2 மாதத்தில் 19 கிலோ எடை இழந்த நடிகை அபர்ணதி; வெற்றிலை செய்த மேஜிக்

இறுகப்பற்று படத்தில் நடிப்பதற்காக 55 கிலோ எடையில் இருந்து 76 கிலோ வரை சென்ற நடிகை அபர்ணதி இரண்டே மாதத்தில் 19 கிலோ எடை குறைத்து இயல்பான உடல் எடைக்கு திரும்பியது பற்றிய சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார்.
image

இறுகப்பற்று சாமானியன், மாய புத்தகம், ஜெயில் போன்ற படங்களில் நடித்தவர் அபர்ணதி. இவரை நாம் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியிலும் பார்த்திருப்போம். எந்தவொரு நடிகையும் பட வாய்ப்பிற்காக அழகான தோற்றத்தையும், கச்சிதமான உடல் அமைப்பையும் தக்க வைக்க விரும்புவார்கள். ஆனால் நடிகை அபர்ணதி இறுகப்பற்று படத்தின் வாய்ப்பை பெற இயல்பான உடல் எடையில் இருந்து 19 கிலோ அதிகரித்து குண்டாக மாறியுள்ளார். படத்தில் வித்தார்த் ஜோடியாக நடித்திருந்த அபர்ணதி அக்கதாபாத்திரத்தின் தேவையை உணர்ந்து எடை அதிகரித்திருப்பார். இந்த நிலையில் எடை அதிகரிப்பு, எடை குறைப்பு பற்றிய சில தகவல்களை அபர்ணதி பகிர்ந்துள்ளார்.

abarnathi weight loss journey

19 கிலோ எடை இழந்த அபர்ணதி

இறுகப்பற்று படத்தில் நடிப்பதற்காக 3 மாதத்தில் எடை அதிகரித்தேன். என்னுடைய எடை 53 கிலோ. இதே எடையில் பல நாட்கள் தொடர்ந்தேன். 55 கிலோ எடையைக் கூட நான் கடந்ததில்லை. ஆனால் படத்திற்காக 19 கிலோ எடை அதிகரித்து 76 கிலோ எடை வரை சென்றேன். எடை அதிகரித்திட மோமோஸ், பீட்ஸா, பர்கர், புரோட்டீன் பவுடர் ஆகியவற்றை சாப்பிட்டேன். உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரித்திட காலை 5 மணிக்கு பழைய சோறு, தேங்காய் பாலில் நாட்டு சக்கரை போட்டு சாப்பிட்டு இருக்கிறேன். எடை அதிகரித்த பிறகே படத்தின் சூட்டிங் தொடங்கியது.

அபர்ணதியின் எடை இழப்பு பயணம்

மீண்டும் எடையைக் குறைத்திட ராகி தோசை, கம்பு தோசை, கவுனி கஞ்சி சாப்பிட்டேன். தினமும் ஒரு வாழைப்பழம், இரவு தூங்கும் முன்பாக ஆரஞ்சு பழம் சாப்பிடுவது வழக்கமாக மாறியது. வெள்ளை சோறு சாப்பிடுவதை நிறுத்தி பிரவுன் ரைஸ் சாப்பிட்டேன். வாரத்திற்கு ஒரு முறை வெற்றிலையில் கொஞ்சம் சோம்பு, மிளகு, இரண்டு கருப்பு திராட்சை சேர்த்து சாப்பிட்டேன். எடையைக் குறைப்பதற்கு நான் இந்த உணவுமுறையை பின்பற்றினேன்.

மேலும் படிங்க94 கிலோவுக்கு சென்ற இடுப்பழகி சிம்ரன்; பிரசவத்திற்கு பிறகு எடையைக் குறைத்த இரகசியம்

படத்தில் என்னுடைய கதாபாத்திரம் திருமணத்திற்கு பிறகு எடை அதிகரித்துவிட்டது பிரச்னையாக மாறிவிடும். ஜிம் போக முடியாத நபர்கள் உணவுமுறையின் மூலமாக 6 மாதத்தில் எடையைக் குறைக்கலாம். காலை மற்றும் மாலையில் இரண்டு மணி நேர ஓட்டப்பயிற்சி, பூசணிக்காய் தண்ணீர் பருகுதல் என உணவுமுறை மாற்றத்தோடு உடற்பயிற்சியும் செய்தேன். படத்தில் வருவது போல் பளூ தூக்குதல் பயிற்சியும் செய்துள்ளேன். எடை இழப்பு பயணத்தில் பிரியாணி, பர்கர் சாப்பிடுவதை தவிர்த்தேன்.

எடை இழப்பு எளிதான காரியமல்ல. மனது வைத்தால் எடை இழப்பை துரிதப்படுத்தலாம்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP