எடையைக் குறைக்கணுமா ? ஸ்கிப்பிங் பயிற்சி செய்து நன்மைகளை பெறுங்க

உடல் எடையை குறைக்க மேற்கொள்ளப்படும் பல உடற்பயிற்சிகளில் ஸ்கிப்பிங் செய்வது நல்ல பலனை தரும் என கண்டறியப்பட்டுள்ளது. உடல் எடையைக் குறைக்க ஸ்கிப்பிங் எந்த வகையில் உதவும், ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
image

உடல் எடையைக் குறைப்பதற்கு ஸ்கிப்பிங் செய்வதை பெரும்பாலான உடற்பயிற்சி நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். உடலில் கலோரிகளை விரைவாக எரிப்பதற்கு ஸ்கிப்பிங் உதவும். ஸ்கிப்பிங் செய்வது இதயத்திற்கும் நல்லது. ஸ்கிப்பிங் ஒரு கார்டியோ உடற்பயிற்சி ஆகும். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க விளையாட்டு வீரர்கள் தினமும் ஸ்கிப்பிங் பயிற்சி செய்வதுண்டு. ஸ்கிப்பிங் செய்வதால் உடல் வலுபெறும். நுரையீரல் மற்றும் ஸ்டாமினாவை அதிகரிக்க ஸ்கிப்பிங் செய்வது நல்லது. ஓட்டப்பயிற்சியுடன் ஒப்பிடுகையில் ஸ்கிப்பிங் செய்தால் உடல் எடையை விரைவாக குறைக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 10*10 சதுர அடி இடம் இருந்தால் ஸ்கிப்பிங் பயிற்சி செய்யலாம்.

skipping benefits

கொழுப்பை குறைக்கும் ஸ்கிப்பிங்

ஸ்கிப்பிங் பயிற்சி செய்தால் உடலில் உள்ள தோலடி கொழுப்பு மற்றும் உள்ளுறுப்பு கொழுப்பு குறையும்.

தோலடி கொழுப்பு

இது நம்முடைய தோலுக்கு அடியில் இருக்கும். இதை உடல் கொழுப்பாக கருத வேண்டும். தொடர்ச்சியாக ஸ்கிப்பிங் செய்தால் தோலடி கொழுப்பு கரையும்.

உள்ளுறுப்பு கொழுப்பு

உடலில் ஒவ்வொரு உறுப்பிலும் கொழுப்பு தங்க வாய்ப்புள்ளது. இதனால் சர்க்கரை மற்றும் இதய நோய் அபாயம் ஏற்பட வாய்ப்புண்டு. தீவிர உடற்பயிற்சி முறையான ஸ்கிப்பிங் செய்தால் உள்ளுறுப்பு கொழுப்பு குறைந்து ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மேம்படும்.

இந்த இரண்டு கொழுப்பு குறையும் பட்சத்தில் உடல் தோற்றம், தோரணை நன்றாக இருக்கும்.

உடல் எடையைக் குறைக்க ஸ்கிப்பிங் பயிற்சி

ஸ்கிப்பிங் பயன்கள்

கலோரி எரிப்பு

ஸ்கிப்பிங் பயிற்சி செய்தால் உடலில் கலோரிகள் எரிக்கப்படும். 57 கிலோ எடை கொண்ட நபர் 30 நிமிடங்களுக்கு ஸ்கிப்பிங் பயிற்சி செய்தால் 340 கலோரிகளை எரித்திருப்பார். எனவே தான் ஸ்கிப்பிங் தீவிரமான உடற்பயிற்சியாக கருதப்படுகிறது.

எடை இழப்பு

15 நிமிடங்களுக்கு ஸ்கிப்பிங் செய்தால் 200 முதல் 300 கலோரிகளை கட்டாயமாக எரித்திருப்பீர்கள். உடல் எடையைக் குறைக்க ஸ்கிப்பிங் கட்டாயம் உதவும்.

மேலும் படிங்க4 வார நடைபயிற்சி சவாலுக்கு தயாரா ? உடல்எடை கட்டாயம் குறையும்

தொப்பை கொழுப்பு கரையும்

ஸ்கிப்பிங் செய்யும் போது வயிற்று பகுதியில் அதிக தாக்கம் ஏற்படும். இதனால் தொப்பை கொழுப்பு கரையும்

ஸ்கிப்பிங் செய்யும் போது இதய துடிப்பு அதிகமாகும். இதய ஆரோக்கியம் மேம்படும் காரணத்தால் இதய நோய்களின் அபாயத்தையும் தடுக்கலாம்.
ஸ்கிப்பிங் பயிற்சியை தொடர்ந்து செய்தால் சுறுசுறுப்பு அடைவீர்கள். ஸ்கிப்பிங் செய்யும் போது ஒட்டுமொத்த உடலும் இயங்குவதால் தசைகள் வலுபெறும். எலும்புகள் அடர்த்தியாகும்.

மனநலனுக்கு ஸ்கிப்பிங் நல்லது

ஸ்கிப்பிங் பயிற்சியினால் உடலில் எண்டோர்பின் என்ற ஹார்மோன் சுரக்கும். இதனால் மன அழுத்தம், பதட்டம் குறையும்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP