Curry Leaf Tea: இது தெரிஞ்சா இனி விட மாட்டிங்க..!! கறிவேப்பிலை தேநீரில் இருக்கும் 6 நன்மைகள்

சருமம் மற்றும் முடி பிரச்சனைகளை மட்டுமின்றி கறிவேப்பிலை மூலிகை தேநீர் குடித்தால் பல நன்மைகள் உண்டு. 

Curry leaf tea social image

கறிவேப்பிலை சமையலறையில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்றாகும். ஆயுர்வேதத்தின் படி கறிவேப்பிலை பல நன்மை பயக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது அதன் பயன்பாடு பண்டைய மருத்துவத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

கறிவேப்பிலை முடி மற்றும் சரும பிரச்சனைகளுக்கு பெரிதும்உதவும் என்பது நமக்கு தெரியும். அது உண்மைதான் ஆயுர்வேத நிபுணரும் தி கடம்ப மரத்தின், இணை நிறுவனருமான டாக்டர் டிக்ஸா பவ்சர் சவாலியா கூறுகையில் கறிவேப்பிலை இலையில் செய்யப்படும் மூலிகை தேநீர் பல நன்மைகளை தருகிறது. கறிவேப்பிலையை எவ்வாறு உட்கொள்ள வேண்டும் மற்றும் அவை உடலுக்கு பல்வேறு வழிகளில் எவ்வாறு பயனளிக்கின்றன என்பதை பார்க்கலாம்.

கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

டாக்டர் சவலியா கூறுகையில் கறிவேப்பிலை இலைகளை மென்று தண்ணீர் குடிக்கலாம் அல்லது கொதிக்க வைத்து தண்ணீரை வடிகட்டி வெதுவெதுப்பாக குடிக்கலாம் என்று பரிந்துரைத்தார். கறிவேப்பிலை இலைகளை 5-7 நிமிடங்களுக்கு மேல் கொதிக்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கறிவேப்பிலை முடி மற்றும் சருமத்திற்கு மட்டுமல்ல அவற்றை கொதிக்கும் நீர் அல்லது மூலிகை தேநீரில் சேர்க்கும் போது பல நன்மைகளை தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் இப்படி பூண்டை சாப்பிடுங்கள்.. அப்புறம் பாருங்கள் அற்புத நிகழ்வுகளை!!

கறிவேப்பிலை தேநீர் நன்மைகள்

  • ஒற்றைத் தலைவலியிலிருந்து நிவாரணம் தரும்.
  • எடை இழப்பை ஊக்குவிக்கும்.
  • இரத்த சர்க்கரை அளவை சீராக்கும்
  • பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) சரி செய்ய உதவும்
  • ஹார்மோன்களை சமநிலையில் வைத்திருக்கும்
  • முன்கூட்டிய முடி நரைப்பதை தடுக்கும்

கறிவேப்பிலையின் மற்ற நன்மைகள் மற்றும் அன்றாட வழக்கத்தில் அவற்றை சேர்க்க வழி

பேன்களை போக்கும்

lice

கறிவேப்பிலையை நன்றாக பேஸ்ட் செய்து ஒரு கப் புளிப்பு மோரில் சேர்த்து அதை உச்சந்தலையில் தடவி பின் முற்றிலும் காய்ந்து போகும் வரை விட்டுவிடவும். பேன் எதிர்ப்பு ஷாம்பு அல்லது வேறு ஏதேனும் லேசான ஷாம்பூவைக் கொண்டு தலைமுடியைக் சுத்தம் செய்யலாம். உச்சந்தலையை நன்கு சுத்தம் செய்வதைஸ் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஓரிரு நாட்கள் இடைவெளி விட்டு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது செய்ய வேண்டும். பேன்களால் ஏற்படும் அனைத்து அரிப்புகளிலிருந்தும் நிவாரணம் பெற முடியும்.

வாய் புண்களுக்கு கறிவேப்பிலை

ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை எடுத்து முழுமையாக உலர வைக்கவும். ஒரு பிளெண்டரைப் பயன்படுத்தி அவற்றை மெல்லிய தூளாக செய்து சிறிது தேன் சேர்த்து கெட்டியான பேஸ்ட்டை உருவாக்கவும். குறைந்த பட்சம் மூன்று நாட்களுக்கு வாய் புண்களின் மேல் பேஸ்டை தடவி நிவாரணம் பெறலாம்.

குமட்டலை எதிர்த்துப் போராடும் கறிவேப்பிலை

vomiting

ஆறு கறிவேப்பிலை இலையை கழுவி உலர வைக்கவும். பின் அரை டீஸ்பூன் நெய்யில் கறிவேப்பிலை வறுக்கவும். பின் அவற்றை மென்று சாப்பிடவும். குமட்டலை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த மருந்துகளில் இதுவும் ஒன்றாகும்.

வாய் துர்நாற்றத்திற்கு கறிவேப்பிலை

வாய் துர்நாற்றத்திற்கு எல்லாவற்றையும் முயற்சித்தீர்களா, ஆனால் போகவில்லையா, இது ஒரு பெரும் சங்கடமாக இருக்கலாம். இருப்பினும் கழுவிய 5-6 கறிவேப்பிலையை 5 நிமிடங்கள் மென்று சாப்பிட முயற்சி செய்யலாம். அதன் பின் வாயை கொப்பளிக்கவும்.

இரத்த சர்க்கரை

இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால். நீங்கள் முயற்சி செய்யக்கூடிய ஒரு ஆயுர்வேத தீர்வு இங்கே உள்ளது. கறிவேப்பிலையைப் பயன்படுத்தி சட்னி செய்து சப்பாத்தி, பராத்தா அல்லது வேறு ஏதேனும் உணவுடன் சாப்பிடலாம்.

வயிற்றுப்போக்கு

diarrhea

வயிற்றுப்போக்கு என்பது சில உணவுப் பொருட்களை ஜீரணிக்க அல்லது ஆரோக்கியமற்ற தண்ணீரைக் குடிக்கும்போது மக்கள் அனுபவிக்கும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்றாகும். ஒரு கிளாஸ் மோரில் குறைந்தபட்சம் 30 கறிவேப்பிலைகளை பேஸ்ட் செய்து அவற்றை சேர்த்து உட்கொள்ளுங்கள்.

இந்த பதிவும் உதவலாம்: நாவல் பழம் விதையில் இருந்து தயாரிக்கப்படும் பொடி இந்த 5 பிரச்சனைகளை தீர்க்கும்

ஆயுர்வேத வீட்டு வைத்தியம் பற்றிய கூடுதல் கதைகளுக்கு HerZindagi உடன் இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP