பல ஆண்டுகளுக்கு முன்பு விறகு அடுப்பை பயன்படுத்தி சமையல் செய்யப்பட்டது. ஆனால் காலப்போக்கில் அது பின்னணிக்கு நகர்ந்தது, இப்போது கேஸ் அடுப்பு தினசரி பயன்பாட்டில் ஒரு முக்கிய கருவியாகும். கேஸ் அடுப்பில் சமைக்கும் போது பால் வழிந்து மற்ற பொருட்கள், எண்ணெய் போன்றவை விழுவது வழக்கம். இது பொதுவாக கேஸ் அடுப்பில் கறைகளை உருவாக்குகிறது. அதை அகற்ற அதிக முயற்சி எடுக்க வேண்டும். இந்த கறைகளால் சிலரது கேஸ் அடுப்புகள் மிகவும் அழுக்காக காட்சியளிக்கும். அதை சுத்தம் செய்ய சில வழிகள் உள்ளன. இதை பின்பற்றினால் நிச்சயம் கேஸ் ஸ்டவ் புத்தம் புதியதாக இருக்கும்.
மேலும் படிக்க: பாத்ரூம் ட்ரைனில் சிக்கிய முடிகளை சில நிமிடங்களில் அகற்ற இந்த கரைசலை பயன்படுத்துங்க!
நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் சுத்தமாகவும், சமமாகப் பராமரிக்கவும் வேண்டும். கேஸ் அடுப்பு இதற்கு விதிவிலக்கல்ல.கேஸ் அடுப்பை சுத்தமாக வைத்திருக்க அதிக பணம் செலவழிக்க வேண்டும் என்று சொல்லவில்லை, அதற்கு பதிலாக, உங்கள் சமையலறையை சுத்தமாக வைத்திருக்கவும், உங்கள் கேஸ் அடுப்பை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருக்க சில இயற்கை முறைகளை பின்பற்றலாம்.
இது தவிர, கேஸ் அடுப்பின் பர்னரையும் கவனிக்க வேண்டும். கேஸ்அடுப்பின் பர்னர் சிறிய துளைகளைக் கொண்டுள்ளது, அதன் மூலம் தீ பற்றவைக்கப்படுகிறது. வழக்கமான பயன்பாடு காரணமாக, அழுக்குகள் எண்ணெய் செருவதினால் அது சரியாக எரிவதைத் தடுக்கிறது மற்றும் இது அதிகப்படியான வாயு உபயோகத்திற்கு வழிவகுக்கும். எனவே, அதை தொடர்ந்து சுத்தம் செய்தால், அதிக எரிவாயு சேமிக்கப்படும். இதை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வெங்காயத் துண்டுகளை தண்ணீரில் சரியாக 20 நிமிடங்கள் வேகவைத்து, இந்த தண்ணீரை குளிர்விக்கவும். இப்போது ஒரு ஸ்க்ரப் அல்லது ஒரு ஸ்பாஞ்சை எடுத்து, ஏற்கனவே வேகவைத்த தண்ணீரில் நனைத்து,கேஸ்அடுப்பின் பர்னர் மற்றும் கேஸ்அடுப்பின் மீது புள்ளிகள் அதிகம் உள்ள இடத்தில் நன்றாக தேய்க்கவும். எந்த இரசாயனமும் இல்லாமல் இயற்கையாகவும் மிகவும் பாதுகாப்பாகவும் கறைகளை நீக்குவதற்கான எளிய குறிப்புகள் இவை.
அதிக அமிலத்தன்மை இருப்பதால், வினிகர் சிறிது நேரத்தில் அடுப்பு மேல் கறைகளை நீக்குகிறது, மேலும் சிறிது நேரத்தில் அதன் அசல் நிறத்திற்கு மாற்றுகிறது. இரண்டு ஸ்பூன் வெள்ளை வினிகரை அரை வாளி தண்ணீரில் கலந்து, ஸ்க்ரப் அல்லது ஒரு ஸ்பாஞ்சை மூலம் கரை படிந்த பகுதியில் தடவவும். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால், அடுப்பு மேல் உள்ள கறைகள் படிப்படியாக மறைந்து, அசல் நிறத்திற்குத் திரும்பும்.
இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு அல்லது வினிகருடன் பேக்கிங் சோடாவை கலந்து,கேஸ் அடுப்புகள் மற்றும் பர்னர்களை சுத்தம் செய்ய பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
ஒரு டீஸ்பூன் பேக்கிங் அல்லது சமையல் சோடாவை தண்ணீரில் கலக்கவும் கண்ணாடி கேஸ் அடுப்பில் தெளிக்கவும், நிறைய எண்ணெய் கறைகள் உள்ள இடத்தில் ஸ்க்ரப் அல்லது ஒரு ஸ்பாஞ்சை மூலம் துடைக்கவும், பின்னர் அரை எலுமிச்சை சாற்றை நன்கு தெளிக்கவும், தண்ணீர் பயன்படுத்தி சுத்தமாக துடைக்க வேண்டும்.
பொதுவாக, அனைவரின் சமையலறையிலும் உப்பு மற்றும் சமையல் சோடா இருக்கும். முதலில் இந்த இரண்டு பொருட்களையும் சம அளவில் எடுத்து கலக்க வேண்டும்.
அதன் பிறகு, இந்த கலவையில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்யவும். இந்த பேஸ்ட்டை கறைகள் இருக்கும் கேஸ் ஸ்டவ்வின் மேல் தடவி நன்றாகக் கழுவினால் உங்கள் அடுப்பில் கறை இல்லாமல் அனைத்தும் மறைந்துவிடும்.
மேலும் படிக்க: இரும்பு தோசை தவாவை சுத்தம் செய்வதற்கான குறிப்புகள்
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள மேலும், இதுபோன்ற சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள் - HerZindagi Tamil
image source: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com