
பெண்கள் தங்களது சருமத்தைப் பொலிவுடன் வைத்திருக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும் பல நேரங்களில் இதில் தோல்வியைத் தான் சந்திக்கின்றனர். குறிப்பாக குளிர்காலங்களில் நிலவும் ஈரப்பதமான காற்று சருமத்தில் வறட்சி, அலர்ஜி போன்ற பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இதையடுத்து எந்த மேக்கப் பொருட்களை உபயோகித்தாலும் அதீத பொலிவு தருமா? என்பது சந்தேகம் தான். அதிக விலையில்லாமல், எவ்வித கெமிக்கல் பொருட்கள் இல்லாமல் முகத்தைப் பிரகாசமாக வைத்திருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்த அழகுக் குறிப்புகள் இங்கே.
பெண்கள் அனைவரும் அனைத்து நேரங்களிலும் முகத்தை அழகாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். ஏதாவது விசேசம், திருமணம், பார்ட்டிகளுக்குச் செல்லும் போது தான் தங்களை மிகவும் அழகாக காட்ட வேண்டும் என்று முயற்சி செய்வார்கள். இதுப்போன்றவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் கேரட் உங்களுக்கு சிறந்த தேர்வாக அமையம்..
முதலில் கேரட்டை தோல் சீவி ஜூஸாக்கிக் கொள்ளவும். பின்னர் அதனுடன் சிறிதளவு மஞ்சள் மற்றும் கேப்பை மாவை கலந்து முகத்தில் அப்ளை செய்து காய்ந்ததும் கழுவிக் கொள்ளவும். உங்களுக்கு இன்ஸ்டன்ட் க்ளோவைத் தருவதோடு கோல்டன் பேசியல் செய்தது போன்று இருக்கும்.
மேலும் படிக்க: கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் வைட்டமின்கள்; முடி உதிர்வை தடுக்க இந்த உணவுகளை சாப்பிடவும்
சருமத்தில் படிந்துள்ள அழுக்குகள், கருந்திட்டுக்கள் போன்றவற்றை அகற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் சிறந்த உணவுப்பொருட்களில் ஒன்றாக உள்ளது தக்காளி. அனைத்து சருமம் கொண்ட பெண்களுக்கும் சிறந்த டோனராகப் பயன்படுகிறது. எவ்வித செலவும் இன்றி இயற்கையாக சருமப் பொலிவைப் பெறுவதற்குப் பேருதவியாக உள்ள தக்காளியை முதலில் நன்கு பேஸ்ட் போன்று அரைத்துக் கொள்ளவும்.
மேலும் படிக்க: முதுமை தோற்றத்தை தாமதப்படுத்த உதவும் இந்த 5 வழிமுறைகளை தினமும் பின்பற்றவும்
பின்னர் இதை முகத்தில் அப்ளை செயது சுமார் 10 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் போதும். சருமம் பொலிவாகவும், பளபளப்பாகவும் இருக்கும். உங்களால் இதுபோன்று செய்வதற்கு நேரம் இல்லையென்றாலும் தக்காளியைப் பச்சையாக சாப்பிட வேண்டும்.
சருமத்தில் உள்ள பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்க வேண்டும் என்றால் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்த பப்பாளி பழங்களை நீங்கள் பயன்படுத்தலாம். பப்பாளி பேஸ் பேக் போடும் போது பழங்களை நன்கு அரைத்து மற்றும் மசித்து கூழாக்கிக் கொள்ளவும். பின்னர் அதனுடன் சிறிதளவு ரோஸ் வாட்டார் சேர்த்து முகத்தில் அப்ளை செய்யவும். நன்கு காய்ந்ததும் 10 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இதுப்போன்று தொடர்ந்து வாரத்திற்கு இருமுறை தொடர்ந்து செய்து வரும் பட்சத்தில் முகத்தில் படிந்துள்ள கரும்புள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையக்கூடும்.
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com