ஒருவர் மீது அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்த பரிசுகள் கொடுப்பது சிறந்த வழியாகும். இவை காதலின் வெளிப்பாடாக இருந்தாலும் ஜோதிட விதிகளின்படி நீங்கள் சில பரிசுகள் ஏற்றுக்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை நமது வாழ்வில் எதிர்மறையை ஏற்படுத்தி வெற்றியைத் தடுக்கும்.
இக்கட்டுரை முழுவதும் ஜோதிடர் பண்டிட் அரவிந்த் திரிபாதியின் அறிவுரைகளை வைத்து எழுதப்பட்டதாகும்.
மோதிரத்தை பரிசாக ஏற்க வேண்டாம்
காதல் ஜோடிகளின் பிரதான பரிசாக மோதிரம் இருந்தாலும் நீங்கள் நிச்சயதார்த்தம் செய்யாதவரை அதைக் கட்டாயம் ஏற்க கூடாது. ஏனென்றால், வேறொருவரிடமிருந்து மோதிரத்தை ஏற்றுக்கொள்வது உங்களது உடல்நலம், வாழ்க்கை பாதை மற்றும் நிதி நிலைமையை பாதிக்கும்.
கடிகாரத்தை பரிசாக ஏற்காதீர்கள்
வாஸ்து சாஸ்திரத்தில் கடிகாரத்தை யாரிடமும் இருந்து பரிசாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கடிகாரம் என்பது அதை வழங்கும் நபரின் நேரத்துடன் தொடர்புடையதாக நம்பப்படுகிறது. பரிசு கொடுப்பவருக்கு கெட்ட நேரமாக இருந்தால் அது பரிசு பெறுபவரையும் பாதிக்கும்.
மேலும் படிங்கதீயவற்றில் இருந்து விலகி இருப்பதற்கான சிறந்த வழிகள்
ஷூ, செருப்புக்கு நோ நோ
வாஸ்து சாஸ்திரத்தின்படி காலணிகள் மற்றும் செருப்புகள் உங்கள் வீட்டிற்கு வறுமையை கொண்டு வரும் என்பதால் அவற்றை யாரிடமும் இருந்து அன்பளிப்பாக ஏற்றுக்கொள்ளக் கூடாது. கால் பாதங்களின் சனி வசிப்பதாக நம்பபடுகிறது. மேலும் காலணிகளைப் பரிசாகக் கொடுப்பவர் சனியின் தீய விளைவுகளால் பாதிக்கப்பட்டிருந்தால் அதைப் பெறும் நபரும் மோசமான விளைவை பெறக்கூடும்.
பேனாவை பரிசாக ஏற்காதீர்கள்
ஒருவரிடம் பேனாவை நீங்கள் பரிசாக ஏற்றால் பொருளாதார சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என நம்பப்படுகிறது.
மேலும் படிங்க14 மணி நேரம் விரதம் இருந்தால் உடலுக்கு நல்லது
ஆடைகளுக்கும் நோ நோ
ஆடைகளைப் பரிசாகப் பெறும்போது பரிசளிக்கும் நபரின் எதிர்மறை ஆற்றல் அதைப் பெறுவரின் உடலுக்குப் பரிமாறும் என்பதை ஒருபோதும் ஆடைகளைப் பரிசாக ஏற்காதீர் என ஜோதிடர் பண்டிட் அரவிந்த் திரிபாதி கூறினார்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation