4 வார நடைபயிற்சி சவாலுக்கு தயாரா ? உடல்எடை கட்டாயம் குறையும்

4 வார காலம் அதாவது ஒரு மாதத்திற்கு தொடர்ந்து நடைபயிற்சி மேற்கொண்டால் உடலில் அதிகளவு கலோரி எரிக்கப்பட்டு எடை இழந்திருப்பீர்கள். முறையான உணவுமுறையும் பின்பற்றினால் எடை கட்டாயம் குறையும். உபகரணம் இன்றி செய்யக்கூடிய நடைபயிற்சியானது எடையைக் குறைத்திட பலரின் விருப்பமான தேர்வாகும்.
image

உடலில் உள்ள கலோரிகளை எரித்திட அல்ல செலவு செய்திட நடைபயிற்சியை விட எளிதான விஷயம் வேறு எதுவும் இல்லை. நம்முடைய விருப்புத்திற்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நடைபயிற்சி செல்லலாம். எல்லா விதமான உடற்பயிற்சிகளும் உடல் எடை குறைப்புக்கு உதவும். கலோரிகளும் விரைவாக எரிக்கப்படும். எனினும் தடலாடியாக எடுத்த எடுப்பில் உடற்பயிற்சி செய்வது சற்று கடினம். ஆகையால் தான் பலரும் நடைபயிற்சியில் இருந்து ஆரம்பிக்கின்றனர். நடைபயிற்சி செல்வதற்கு உடலில் ஓரளவு வலிமை இருந்தால் போதும். அதே போல நடைபயிற்சி செல்வதற்கு காலணிகளை தவிர வேறு எந்த உபகரணமும் தேவையில்லை.

4 week walking to lose weight

4 வார நடைபயிற்சி சவால்

உடல் எடையை குறைப்பதில் நடைபயிற்சி நல்ல பலன்களை தெரிந்து கொண்ட பிறகு அதை ஒரு மாதத்திற்கு நீட்டிப்பதில் எந்தவித தவறும் கிடையாது. இந்த பதிவில் 4 வாரங்கள் தொடர்ந்து நடைபயிற்சி சென்றால் எந்த மாதிரியான மாற்றம் ஏற்படும் என பகிரப்பட்டுள்ளது. நடைபயிற்சி செல்வதிலும் சில மாற்றங்கள் தேவை.

4 வார நடைபயிற்சி திட்டம்

  • திங்கள் : 30 நிமிடங்களுக்கு மெதுவாக நடக்கவும்
  • செவ்வாய் : 30 நிமிடங்களுக்கு சுறுசுறுப்பாக நடக்கவும்
  • புதன்கிழமை : 30 நிமிடங்களுக்கு மிதமான வேகத்தில் நடைபயிற்சி
  • வியாழன் : 30 நிமிடங்களுக்கு மிதமான வேகத்தில் நடைபயிற்சி
  • வெள்ளி : 30 நிமிடங்களுக்கு சுறுசுறுப்பாக நடக்கவும்
  • சனிக்கிழமை : 60 நிமிடங்களுக்கு மெதுவான நடைபயிற்சி
  • ஞாயிறு : 60 நிமிடங்களுக்கு சுறுசுறுப்பான நடைபயிற்சி

இதில் எந்தவித தளர்வும் இன்றி நான்கு வாரங்களுக்கு நடைபயிற்சி சவாலை பின்பற்றவும். அதன் பிறகு நீங்களே ஒவ்வொரு நாளும் எத்தனை கிராம் எடையை இழந்தோம் என ஆச்சரியப்படுவீர்கள்.

வேகத்தை அதிகரிப்பது முக்கியம்

4 வார நடைபயிற்சி சவாலில் முழு பலன் கிடைக்க தூரம், நடக்கும் வேகத்தை அதிகரிக்கவும். சராசரி தூரம் மட்டுமே நடக்க முடியும் என்றால் அந்த தூரத்தில் உங்கள் வேகத்தை அதிகரித்து நடைபயிற்சி செல்லவும். நடைபயிற்சியின் வேகத்தை அதிகரிக்கும் போது உடலில் கலோரி அதிகளவில் எரிக்கப்படும், இதய ஆரோக்கியம் மேம்படும். முடிந்தவரை இடைவெளி இன்றி நடைபயிற்சி செல்ல முயற்சி செய்யுங்கள். அதே நேரம் வேகத்தை ஏற்றி இறக்கலாம்.

மேலும் படிங்க30 30 30 விதியை பின்பற்றுங்க ; சுலபமாக எடையை குறைத்து ஆரோக்கியமாக வாழலாம்

4 வார நடைபயிற்சி சவாலில் என்ன சாப்பிடலாம் ?

குறைந்த கொழுப்பு கொண்ட உணவுகளை சாப்பிடுங்கள். ஆரோக்கியமான உணவாகவும், கலோரி குறைந்த உணவாகவும் சாப்பிட்டால் 4 வார நடைபயிற்சி காலத்தில் நல்ல முன்னேற்றம் காணலாம். எடை இழப்புக்கு பட்டினியாக இருக்க வேண்டும் என அவசியமில்லை. உங்களுடைய உடலுக்கு ஏற்ப ஊட்டச்சத்து நிறைந்த எல்லா உணவுகளையும் உட்கொள்ளலாம்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP