
நாம் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ சுகாதாரமான வசிப்பிடம் அவசியம். சுகாதாரமான வசிப்பிடம் என்பது வீட்டை சுற்றி மட்டுமின்றி உட்புற சுகாதாரமும் தான். கொளுத்தும் வெயில் காலத்தில் கூட வீட்டை சுத்தமாக வைத்திருக்க முடியும். ஆனால் மழைக்காலத்தில் வீட்டை சுத்தமாக வைத்திருப்பது மிக கடினமான காரியம். துணிகளை காய வைப்பதில் தொடங்கி பூச்சிகள் வீட்டில் நுழையாமல் இருக்க தடுப்பு ஏற்படுத்துவது வரை மழைக்காலம் எப்போதும் முடியும் என இல்லத்தரசிகளுக்கு படாத பாடு பட வேண்டி இருக்கும். உங்களுடைய சிரமங்களை போக்குவதற்காகவே இந்த பதிவு.
மழைக்காலத்தில் துணிகளை எளிதில் காய்ந்து விடாது. சிலர் மழை பெய்ய ஆரம்பித்தவுடன் வீட்டிற்குள் துணிகளை எடுத்து வந்து மின் விசிறிக்கு கீழ் போட்டு காய வைக்கலாம் என நினைப்பார்கள். இப்படி செய்தால் வீட்டிற்குள் சோப்பு வாசனை அடிக்கும். அதே போல் காயாத துணிகளை அலமாரியில் அடுக்கி வைத்தால் துர்நாற்றமே வீசும். முடிந்தவரை துணிகளை வெயிலில் காய வைத்து அதன் பிறகு அவற்றை அலமாரியில் அடுக்குங்கள்.
மழைக்காலத்தில் பூச்சிகள் மற்றும் கொசுக்கள் நம் வீட்டை தங்களது வசிப்பிடமாக மாற்றி விட வாய்ப்புண்டு. இதை தடுக்க ஜன்னல் ஓரங்களில் வேப்பிலை கட்டி வைக்கவும். ஆங்காங்கே பாச்சை உருண்டை பயன்படுத்துங்கள்.

வீடு ஈரப்பதமாக இருந்தால் சிறு துர்நாற்றம் கூட காற்றில் பரவி நமது மூக்கை அடைக்க வைக்கும். எனவே வெளியில் உப்பு அல்லது சிலிகா ஜெல் வைத்தால் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு துர்நாற்றம் வீசாது.
வீட்டிற்குள் மண், தூசி, நாற்றம் ஆகியவற்றை கொண்டு வருவதில் காலணி முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் காலணியை பேப்பர் அல்லது துணி பயன்படுத்தி சுற்றி வைக்கவும். இதுவே காலணியில் இருந்து துர்நாற்றம் வெளியாவதற்கு தடுப்பு வழியாகும்.
மழைக்காலத்தில் வீட்டை காற்றோட்டமாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். துர்நாற்றம் இன்றி வீட்டை தூய்மையாக வைக்க வீடு காற்றோட்டமாக இருப்பது அவசியம்.
மழைக்காலத்தில் வீட்டிற்குள் ஆங்காங்கே பச்சையாக பூஞ்சைத் தொற்று உருவாகி விடும். அந்த இடங்களில் கிருமி நாசினி தெளித்து துணியை வைத்து துடைத்து எடுங்கள்.
சில மெழுகுவர்த்திகள் வெளியிடும் வாசனை வீட்டை மணக்க வைக்கும். இது நல்ல மனநிலையை உருவாக்குவதோடு நம்மிடம் காணப்படும் பதற்றத்தையும் குறைக்கும்.
இந்த விஷயங்களை பின்பற்றி நீங்கள் மழைக்காலத்தில் வீட்டை தூய்மையாக வைத்திருக்கலாம். இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com