ஆரோக்கியமாக இருக்க யோகா செய்வது தான் சுலபமான மற்றும் சிறந்த வழி என்பதை நாம் அனைவரும் அறிவோம். கடந்த சில ஆண்டுகளாக பலருக்கும் யோகா மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் அனைவரும் யோகா பயிற்சி செய்ய வேண்டும். நம்மை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் வைத்திருக்க யோகா உதவுகிறது.
யோகா செய்வதால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். இது எடையை பராமரிக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், பல உடல்நலப் பிரச்சினைகளிலிருந்து விடுபடவும் உதவுகிறது. பலர் யோகா மூலம் முற்றிலும் ஆரோக்கியமாக மாறி, மருந்து மாத்திரைகளை நிறுத்தியுள்ளனர்.
ஆனால் யோகா செய்வதன் உண்மையான பலன் சரியான நேரத்தில் அதைச் செய்தால் மட்டுமே கிடைக்கும். ஆம், யோகா செய்யும் போது நேரத்தையும் கவனித்துக் கொண்டால், அதிகபட்ச பலன்களை பெறலாம். எனவே, இன்று இந்த பதிவில் எந்த நேரத்தில் யோகா செய்ய வேண்டும் என்று பார்க்கவிருக்கிறோம்-
காலையில் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
காலையில் உங்களுக்கு கொஞ்சம் கூடுதல் நேரம் இருந்தால், அதிகாலையில் யோகா பயிற்சி செய்யவும். இது மிகவும் நல்லது. நீங்கள் காலையில் யோகா செய்தால், உங்களுக்கு மனம் அமைதி கிடைக்கும். மேலும், நாள் முழுவதும் வேலை செய்வதற்கான ஆற்றலையும் பெற முடியும். நாள் முழுவதும் வேலையில் மும்முரமாக இருப்பவர்கள், தனக்கென நேரத்தை ஒதுக்க முடியாமல் திணறுபவர்களுக்கு காலையில் யோகா செய்வது மிகவும் நல்லது. எனவே நீங்கள் அதிகாலையில் எழுந்து உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்பதற்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான விஷயங்கள்!!!
மாலையில் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
காலையில் யோகா செய்ய நேரம் கிடைக்கவில்லை என்றால், மாலை நேரத்தில் யோகா பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். மாலையில் யோகா செய்வதும் மிகவும் நல்லதாக கருதப்படுகிறது, ஏனெனில் இது சோர்வு மற்றும் மன அழுத்தத்தை நீக்கி, உங்களை நிம்மதியாக உணர வைக்கிறது. நீங்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் அமைதியாக இருந்தால், இரவில் நன்றாக தூங்க முடியும். மாலையில் யோகா செய்வது கண்டிப்பாக ஒரு நல்ல யோசனை தான். ஆனால் இந்த நேரத்தில் மிகவும் கடினமான மற்றும் சோர்வாக்கும் யோகாசனப் பயிற்சிகளை செய்யக்கூடாது என்பதை மறந்துவிடாதீர்கள்.
வெறும் வயிற்றில் யோகா செய்யுங்கள்
எப்போதும் வயிறு நிரம்பி இருக்கும் போது யோகா செய்யக்கூடாது. காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் யோகா செய்யலாம். ஆனால் நீங்கள் மாலையில் யோகா பயிற்சி செய்கிறீர்கள் என்றால், சாப்பிடுவதற்கும் யோகா செய்வதற்கும் இடையில் குறைந்தது ஒன்று முதல் இரண்டு மணி நேர இடைவெளியாவது இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, யோகாசனம் செய்து முடித்த உடனே சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: அழகான உடல் அமைப்பை பெற உதவும் யோகா!!!
யோகா செய்ய சிறந்த நேரம்
காலை மற்றும் மாலை இரண்டு வேளைகளிலும் யோகா செய்யலாம். உங்களுக்கு எது சிறந்த நேரம் என்பது உங்கள் நேர அட்டவணையை பொறுத்தது. உங்கள் நேரம் மற்றும் வசதிக்கேற்ப அதை முடிவு செய்துகொள்ளலாம்.
இருப்பினும், ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் யோகா பயிற்சி செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வது யோகா செய்வதை வழக்கமாக மாற்ற உதவுகிறது.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலம்.