உடலின் முக்கிய பாகங்களில் ஒளிந்திருக்கும் உள்ளுறுப்பு கொழுப்பை நச்சு கொழுப்பு என்றும் அழைக்கின்றனர். உள்ளுறுப்பு கொழுப்பு அதிகமாக இருந்தால் இரத்த கொதிப்பு, இதய நோய், சர்க்கரை நோய் மற்றும் சில புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படலாம். தேவையான அளவை விட அதிக கலோரி சாப்பிட்டு எங்கும் நகராமல் ஒரே இடத்தில் இருந்தால் உள்ளுறுப்பு கொழுப்பு பிரச்னை உண்டாகும். பெண்களின் இடுப்பு சுற்றளவு 80 செ.மீ மேலாகவும், ஆண்களுக்கு 94 செ.மீ மேலாகவும் இருந்தால் உடலில் உள்ளுறுப்பு அதிகளவு உள்ளுறுப்பு கொழுப்பு இருப்பதாக அர்த்தம். உள்ளுறுப்பு கொழுப்பை குறைக்க வேண்டுமானால் ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்ற வேண்டும், சுறுசுறுப்பாக இயங்குவது அவசியம்.
உள்ளுறுப்பு கொழுப்பு என்றால் என்ன?
உள்ளுறுப்பு கொழுப்பு நச்சு கொழுப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது தோலுக்கு அடியில் ஒளிந்திருக்கும் கொழுப்பாகும். உடல் அமைப்பை கொண்டே உள்ளுறுப்பு கொழுப்பு இருக்கிறதா ? இல்லையா ? என சொல்லி விடலாம். இதயம், கல்லீரல், குடல் பகுதிகளில் இந்த கொழுப்பு தேங்கி இருக்கும். உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஹார்மோன்களை உருவாக்கும். தோலடி கொழுப்பை விட இது ஆபத்தானது. பெண்களை விட ஆண்களிடமே இந்த உள்ளுறுப்பு கொழுப்பு பிரச்னை அதிகம் காணப்படுகிறது.
உள்ளுறுப்பு கொழுப்பு காரணங்கள்
- பிறக்கும் போது குறைந்த எடை
- அதிகளவு மது அருந்துதல்
- மரபணு பின்னணி
உள்ளுறுப்பு கொழுப்பினால் ஆரோக்கிய பாதிப்பு ?
- மன சோர்வு
- புற்றுநோய்
- ஆஸ்துமா
- கல்லீரல் பிரச்னை
- கருத்தரித்தல் பிரச்னை
- முதுகு பிரச்னை
- எலும்பு தேய்மானம்
உள்ளுறுப்பு கொழுப்பை கண்டறியும் முறை
இடுப்பு சுற்றளவு அதிகமாக இருந்தால் கட்டாயம் உள்ளுறுப்பு கொழுப்பு இருக்கும். இது குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் பொருந்தாது. BMI வைத்து கூட இதை கண்டுபிடிக்கலாம்.
- பெண்களுக்கு 80 செ.மீ மேல்
- ஆண்களுக்கு 94 செ.மீ மேல்
உள்ளுறுப்பு கொழுப்பை குறைக்க குறிப்புகள்
உடல் எடையை குறைக்கும் போதும் உள்ளுறுப்பு கொழுப்பும் குறையும். இதற்கு நீங்கள் ஆரோக்கியமான உணவு பழக்கத்திற்கு மாறினால் போதும். தினமும் உடற்பயிற்சி செய்தால் உள்ளுறுப்பு கொழுப்பு பிரச்னை மீண்டும் வராது. தினமும் 30 நிமிடங்களுக்கு தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். புகைப்பிடிக்காதீர்கள். சர்க்கரை அதிகம் உள்ள பானங்களை தவிர்க்கவும். தினமும் போதுமான நேரம் தூங்கவும்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation