கண்ணாடியில் உங்களை பார்க்கும் போது தொப்பையால் அழகற்று தெரிந்தால், இந்த கட்டுரை உங்களுக்கானது. அதே வேலையில் ஆரோக்கியமாக இருக்க நாம் ஏதாவது செய்ய வேண்டும். உடல் எடையை குறைப்பது முக்கியம் என்றாலும், அதனை விட ஆரோக்கியமான வாழ்க்கை முறை மிகவும் முக்கியம். நமக்கு ஏற்படும் நோய்களை எதிர்த்துப் போராட நடைபயிற்சி அல்லது சில வகையான உடற்பயிற்சிகளைச் செய்வது அவசியம். குளிர்காலம், கோடை அல்லது மழைக்காலம் எதுவாக இருந்தாலும், நடைபயிற்சி ஆரோக்கியத்திற்கு நல்லது.
நடைப்பயிற்சியால் மட்டும் உடல் எடையை குறைக்க முடியுமா என்றால் இதற்கு, நேரம், படிகளின் வேகம் மற்றும் உங்கள் வளர்சிதை மாற்றம் அனைத்தையும் மனதில் கொள்ள வேண்டும். நடைப்பயிற்சியால் ஒரு மாதத்தில் 5 கிலோ எடை வரை குறைக்கலாம். டைபயிற்சி மூலம் உடல் எடையை குறைக்க கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். எப்படி என்பதை முழுமையாக பார்க்கலாம்.
ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் நடந்தால் கிடைக்கும் பலன்கள்
ஒரு எளிய நடைப்பயிற்சி எடையைக் குறைக்கும் என்றால் உண்மையில்லை. 30 நிமிட நடைப்பயிற்சி வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும் ஆரோக்கியமாக இருக்க உதவும். உணவு செரிமானத்தில் பிரச்சனைகள் இருக்காது மற்றும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். ஆனால் இதனால் மட்டும் எடை குறைவது நடக்காது.
நடைபயிற்சி மூலம் எடை குறைக்க செய்ய வேண்டியவை
தினமும் சாதாரண நடைப்பயணத்திற்கு பதிலாக விறுவிறுப்பான நடைபயிற்சி செய்ய வேண்டும். உங்கள் உடலுக்கு ஏற்ப நடையின் வேகத்தை அதிகரித்து கை அசைவுகளையும் செய்ய வேண்டும். நீங்கள் 30 முதல் 40 நிமிடங்கள் வேகமான நடைபயிற்சி செய்தால், இந்த நேரத்தில் 150 கலோரிகளை அதிகமாக எரிக்கலாம்.
தினமும் படிகள் நடக்கவேண்டிய எண்ணிக்கை
மக்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 10 ஆயிரம் படிகள் நடக்க வேண்டும். எனவே, முடிந்தவரை நடக்க வேண்டியது அவசியம். மேலும் நடப்பது உங்கள் உடலை சுறுசுறுப்பாக மாற்றும். 10 ஆயிரம் படிகள் என்றால் சுமார் 7 முதல் 8 கிலோமீட்டர்கள் ஆகும், இதில் நபரின் சுறுசுறுப்பு மற்றும் வேகமும் முக்கியமானது.
5 கிலோ எடையை குறைக்க செய்ய வேண்டிய நடைப்பயிற்சி
ஒரு கிலோ எடை என்றால் 7000 கலோரிகள் என்பதாகும். நீங்கள் 70 கிலோ எடையுடன் இருந்தால், 250 கிமீ நடந்தால் 1 கிலோ எடை குறைக்கலாம். இதுபோன்ற நிலையில் ஒரு நாளைக்கு குறைந்தது 50 கிமீ நடக்க வேண்டும், அப்போதுதான் உங்கள் எடை நேர வரம்பிற்கு ஏற்ப குறையும். எனவே, சாதாரண நடைப்பயிற்சிக்குப் பதிலாக, விறுவிறுப்பான நடைப்பயிற்சியை மேற்கொள்வதும், தினசரி உணவில் கவனம் செலுத்துவதும் அவசியம். நடைப்பயணத்துடன் உணவு பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
எடையைக் குறைக்க கலோரிகளைக் குறைப்பது அவசியம்
பொரித்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டுவிட்டு, வெறும் நடைப்பயிற்சியால் உடல் எடை குறையும் என்று நினைத்தால், அது நடக்காத காரியம். உங்கள் கலோரிகளை முடிந்தவரை பழங்களில் இருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இனிப்பு சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். நீங்கள் ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் சாப்பிட வேண்டும்.
உணவு உண்ண சரியான நேரம்

எழுந்த உடன் 2 முதல் 2.5 மணி நேரத்திற்குள் காலை உணவை உட்கொள்ள வேண்டும். இதனுடன் காலை உணவுக்கு நான்கு மணி நேரம் கழித்து மதிய உணவை உட்கொள்ள வேண்டும். இதேபோல் தூங்குவதற்கு 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன் இரவு உணவை உட்கொள்ள வேண்டும். இரவு உணவு அன்றைய நாளின் லேசான உணவாக இருக்க வேண்டும், இரவு உணவில் கார்போஹைட்ரேட் சாப்பிடுவது சரியாக இருக்காது.
மேலும் படிக்க: செரிமான பிரச்சனைகளை தெறித்து ஓட விடும் சூப்பரான வீட்டு வைத்தியம்
இந்த சின்ன சின்ன விஷயங்களை நாம் அன்றாடம் கடைப்பிடித்தால் மட்டுமே உடல் எடை குறையும். வெறும் நடைப்பயிற்சி மூலம் 5 கிலோ எடையை குறைக்க வேண்டும் என்றால் அது சாத்தியமில்லை.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation