பெண்கள் என்ற வார்த்தைகளை உச்சரிக்கும் போதே அழகும் சேர்ந்துவிடும். அந்தளவிற்கு பெண்கள் ஒவ்வொருவரும் தங்களை எப்போதும் அழகாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அனைத்து நேரங்களிலும் இது சாத்தியமாகாது. மன அழுத்தம், சுற்றுச்சூழல் மாசுபாடு, தீங்கு விளைவிக்கும் சூரிய கதிர்கள், தூக்கமின்மை போன்ற பல்வேறு காரணங்களால் பெண்களின் சருமம் பொலிவிழக்கிறது. இதுப்போன்ற நிலை உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா? சருமத்தை பொலிவாக வைத்திருக்க வேண்டிய சில அழகுக்குறிப்புகள் இதோ உங்களுக்காக…
சரும பராமரிப்பும், வீட்டு வைத்திய குறிப்புகளும்:
மஞ்சள்:
எண்ணெய் சருமம், வறண்ட சருமம் என எவ்வித சருமத்திற்கும் ஏற்ற ஆயுர்வேத மூலிகைகளில் ஒன்றாக உள்ளது மஞ்சள். இதில் உள்ள குர்குமின் வலுவான ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது.
தினமும் அல்லது வாரத்திற்கு ஒருமுறையாவது மஞ்சளில் பால் அல்லது தண்ணீர் கலந்து முகத்தில் பூசி வரவும். இது சருமத்தைப் பொலிவுடன் வைத்திருக்க உதவியாக இருக்கும்.
பால்:
குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது பால். இருந்தப் போதும் பாலில் வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் சரும பராமரிப்பிலும் தனக்கென ஒர் தனி இடத்தைப் பிடித்துள்ளது.
நீங்கள் பச்சை பாலை பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். சிறிய அளவு காட்டனை பாலில் தொட்டு முகத்தில் தடவ வேண்டும். இவ்வாறு தினமும் நீங்கள் செய்து வருவதால் சருமம் மென்மையாகும்.
இதில் உள்ள வைட்டமின்கள் இளம் வயது முதுமையைத் தடுக்கிறது. உங்களது முகத்தில் மாய்ஸ்சரைசரின் அளவையும் அதிகரிக்கிறது.
ஆலோவேரா/ கற்றாழை:
அனைத்து வகையான சருமம் உள்ளவர்களுக்கும் முகப் பொலிவைத் தரக்கூடிய பண்புகளைக் கொண்டுள்ளது கற்றாழை. அழகுச்சாதனப் பொருள்கள் அனைத்திலும் இடம் பெற்றிருக்கும் இந்தக் கற்றாழையை தினமும் பயன்படுத்தி வருவதால் சருமம் பொலிவு பெறும்.
இதில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் சூரிய ஒளிக்கதிர்களால் ஏற்படும் அழற்சியைத் தடுக்கிறது. முகப்பருக்கள் ஏற்படாமலும் கட்டுக்குள் வைத்திருக்கிறது.
தண்ணீர்:
சருமத்தை பொலிவுடன் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் அனைவரும் கட்டாயம் தண்ணீர் குடிப்பதில் கவனத்துடன் இருக்க வேண்டும்.
உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கும்போது சருமத்தில் எவ்வித பாதிப்பும் உங்களுக்கு ஏற்படாது என்பதால் தினமும் 2-3 லிட்டராவது தண்ணீரைக் குடிக்க வேண்டும்.
ஐஸ் க்யூப்கள்:
மன அழுத்தமும், தூக்கமின்மையும் சருமத்தை சோர்வடையச் செய்யும். இதற்காகப் பல விதமான அழகுச் சாதன பொருள்களைப் பயன்படுத்தினாலும் விரைவில் சரி செய்ய முடியாது. இந்நேரத்தில் உங்களுக்கு ஐஸ் பேசியல் உதவியாக இருக்கும்.
தினமும் அல்லது வாரத்திற்கு இருமுறையாவது நீங்கள் ஐஸ் கட்டிகளை வைத்து முகத்தில் மசாஜ் செய்யவும். இது சருமத்தில் மாய்ஸ்சரைசர்களின் அளவை அதிகரிக்கிறது. முகத்தைப் பொலிவுடன் வைத்திருக்கவும் உதவியாக உள்ளது.
பருவ காலங்களில் ஏற்படும் சரும தொற்றுகளையும் குணப்படுத்துகிறது.
தயிர்:
தோல் பராமரிப்புகளில் தயிர் மிகவும் முக்கியமானது. அனைத்து வகையான சருமம் உள்ளவர்களும் தயிரை பேசியல் கிரிமாக உபயோகிக்கலாம்.
இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள், முகப்பருக்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. மேலும் நீரேற்றத்தை மேம்படுத்திச் சருமத்தைப் பொலிவுடன் வைத்திருக்கவும் உதவுகிறது.
ரோஸ் வாட்டர்:
உலகில் பெரும்பாலான பெண்கள் எண்ணெய் சருமத்தினால் அவதிப்படுகிறார்கள். என்ன தான் மேக்அப் போட்டாலும் சிறிது நேரத்திலேயே பொலிவிழந்துவிடுகிறது. அழகுக் கலை நிபுணர்களின் கருத்தின் படி, ரோஸ் வாட்டர் இதற்குத் தீர்வாக அமைகிறது.
முகத்தில் தினமும் ரோஸ் வாட்டரை அப்ளே செய்யவும். இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடன்டகள் சருமத்தின் pH அளவை சீராக்குகிறது. சருமத்தைப் பொலிவுடன் வைத்திருக்கிறது.
இதுப்போன்ற இயற்கை முறைகளில் உங்களது சருமத்தை பொலிவுடன் வைத்திருக்க முயற்சிக்கலாம். ஆனாலும் சரும பராமரிப்பிற்கு ஊட்டச்சத்துள்ள உணவுகளை நீங்கள் உங்களது டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation