வீட்டின் எதோ ஒரு ஓரத்தில் பல்லி ஒட்டிக் கொண்டிருந்தால் கூட தங்கள் மீது விழுந்துவிடும் என்ற பயத்தில் பெண்கள் அங்கு செல்லவே மாட்டார்கள். வீட்டில் ஒன்று - இரண்டு பல்லி இருப்பது சகஜமானது. ஆனால் திரும்பும் திசையெல்லாம் பல்லிகள், மரப்பல்லிகள் கண்டால் நமக்கு ஒரு விதமான அசெளகரியம் ஏற்படும். பல்லிகள் உயிருக்கு ஆபத்து விளைவிக்க கூடியவை அல்ல; எனினும் அவற்றின் கழிவுகள் நம் மீது பட்டால் சருமம் பிரச்னைகள் உண்டாகும் என கட்டுக்கதை உண்டு. சில பல்லிகள் நோய் தொற்றுகளை பரப்ப கூடியவை. அவற்றை வீட்டில் இருந்து அகற்றி சுகாதாரத்தை பாதுகாக்க விரும்பினால் இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ள விஷயங்களை பின்பற்றுங்கள்.
வீட்டிற்குள் பல்லி வருவதன் காரணம் ?
பல்லிகளை வீட்டின் அழையா விருந்தாளி எனக் குறிப்பிடலாம். வீட்டில் இருந்து அவற்றை விரட்ட விரும்பினால் முதலில் அவை எதனால் வருகின்றன என்ற காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.
- வீட்டில் உணவு பொருட்கள் மீதம் இருந்தால் பல்லிகள் ஈர்க்கப்படும். எனவே பிரிட்ஜில் மீதான உணவை வைக்கவும். சாப்பிட்டு முடித்த பிறகு கிச்சனில் எதையும் வைக்க கூடாது.
- சுவற்றில் ஓட்டைகள், ஜன்னல், மின்விசிறி அமைக்க ஏற்படுத்திய துளை வழியாக பல்லிகள் வீட்டிற்குள் வரும்.
- வீட்டின் வெப்பம் அதிகமாக இருந்தால் பல்லிகள் கண்டிப்பாக வர முயற்சிக்கும்.
- அசுத்தமான இடங்களை பல்லிகள் விரும்பும். எனவே வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள்.
பல்லிகளை வீட்டில் இருந்து விரட்டுவது எப்படி ?
பல்லிகளை கொன்று வீட்டில் இருந்து அகற்ற வேண்டும் என அவசியம் கிடையாது. சில எளிய முறைகளை பின்பற்றினால் அவற்றை வீட்டில் இருந்து ஒதுக்கி வைக்க முடியும்.
பல்லிய விரட்ட மிளகு ஸ்ப்ரே
பல்லிகள் சுற்றும் இடங்களில் மிளகு ஸ்ப்ரே தெளிக்கவும். இரண்டு ஸ்பூன் மிளகை மிக்ஸியில் அரைத்து தண்ணீரில் கலந்து அவை உலாவிய இடங்களில் தெளிக்கவும். மிளகிற்கு பதிலாக சிவப்பு மிளகாய் கூட பயன்படுத்தலாம்.
பல்லியை விரட்டும் பூண்டு, வெங்காயம்
பல்லிக்கு எந்த சேதாரமும் ஏற்படாமல் விரட்டிட பூண்டு, வெங்காயம் போதுமானது. பல்லி சுற்றும் இடத்தில் வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நறுக்கி வைக்கவும். அதிலிருந்து வெளிவரும் வாசனை பல்லிக்கு பிடிக்காது. அந்த இடங்களில் பல்லி மீண்டும் வரவே வராது.
பல்லிகளின் எதிரி பாச்சை உருண்டை
பல்லிகளை எளிதில் விரட்டிட சிறந்த வழி என்னவென்றால் பாச்சை உருண்டை பயன்படுத்துவது. எனினும் வீட்டில் வளர்க்கப்படும் பிராணிகள், குழந்தைகளின் கைகளில் அவற்றை படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கிச்சன், பாத்திரம் கழுவும் இடம், சேமிப்பு அடுக்குகளில் பாச்சை உருண்டை வைக்கவும்.
மேலும் படிங்கஒரே நாளில் வீட்டை விட்டு பெருச்சாளியை விரட்டிட இதை மட்டும் பண்ணுங்க
வீட்டின் வெப்பத்தை குறைக்கவும்
பல்லிகள் கூட்டமாக வெப்பமான இடங்களில் வாழ விரும்புபவை. வெப்பம் குறைவான இடங்களில் அவை வாழ விரும்பாது. வீட்டில் ஏசி பயன்படுத்தினால் பல்லி தொல்லையில் இருந்து தப்பிக்கலாம். ஏனெனில் ஏசி பயன்படுத்தும் போது வீட்டு குளிர்ச்சியாக இருக்கும்.
மீதான உணவுகளை தேக்காதீர்கள்
வீட்டில் ஏதேனும் உணவு பொருள் மீந்து போனால் அவற்றை உடனடியாக குப்பையில் போடவும்.
மயில் இறகு பயன்படுத்தவும்
வீட்டில் மயில் இறகு பயன்படுத்தினால் பல்லிகள் எளிதில் மயங்கிவிடும். இதன் மூலம் வீட்டில் இருந்து அவற்றை எளிதில் விரட்டலாம்.
பல்லியை விரட்ட மற்றும் சில வழிகள்
- உடைத்த முட்டை ஓடு பல்லிகளுக்கு குடைச்சல் கொடுக்கும். முட்டையின் வாசனையை பல்லிகள் பூச்சி கொல்லி போல் உணரும்.
- ஜில் தண்ணீர் பல்லிகளை பிடிக்க உதவும். சுவற்றில் ஒட்டி இருக்கும் பல்லி மீது ஜில் தண்ணீர் தெளியுங்கள்.
- பல்லிகள் வழக்கமாக உலாவும் இடத்தில் சுடு தண்ணீர் ஊற்றவும்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation