
துணிகள் நாற்றம் அடிக்கிறதா? நாள் முழுவதும் பயன்படுத்தினால் வோர்வை நாற்றம் வருகிறதா? இந்த பேப்ரிக் ப்ரெஷனர்ஸ் பயன்படுத்துங்க. நிச்சயம் துணிகள் நாள் முழுவதும் வாசனையுடன் இருக்கும் என்ற விளம்பரங்களை அடிக்கடி டிவிகளில் பார்த்திருப்போம். நாற்றத்துடன் இருக்கும் துணிகளைக் காப்பாற்றுவதற்காக இதைப் பயன்டுத்துவோம். இப்படி துணிகளுக்கு செயற்கை வாசனை திரவியங்கள் மற்றும் இரசாயனங்கள் நிரப்பப்பட்ட துணி பிரெஷ்னர்களை வாங்கி சோர்வடைகிறீர்களா?
இதோ உங்களுக்காக உங்கள் துணிகளைப் புதியதாகவும், சுத்தமாகவும், வாசனையுடன் வைத்திருக்க உதவும் வாசனைத்திரவியங்களை வீட்டிலேயே சுலபமாக நீங்கள் செய்ய முடியும். அதற்கான எளிய வழிமுறைகள்.. இதற்காக அதிக செலவு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்களைக் கொண்டு துணி ப்ரெஷனர்களைத் தயார் செய்யலாம்.

வீடுகளிலேயே எளிமையாக செய்யக்கூடிய இந்த ஃப்ரெஷனஸை DIY ஃபேப்ரிக் ஃப்ரெஷனஸை துணிகள் துவைக்கும் போது இடையில் பயன்படுத்தலாம். நீங்கள் வீட்டிற்குள் நுழையும் போது அல்லது துர்நாற்றம் வீசும் ஷூக்கள் மற்றும் ஜிம் பைகளை புத்துணர்ச்சியடையச் செய்யும் போது நறுமணம் வீச உங்கள் வீட்டு வரவேற்பு பாயில் கூட தெளிக்கலாம். எவ்வித செயற்கையான பொருட்களும் அதிகளவில் சேர்க்கப்படவில்லை என்பதால், குழந்தைகளின் பள்ளி சீருடைகளில் கூட இதைப் பயன்படுத்தலாம். நிச்சயம் நல்ல வாசனை உணர்வை உங்களுக்குக் கொடுக்கும். மேலும் எவ்வித உடல் நலப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை.
Image source - Google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com