herzindagi
how to keep flies and insects away from kitchen   Copy

மழைக்காலத்தில் சமையலறையில் கொசுக்கள், ஈக்கள் வராமல் தடுப்பது எப்படி?

பருவ மழைக்காலம் தொடங்கிவிட்டது. உங்கள் வீட்டில் சமையலறையில் துர்நாற்றம் ஏற்படுத்தும் கொசுக்கள் மற்றும் ஈக்கள் வராமல் தடுப்பது எப்படி என்பது இங்கே உள்ளது.
Editorial
Updated:- 2024-07-12, 17:00 IST

பருவ மழை காலம் தொடங்கிவிட்டது. இனி தினமும் அடிக்கடி மழை பெய்யத் தொடங்கும். இந்த நேரங்களில் உங்கள் வீட்டில் சமையல் அறையில் கொசுக்கள், ஈக்கள் பூச்சிகளின் தொல்லை அதிகரிக்கும். இதனால் வீடு முழுவதும் துர்நாற்றம் பரவும். குறிப்பாக சமையலறையில் கொசுக்கள் ஈக்கள் பூச்சிகள் அதிகமாக வருவதால் துர்நாற்றம் பரவி நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் அபாயம் இருக்கும். மழைக்காலத்தில் சமையலறையில் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது கொசுக்கள் மற்றும் ஈக்கள் பூச்சிகள் அதோடு வரும் துர்நாற்றம் ஆகும்.

உங்கள் வீட்டில் அத்துமீறி நுழையும் கொசுக்கள் ஈக்களை இயற்கையான முறையில் விரட்டுவதற்கு நீங்கள் தயாராக இருங்கள். வரும் மழைக்காலத்தில் கொசுக்கள் பூச்சிகள் ஈக்கள் தொல்லை இல்லாமல் சுத்தமாக உங்கள் சமையலறையை வைத்து மகிழ்ச்சியாக இருங்கள். மழைக்காலத்தில் சமையலறையில் பெரும் பிரச்சனையாக இருப்பது துர்நாற்றம். எனவே உங்களின் பரபரப்பான சமையலறையில் கொசுக்கள் மற்றும் ஈக்களை விரட்டுவது எப்படி என்பது குறித்து இப்பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க: மழைக்காலத்தில் இந்த டிப்ஸை பின்பற்றுங்கள் ஒரே மாதம் வரும் சிலிண்டர் 2 மாதம் வரும்!

இந்த பொருட்களை சமையலறையில் வைக்கவும்

how to keep flies and insects away from kitchen

ஜன்னலுக்கு அருகில் துளசி, புதினா, எலுமிச்சை ஆகியவற்றை வைக்கவும். அதே போல் லாவெண்டர், யூகலிப்டஸ் எண்ணெயை ஜன்னல் அருகே வைத்தால் அந்த வாசனைக்கு கொசு, ஈ வராது.

வினிகர் மற்றும் பாத்திரம் கழுவும் சோப்பு 

கழுவும் சோப்பு மற்றும் வினிகரை ஒரு பெரிய கிளாஸில் போட்டு, அதை ஒரு பிளாஸ்டிக் மூடியால் மூடி, பின் ஒரு துளையிட்டு வீட்டில் கொசு மற்றும்  ஈக்கள் அதிகம் வரும் இடத்தில் வைக்கவும். 

சமையலறையை சுத்தமாக வைத்திருங்கள் 

how to keep flies and insects away from kitchen

சமையலறையில் தண்ணீர் தேங்காமல் இருக்க வேண்டும், சமையலறையை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்களை வெட்டி அப்படியே வைக்கக்கூடாது, அவற்றின் தோலை அப்படியே வைக்கக்கூடாது. ஒரு மூடியுடன் குப்பைத் தொட்டியில் வைக்கவும்.

குழாய் கசிவுகளை கவனிக்கவும்

how to keep flies and insects away from kitchen

கசியும் குழாய்கள் இருந்தால் அதை சரிசெய்து, தொட்டியின் அடியில் தண்ணீர் கசிவதை சரிசெய்து, கிட்ச்சன் ஜின்ங்- ஐ அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

பழங்கள் மற்றும் சில காய்கறிகளை மூடி வைக்கவும் 

how to keep flies and insects away from kitchen

ஒரு பறக்கும் திரை உள்ளது, வலையை உணவுப் பொருட்களின் மீது வைத்தாலோ அல்லது பழங்களை மூடுவதற்குப் பயன்படுத்தினால், நாம் உண்ணும் உணவு மற்றும் பழங்களில் இந்த பூச்சிகள் உட்காருவதைத் தடுக்கலாம். 

பாத்திரங்களை உடனடியாக சுத்தமாக வைத்திருக்கவும் 

how to keep flies and insects away from kitchen

பாத்திரங்களை அதிக நேரம் சிங்கினில் வைப்பதால், இந்த கிருமிகள் அவற்றில் படியக்கூடும், எனவே பாத்திரங்களை சுத்தமாக வைத்திருங்கள்.

இந்த ஈக்களை ஈர்ப்பது எது? 

  • அழுகும் உணவுப் பொருட்கள் 
  • இறைச்சி  
  • பழங்கள்

இந்த உணவுகளை முடிந்தளவு வேகமாக சாப்பிட்டு விட்டு உடனடியாக அந்த கழிவுகளை சுத்தம் செய்து தூக்கி எறியவும். இறைச்சி குப்பைகளை வீட்டில் வைக்க வேண்டாம்.

மேலும் படிக்க: மழையின் போது ஆடைகளில் வரும் பூஞ்சையை போக்க உதவும் சிம்பிள் டிப்ஸ்!

இதுபோன்ற வீட்டு அலங்காரம் தொடர்பான சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள் HerZindagi Tamil

image source: freepik

 

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com