெட்ரியத்தின் தடிமனை பராமரித்து மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உதிரப்போக்கை சீராக்குகிறது. இதனுடன் திடீரென உயரும் இன்சுலின் அளவுகளையும் கட்டுக்குள் வைத்திருக்கும். மேலும் ஆரோக்கியமான எடை இழப்புக்கும் வெந்தயம் உதவுகிறது.
வெந்தயம் ஒழுங்கற்ற மாதவிடாயை சீராக்குவதோடு மட்டுமின்றி, மாதவிடாய் நாட்களை மென்மையாகவும், வலி அற்றதாகவும் வைத்திருக்கும்.
மாதவிடாய் பிரச்சனைகளுக்கு ஆளி விதை தரும் நன்மைகள்
முடி உதிர்வு மற்றும் வழுக்கையை ஏற்படுத்தும் அதிகப்படியான ஆன்ட்ரோஜன் அளவுகளை குறைப்பதில் ஆளி விதைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இவை மாதவிடாய் சுழற்சியை சீராக்குவதுடன், எடை இழப்புக்கும் உதவுகின்றன.
ஆளி விதைகளை தொடர்ந்து சாப்பிடுவது ஓவுலேஷன் செயல்முறையை ஒழுங்கு படுத்துகிறது. இதில் அதிக அளவு காணப்படும் லிக்னான்கள் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் அளவுகளை கட்டுப்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம்: பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு இருப்பதன் அறிகுறிகள் என்ன?
இதை கவனிக்கவும்
நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையுடன் மன அழுத்தம் இல்லாத சூழல், தினசரி உடல் செயல்பாடு அல்லது உடற்பயிற்சி, நல்ல தூக்கம், ஆரோக்கியமான உணவு ஆகியவற்றையும் கடைப்பிடித்தால் சிறந்த முடிவுகளை காணலாம்.
இந்த ஆயுர்வேத வைத்தியம் இயற்கையானது தான், இருப்பினும் ஒரு சிலருக்கு பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தலாம். இதை தவிர்க்க, ஆயுர்வேத நிபுணரை ஒரு முறை ஆலோசித்த பின் இக்குறிப்பை பின்வற்றுவது நல்லது.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik