தலையில் யாராவது ரோஜா செடியுடன் நடந்து சென்றால் உடனடியாக நம்முடைய கவனம் அவர்கள் மீது திரும்பும். தமிழ் பெண்கள் விரும்பி பயன்படுத்தும் பூக்களில் ரோஜா முதன்மையானது. கடவுளுக்கும் ரோஜா பூக்களால் அர்ச்சனை செய்யும் வழக்கம் உண்டு. வீடு அல்லது மாடித் தோட்டத்தில் ரோஜா வளர்க்க ஆசைப்பட்டு நர்சரியில் இருந்து ரோஜா செடி வாங்கி வந்து வளர்க்கிறோம். பத்து பேரில் ஒரு சிலருக்கு மட்டுமே ரோஜா செடி துளிர் விட்டு வளர்ந்து பூத்து குலுங்குகிறது. எனவே ரோஜா செடி வளர்ப்பு முறை உண்மைத் தகவல்களோடு இந்த பதிவில் பகிரப்படுகிறது.
ரோஜா செடி வளர்ப்பு
ரோஜா செடி கட்டிங்ஸ்
- ரோஜா செடியை கட்டிங்ஸில் இருந்து உருவாக்கலாம். நர்சரிக்கு சென்று நாட்டு ரோஜா செடியில் இருந்து ஒரு கிளையை வெட்டி வாங்கவும்.
- பென்சிலின் அடர்த்தியில் ரோஜா கட்டிங்ஸ் இருப்பது அவசியம்.
- இந்த கட்டிங்ஸை வேர்கள் உற்பத்தி ஆன பிறகு செம்மண் கலவையில் சேர்த்து தொட்டியில் வளர்க்கலாம்.
- 15 செ.மீ நீளம் அதாவது சின்ன ஸ்கேல் அளவில் கட்டிங்ஸ் எடுத்து அடிபாகத்தை 45-50 டிகிரி அளவில் கூர்மையாக வெட்டவும்.
- இப்போது ஒரு மூடி தேன் எடுத்துக் கொண்டு கூர்மைபடுத்திய ரோஜா கட்டிங்ஸை அதில் மூழ்கி எடுக்கவும்.
- வேர்கள் நன்றாக வளர கற்றாழை ஜெல் அல்லது தேன் பயன்படுத்தலாம். இதே போல 4-5 கட்டிங்ஸ் தயாரிக்கவும்.
- இதை மண் புழு உரத்தில் கொஞ்சம் இடைவெளிவிட்டு வைத்து காற்று புகாதவாறு பிளாஸ்டிக் போட்டு மூடி உரத்திற்கும் பிளாஸ்டிக்கிற்கும் உள்ள இடைவெளியில் தண்ணீர் ஊற்றவும்.
- நிழலான இடத்தில் வளர்த்தால் 20 நாட்களில் வேர் பிடித்துவிடும். ஐந்து கட்டிங்ஸில் மூன்றாவது நன்கு வேர்கள் பிடித்து தயாராகிவிடும்.
ரோஜா செடிக்கு மண் கலவை
- பத்து அங்குல மண் தொட்டியில் உதிரியான செம்மண் 50 விழுக்காடு, கோகோபீட் 25 விழுக்காடு, இயற்கை உரம் 25 விழுக்காடு நிரப்பி வேர் பிடித்த கட்டிங்ஸ் வைக்கவும்.
- கோகோபீட் என்பது தென்னைநார் கழிவு ஆகும்.
- தொட்டியில் நான்கு - ஐந்து ஓடைகள் இருந்தால் தண்ணீர் சரியாக வெளியேற்றப்பட்டு வேர் அழுகல் நோய் தவிர்க்கப்படும்.
- இயற்கை உரம் என்பது மாட்டு சாணம் உரம் அல்லது மண் புழு உரம் பயன்படுத்தலாம்.
- 15-20 நாட்களுக்கு ஒரு முறை டிஏபி உரம் பயன்படுத்தலாம். இதை செடியில் நேரடியாக பயன்படுத்தாமல் வேர் பகுதியை சுற்றி கொஞ்சம் மண் தோண்டி அதில் போடவும்.
- செடிக்கு தண்ணீர் ஊற்ற அரிசி கழுவும் தண்ணீர் பயன்படுத்தலாம்.
மேலும் படிங்க90 நாட்களில் பச்சை மிளகாய் சாகுபடி; மாடித் தோட்டத்தில் வளர்க்கலாம்
ரோஜா செடி நோய் தாக்குதல் தவிர்ப்பு
- இலைகள் வளர ஆரம்பித்த சில நாட்களில் அதன் நுனிகள் காய்ந்து நிறம் மாறி கருப்பாக மாறும். அப்போது இலைகளை வெட்டி விடவும். புதிய இலைகளையும் வெட்டி விடுங்கள்.
- இதற்கு அரை ஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு கப் தண்ணீரில் சின்ன ஷாம்பு பாக்கெட்டுடன் கலந்து ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலுக்கு மாற்றி வாரத்திற்கு ஒரு முறை தெளித்து வாருங்கள்.
- தினமும் 6 மணி நேரம் மாடியில் ரோஜா செடி மீது வெயில் படும் படி வளர்க்கவும்.
- மொட்டுக்கள் வைத்த பிறகு அதில் கருப்பு நிறத்தில் பூச்சிகள் வளரும் முட்டையிடும்.
- இதை தடுத்திட வேப்ப எண்ணெய்யை கொஞ்சம் ஷாம்புவுடன் கலந்து ஸ்பிரே பாட்டிலுக்கு மாற்றி செடி மீது அடிக்கவும்.
- 2-3 நாட்களில் பூச்சிகள் ஓடிவிடும். நன்கு கவனிப்புடன் ரோஜா செடி வளர்த்து வந்தால் தோட்டம் போல பூத்து குலுங்கும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation