உடல் நலனும் யோகாவும் என்ற தொடரில் நாம் அடுத்து பார்க்கப் போவது சூரிய நமஸ்காரம். இது சூரியனுக்கு வணக்கம் செலுத்துதல் ஆகும். இந்த சூரிய நமஸ்காரத்தில் 12 ஆசனங்கள் சேர்ந்திருக்கும். சூரிய நமஸ்காரம் செய்வதற்கு ஒரு பெரிய விரிப்பை பயன்படுத்துங்கள். சூரிய நமஸ்காரத்தை மூச்சு பயிற்சியுடன் சேர்த்து செய்வது நல்லது.
நமஸ்கார ஆசனம்
இயல்பாக நின்று கைகளை கூப்பி வணங்குவது நமஸ்கார ஆசனம்.
ஹஸ்த உத்தனாசனா
ஹஸ்த என்றால் கை, உத்தனாசனா என்றால் கைகளை மேலே உயர்த்துவது. இதை செய்யும் போது முதுகுப் பகுதியை சற்று வளைக்க வேண்டும்.
பாத ஹஸ்தாசனா
உயர்த்திய கைகளை அப்படியே பாதத்தின் அருகே கொண்டு வருவது பாத ஹஸ்தாசனா. கைகள் இரண்டையும் காலின் அருகே வைத்துவிட்டு முழங்காலை மடக்காமல் தலையை நன்கு குனிய வேண்டும்.
அஸ்வ சஞ்சலாசனம்
பாத ஹஸ்தாசனா நிலையில் இருந்து அப்படியே இடது காலை பின்நோக்கி நகர்த்தவும். அதாவது ஓட்டப்பந்தயத்திற்கு தயாராகும் வீரரை போல் உடலின் நிலை இருக்கும். கால் பாதல் தரையில் தட்டையாக வையுங்கள். தலையை அப்படியே மேலே உயர்த்தவும்.
பர்வதாசனம்
அஸ்வ சஞ்சலாசனம் நிலையில் இருந்து அப்படியே வலது காலையும் பின்நோக்கி கொண்டு சென்று உடலை பர்வதாசனம் நிலைக்கு மாற்றவும். அதாவது V எழுத்து தலைகீழாக இருப்பது போல உடலை மாற்றவும். முதுகுத் தண்டும், தலையும் கீழ்நோக்கி இருக்க வேண்டும்.
அஷ்டாங்க நமஸ்காரம்
அஷ்டம் என்றால் எட்டு. இதை செய்யும் போது உடலின் எட்டு அங்கங்கள் மட்டுமே கீழே பட வேண்டும். முட்டி போட்டு மார்பு பகுதியை கீழே வைத்து கைகளையும் தாடையையும் கீழே வைக்கவும்.
புஜங்காசனம்
இப்போது அஷ்டாங்க நமஸ்காரத்தில் இருந்து எளிதாக புஜங்காசனத்திற்கு உடலை மாற்றலாம். கைகளை தரையில் வைத்து அழுத்தம் கொடுத்து தலை மேலே பார்க்க வேண்டும்.
மேலும் படிங்கமன அழுத்தம், பதட்டத்தை குறைத்து மன தெளிவை அளிக்கும் பரிவர்த்த உஸ்த்ராசனம்
இந்த எட்டையும் நிறைவு செய்த பிறகு அப்படியே ரிபீட் செய்வது போல் இருக்கும். பர்வதாசனம் நிலைக்கு வந்த பிறகு இடது காலை மடக்கி முன்னே கொண்டு வந்து வலது காலை பின்நோக்கி நீட்டி மேலே பார்க்கவும்.
பாத ஹஸ்தாசனா
தற்போது அஸ்வ சஞ்சலாசனம் நிலையில் இருக்கும் நாம் பாதங்களை நேராக கொண்டு வந்து கைகள் இரண்டையும் காலின் அருகே வைத்துவிட்டு முழங்காலை மடக்காமல் தலையை நன்கு குனிய வேண்டும்.
அப்படியே ஹஸ்த உத்தனாசனா நிலையில் இருந்து நமஸ்கார ஆசனத்திற்கு சென்று கைகளை கூப்பி வணங்கவும்.
இப்போது ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடலாம். இந்த 12 ஆசனங்களிலும் தலை மேலே செல்லும் போது மூச்சை உள்ளே இழுக்க வேண்டும். தலையை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் போது மூச்சை விட வேண்டும்.
சூரிய நமஸ்காரத்தில் பல்வேறு ஆசனங்கள் அடங்கி இருப்பதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும்.
மேலும் படிங்கநல்ல உடல் தோரணைக்கு உதவும் அர்த்த உத்தனாசனம்
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation