10 கிலோ எடையைக் படிப்படியாக குறைத்த கீர்த்தி சுரேஷ்; புரதம் தந்த மாற்றம்

மகாநதி படத்திற்கு பிறகு எடையை குறைத்த நடிகை கீர்த்தி சுரேஷை கண்டு அவர் சிகிச்சை செய்திருப்பார் என உண்மை தெரியாமல் பலரும் பேசினார். தனது உடல் எடை குறைப்பு 8 மாத பயணம் எனவும் உடற்பயிற்சி இன்றி 10 கிலோ குறைத்தாக கீர்த்தி சுரேஷ் எடை குறைப்பு பற்றி விவரித்துள்ளார்.
image

இது என்ன மாயம் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சர்கார், சண்டக்கோழி 2, தொடரி, அண்ணாத்த, ரெமோ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். 2018ஆம் ஆண்டு முன்பாக காணப்பட்ட கீர்த்தி சுரேஷிற்கும் 2020ல் காணப்பட்ட கீர்த்தி சுரேஷிக்கும் உடல் ரீதியாக வித்தியாசங்கள் தெரிந்தன. இயல்பான தோற்றத்தில் இருந்து அவர் பயங்கரமாக எடை குறைத்திருந்தார். பலரும் அவர் படத்தில் நடிக்க சிகிச்சை செய்து கொண்டார், நோய் பாதிப்புக்கு ஆளாகியுள்ளார் என்றெல்லாம் பேசினார். ஆனால் உணவுமுறை எதுவும் பின்பற்றாமல் தீவிரமான உடற்பயிற்சி செய்யாமல் எடையைக் குறைத்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் எடை இழப்பு பயணம்

நான் உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்ட நபர் கிடையாது. மகாநதி படத்திற்கு பிறகே உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். சினிமாவில் வந்த தொடக்கத்தில் இருந்து உடல் எடையில் கவனம் செலுத்தியதில்லை. என்னுடைய உடலை பற்றி புரிந்து கொள்வதற்கே நேரம் எடுத்தது. மகாநதி படத்திற்கு பிறகே எடையைக் குறைக்க ஆரம்பித்தேன். அந்த படத்தில் நடிக்க எடையை ஏற்றவில்லை. அது என்னுடைய இயல்பான உடல்எடை. மகாநதி படத்திற்கு பிறகு 6 மாதம் படங்கள் நடிக்காமல் இடைவேளையில் இருந்தேன். ஆரோக்கியமான எடையில் இருக்க வேண்டும் என கருதி எடை இழப்பு பயணத்தை ஆரம்பித்தேன். அப்படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்ததாக நினைக்கிறேன்.

8 மாதங்களில் 10 கிலோ குறைந்த கீர்த்தி சுரேஷ்

நான் எடையைக் குறைக்க சிகிச்சை செய்யவில்லை. கார்டியோ பயிற்சி செய்த காரணத்தால் தசையை இழந்து ஒல்லியாக தெரிந்தேன். ஜிம் செல்வது எனக்கு பயனளிக்கவில்லை. யோகா செய்த பிறகு உடல் எடை சீராக இருந்தது. தற்போது வாரத்திற்கு 6 நாட்கள் பயிற்சி செய்கிறேன். உடல் வலிமைக்காக Strength training செய்வது உண்டு. அதே போல டென்னிஸ் விளையாடும் பழக்கம் மற்றும் நீச்சல் பயிற்சிக்கு செல்வேன்.

கீர்த்தி சுரேஷின் உணவுப் பழக்கம்

நான் எந்த உணவுமுறையும் பின்பற்றியது கிடையாது. எனக்கு எதை சாப்பிட வேண்டுமோ அதை சாப்பிட்டு விடுவேன். புரதத் தேவைக்காக முட்டையின் வெள்ளை கரு எண்ணிக்கையில் 8 சாப்பிடுவேன். அதே போல பனீர், சோயா, பருப்பு வகைகள் சாப்பிடுவது உண்டு. உடற்பயிற்சி செய்த பிறகு புரோட்டீன் ஷேக் குடித்தது கிடையாது. தனக்கு பிடித்தமான உணவு தோசை என்றும் கீர்த்தி சுரேஷ் குறிப்பிட்டார்.

இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP