thaipusam festival tamil

Thaipusam Dress Ideas in Tamil: தைப்பூசம் சிறப்பு நாள்! பெண்களுக்கான ஆடை தேர்வுகள்!

தைப்பூசம் அன்று பெண்கள் எந்த மாதிரியான ஆடைகளை தேர்வு செய்யலாம் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
Editorial
Updated:- 2023-02-03, 09:51 IST

தமிழகத்தில் தைப்பூசம் திருநாள் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. தமிழ் கடவுளான முருக பெருமானுக்கு உகந்த நாளான தைப்பூசம் அன்று பெண்கள் முருகன் கோவில்களுக்கு சென்று பல்வேறு வழிபாடுகளில் ஈடுபடுவார்கள். முருகனிடம் வேண்டி கொண்டு வேண்டுதல்களையும் நிறைவேற்றுவார்கள். குழந்தைகளும் இந்த வழிபாடுகளில் கலந்து கொள்வார்கள்.

அந்த வகையில் தைப்பூசம் திருநாளன்று கோயில் செல்லும் பெண்கள் எந்த மாதிரியான ஆடைகளை தேர்வு செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மஞ்சள் நிறம்

முருகனுக்கு மிகவும் பிடித்த நிறமாகவும், பக்தியை வெளிப்படுத்தும் நிறமாகவும் மஞ்சள் பார்க்கப்படுகிறது. மிகவும் மங்களகரமான நிறம். காவடி எடுக்கும் பெண்கள், பால்குடம் எடுக்கும் பெண்கள் மஞ்சள் நிறத்தில் புடவை அணிவார்கள். ஒரே மாதிரியான பிளைன் மஞ்சள் புடவைகளை தேர்வு செய்வதற்கு பதில் மெல்லிய பார்டர் வைத்த மஞ்சள் நிற புடவைகள் உங்களை இன்னும் அழகாக காட்டும்.

இந்த பதிவும் உதவலாம்: தைப்பூசம் அன்று வீட்டு வாசலிலும், பூஜை அறையிலும் போட வேண்டிய கோலங்கள்

சுடிதார்கள்

வேண்டுதலில் ஈடுப்படும் பெண்கள் வசதிகேற்ப சுடிதார்களையும் தேர்வு செய்யலாம். மஞ்சள் நிற பிளைன் சுடிதார்கள் இதற்கு சரியான தேர்வு. அதே போல் மஞ்சள் நிற பிளைன் குர்தாக்களை தேர்ந்தெடுக்கலாம். டீன் ஏஜ் பெண்கள் மஞ்சள் நிறத்தில் நீள குர்தாவை அணிந்து அதற்கு மேட்ச்சாக மஞ்சள் நிற லெகின்ஸ் அணியலாம்.

thaipusam kids dress

சிவப்பு மற்றும் பச்சை

வெறும் மஞ்சள் நிறம் மட்டுமில்லை பக்தியை வெளிப்படுத்தும் சிவப்பு மற்றும் பச்சை நிறத்திலும் உடையை தேர்வு செய்யலாம். சிவப்பு நிற காட்டன் புடவை அணிவதற்கு வசதியாக இருக்கும். அதே போல் வெயில் நேரத்தில் உடலுக்கு மிருதுவாக இருக்கும். அதே நேரம் சிவப்பு நிற சுடிதார்களையும் தேர்வு செய்யலாம். பச்சை நிறத்தில் சாஃப்ட்டான புடவைகளை தேர்வு செய்யலாம். இளம் பெண்கள் பச்சை நிற குர்தா அணிந்து அதற்கு வெள்ளை நிறத்தில் லெகின்ஸ் அணியலாம்.

குழந்தைகளுக்கான ஆடைகள்

பெரும்பாலும் பெற்றோர்களுடன் குழந்தைகளும் வேண்டுதலில், ஈடுப்படுவார்கள். பால்குடம் எடுக்கும் பெண் குழந்தைகள் மஞ்சள் நிறத்தில் பாவாடை சட்டை அணியலாம். அதே போல் முடிந்த வரை குழந்தைகளுக்கு இந்த நேரத்தில் காட்டன் உடைகளை தேர்வு செய்வது நல்லது. நைலான், வெல்வெட் போன்ற துணிகளை அணிந்து கொண்டு அதிக நேரம் வெயிலில் இருக்க முடியாது.

இந்த பதிவும் உதவலாம்:குடியரசு தினத்தை குழந்தைகளுடன் கொண்டாட சூப்பர் டிப்ஸ்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik, google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com