
இன்றைய இயந்திர உலகில் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், நாம் அன்றாடம் செய்யக்கூடிய பணிகளையும் அதற்கேற்றால் போல் மாறிக்கொண்டோம். குறிப்பாக சமையலுக்குப் பேருதவியாக இருக்கும் அம்மி, உரலுக்குப் பதில் மிகவும் சுலபமாக வேலையை முடிக்கும் மிக்ஸி, கிரைண்டருக்கு மாறிவிட்டோம். சட்னி அரைப்பது முதல் குழம்பிற்கு மசாலாக்கள் அரைப்பது வரை மிக்ஸியில் தான் அரைக்கின்றோம். மக்களின் வேலைப்பளுவைக் குறைப்பதால் மிக்ஸி இல்லாத வீடுகளே இன்றைக்கு இல்லை.
மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான மிக்ஸியை பராமரிப்பது என்பது மிகவும் கடினமாகும். சீரான முறையில் பராமரிக்கவில்லையென்றால் முழுவதும் பயனற்றுப் போகும். இந்த நிலையை நிச்சயம் அனைவரும் சந்திருப்போம். இதோ இன்றைக்கு மிக்ஸியை எப்படி சுலபமாக வீட்டிலேயே சுத்தம் செய்யலாம் என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

மேலும் படிக்க: மழைக்காலத்தில் வீட்டை துர்நாற்றம் வீசாமல் தூய்மையாக வைத்திருக்க இந்த டிப்ஸ் உதவும்
நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய மிக்ஸியில் இஞ்சி, சட்னி போன்றவற்றை அரைத்து உடனே கழுவாவிட்டால் காய்ந்துப் போய்விடும். மிக்ஸி பிளேடுகளும் வீணாகிவிடும் என்பதால் இதை முறையாக பராமரிக்க வேண்டும். இதற்காக கடைகளுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றில்லை. வீட்டில் உள்ள எலுமிச்சை தோலைப் பயன்படுத்தினால் போதும். ஆம் எலுமிச்சையில் இருந்து சாற்றைப் பிழிந்த பின்னதாக, அந்த தோலைக் கொண்டு மிக்ஸியை துடைக்கவும். 15 நிமிடங்களுக்கு அப்படியயே விட்டு விட்ட பின்னதாக சுத்தமான நீரைக் கொண்டு அலசவும். இதனால் அழுக்குகள்,துர்நாற்றம் அடிக்காது.
மிக்ஸியில் சில காய்கறிகளை அரைக்கும்போது கறைகள் அதிகமாக படிந்துவிடும். என்ன தான் பாத்திரம் தேய்க்கும் பவுடரை வைத்து கழுவினால் கூட போகாது. இந்த நேரத்தில் வினிகரை பயன்படுத்தலாம். வினிகரை நீரில் கலந்து மிக்ஸி ஜாரில் ஊற்றி 2 நொடிகள் அப்படியே விட்டு விடவும். பின்னர் சுத்தமான நீரைக் கொண்டு கழுவினால் போதும் அழுக்குகள் அடியோடு போய்விடும்.
அடுத்தப்படியாக, மிக்ஸி ஜாரில் உள்ள அழுக்குகள் மற்றும் கரைகளை நீக்குவதற்கு பேக்கிங் பவுடரைப் பயன்படுத்தலாம். பேக்கங் பவுடரை சிறிதளவு நீரில் கலந்து பேஸ்ட் போன்று செய்துக் கொள்ளவும். பின்னர் இதை மிக்ஸியில் தேய்த்து 15 நிமிடங்களுக்கு அப்படியே ஊற வைக்கவும். இதையடுத்து வெதுவெதுப்பான தண்ணீர் அல்லது சுத்தமான நீரைக் கொண்டு அலச வேண்டும். இப்படி தொடர்ச்சியாக செய்யும் பட்சத்தில் மிக்ஸியில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும்.

மேலும் படிக்க: மழைக்காலத்தில் இந்த டிப்ஸை பின்பற்றுங்கள் ஒரே மாதம் வரும் சிலிண்டர் 2 மாதம் வரும்!
இதே போன்று வாசிங் பவுடர், கோலப்பொடி, புளி போன்றவற்றை வைத்தும் கூட மிக்ஸியில் உள்ள அழுக்களை நீக்க முடியும். இனி உங்களது வீடுகளில் உள்ள மிக்ஸியில் அழுக்குகள் போக வில்லையென்ற கவலை வேண்டாம்.. இந்த முறைகளைப் பின்பற்றினாலே போதும்..
Image source - Google
.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com