ஜிம் செல்வது இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் கடைப்பிடிக்கும் பழக்கமாக மாறிவிட்டது. உடல் ஆரோக்கியம் மற்றும் ஃபிட்னஸுக்காக நம்மில் பலரும் ஜிம்முக்கு செல்கிறோம். அங்கு இருக்கும் பல்வேறு உடற்பயிற்சி கருவிகளை பயன்படுத்துகிறோம். பயிற்சியாளர் கூறும் செயல்பாட்டு பயிற்சிகளையும் செய்கிறோம். அந்த வகையில் கார்டியோ முதல் எடை பயிற்சி வரை ஜிம்மில் பலவகையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளும் போது சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
இப்படியொரு விஷயம் இருக்கிறது என்பது கூட பலருக்கும் தெரியாது. ஆனால் இந்த விஷயங்களை கவனிக்க தவறும் போது பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. எனவே, ஜிம்மில் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 5 விஷயங்களை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
நீண்ட நேரத்திற்கு ஒரே இயந்திரத்தை பயன்படுத்தாதீர்கள்
பலமுறை இது போல் நடக்கும். அதாவது, ஜிம்மில் ஒரே இயந்திரத்தில் 15-20 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் நேரத்தை செலவழிப்போம். எடை பயிற்சி செய்யும் போது கூட 2 ரெப்ஸ்களுக்கு நடுவில் நீண்ட நேரம் அமர்ந்திருப்போம். இதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். இதுப்போல் செய்வது ஜிம்மில் உடற்பயிற்சி செய்ய விரும்பும் மற்றவர்களுக்கும் தொந்தரவை தரும்.
உங்களுக்கான நேரம் அல்லது ராப்களின் ஒன்றை முடித்த பின்பு உடனே இயந்திரத்திலிருந்து எழுந்திருக்க வேண்டும். அப்போது தான் மற்றவர்களாலும் அதை பயன்படுத்த முடியும்.
ஈகோ உணர்வுடன் பயிற்சி செய்யாதீர்கள்
இதுப்போனற சூழ்நிலை பெரும்பாலும் அனைவருக்கும் ஏற்படும். நீங்கள் ஜிம்மில் புதியதாக இணைந்து இருப்பீர்கள், அப்போது 25 கிலோ அல்லது 50 கிலோ எடையுடன் எடைப் பயிற்சி செய்யும் நபர்களை நீங்கள் சந்திக்க நேரிடும். உடனே, நீங்களும் அவரை பார்த்து ஆரம்பத்திலேயே அதிக எடையை தூக்கி, பயிற்சி செய்ய நினைப்பீர்கள். இது சரியான செயல் அல்ல. உங்கள் உடல் வலிமை மற்றும் தேவையை புரிந்து கொண்டு அதற்கேற்ற பயிற்சியை செய்வது தான் சரியான செயல்முறை.
விரைவாக எடையை குறைக்க நினைக்காதீர்கள்
சில நபர்கள் எடை தூக்கும் பயிற்சியை செய்து முடித்த பின்பும், வலுக்கட்டாயமாக மீண்டும் மீண்டும் எடை தூக்கும் பயிற்சியை செய்வார்கள். இது தவறான செயல்முறையாகும். உங்கள் திறனுக்கு அப்பாற்பட்டு அடிக்கடி எடையை தூக்கி கீழே இறக்கினால் காயங்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு.
அதே போல் வலுக்கட்டாயமாக எடை கருவிகளை தூக்கி அதை அதிக சத்தத்துடன் கீழே இறக்குவது ஜிம்மில் இருக்கும் மற்றவர்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தும். இப்படி செய்யும் போது தரையில் இருக்கும் டைல்ஸ் அல்லது மற்ற பொருட்களும் சேதமடையலாம்.
தனியாக எடையை தூக்காதீர்கள்
நீங்கள் ஜிம்மில் இருக்கும்போது, தவறுதலாக கூட இந்த விஷயத்தை செய்யாதீர்கள். அதிக எடையுடன் உடற்பயிற்சி செய்யும் போது, உங்களுடன் ஒரு பயிற்சியாளர் இருக்க வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். பயிற்சியாளர் சரியான வடிவத்தில் எடையை உயர்த்த உதவுவார். அதுமட்டுமில்லை, அதிக எடையை தூக்கும் போது உங்களுக்கு உதவி செய்வார். இதனால் காயங்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.
தினமும் ஒரே உடற்பயிற்சிகளை செய்யாதீர்கள்
பல நேரங்களில் நம்மில் பலரும் ஜிம்மில் ஒரே பயிற்சிகளை மாறி மாறி செய்வோம். அல்லது நீண்ட நேரத்திற்கு அந்த பயிற்சியை மட்டுமே செய்து கொண்டிருப்போம். ஜிம்மில் இதுப்போல் செய்வது நல்ல செயல்முறை இல்லை. ஒரே பகுதியில் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படுவதால் காயங்கள் அல்லது எரிச்சல் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
எனவே ஒவ்வொரு நாளும் உங்கள் உடற்பயிற்சியில் பலவகையான பயிற்சிகளை சேர்த்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களின் உடற்பயிற்சி சிறந்ததாக மாறும். உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நீங்கள் கவனித்துக் கொள்ள முடியும்.
எனவே, இனிவரும் நாட்களில் ஜிம்முக்கு செல்லும்போது இந்த விஷயங்களை மனதில் கொண்டு சிறப்பாக செயல்படுங்கள். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik