ஆரி என்பது பழமையான இந்திய எம்பிராய்டரி நுட்பமாகும். ஊசிக்கு ஆரி என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் ஆரி பிளவுகள் குந்தன் மற்றும் பீட் வேலைகளுடன் ஜாரி மற்றும் பட்டு நூல் வேலைகளின் கலவையைக் கொண்டு வடிவமைக்கப்படுகிறது. இந்த ஆரி பிளவுஸ்கள் கண்ணுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றைய இளம்பெண்கள் பண்டிகை, கோவில் திருவிழா, விஷேச நாட்களில் புடவை அணிய ஆசைப்படுகிறார்கள். குறிப்பாக, புடவை சிம்பிளாக இருந்தாலும் அதற்கு ஏற்ற பிளவுஸ் அணிவதில் மிகவும் அக்கறைக் கொள்கிறார்கள். அதிலும் ஆரி ஒர்க் பிளவுஸ் பெண்களின் மனம் கவர்ந்த பிளவுஸ்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஆரி ஒர்க் பிளவுஸ்களில் பல விதங்கள் இருக்கிறது, அதில் சில வகை பிளவுஸ் வகைகள் தீபாவளி பண்டிகைக்காக வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. ஆரி ஒர்க் பிளவுஸ்கள் உடுத்த சௌகரியமாகவும், ஸ்டைலாகவும், எல்லா காலநிலைகளுக்கும் ஏற்றதாக இருப்பதால் விஷேச காலங்களில் அணிய பெண்கள் ஆசைப்படுகிறார்கள்.
சிவப்பு நிற பிரைடல் பிளவுஸ்
இந்த அழகிய பிரைடல் பிளவுஸ் குந்தன், த்ரெட் மற்றும் ஸ்பிரிங் போன்ற வேலைப்படுகளுடன் சிவப்பு நிற புடவைக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பண்டிகை நாட்களுக்கு, விஷேச நாட்களில், மற்றும் கோவில்களுக்கு இந்த வகையான பிளவுஸ் அணிந்தால் பார்க்க அழகாக இருக்கும்.
பச்சை நிற ஆரி பிளவுஸ்
இந்த பிளவுஸ் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு, விசேஷ நாட்களுக்கு இந்த நிற பளவுஸ் அணிந்தால் அழகாக இருக்கு. அழகிய கிளை வடிவில் இலைகள் வடிவமைத்து, இதில் கற்கல் குந்தன் பதித்த பூங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிளவுசின் முக்கிய அம்சம் என்னவென்றால் படர்களில் லட்சுமி சிலையாகும். பார்க்க மட்டுமல்ல அணிந்தால் மிக அழகாய் இருக்கும்
நெட் டிசைன் ஆரி பிளவுஸ்
பச்சை நிற இந்த பிளவுஸ் பேன்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கைகளில் நெட் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. பாடர்கள் கொடுக்காமல், அதில் கனமான ஆரி வேலைபடுகள் கொடுத்து அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்லீவ்ஸ் டிசைன் பிளவுஸ்
பார்க்க சிம்பிளாக தெரியும் இந்த அழகிய வடிவம் கனமான ஸ்லீவ்ஸ் டிசைன் பிளவுஸ். டிரெண்டிங்கில் வலம் வந்து கொண்டு இருக்கும் இந்த மாடல் இளம் பெண்களை மனம் கவர்ந்த டிசைன்.
மேலும் படிக்க: வெள்ளை கற்கள் பதித்த அழகாக லேட்டஸ்ட் ஜிமிக்கி கம்மல் கலெக்ஷன்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation