தலைமுடியை சீவுவதற்கு சீப்பு பயன்படுத்துகிறோம். 20-30 ஆண்டுகளுக்கு முன்பாக மரத்தில் ஆன சீப்பு பயன்பாட்டில் இருந்தது. இப்போதெல்லாம் பிளாஸ்டிக் சீப்பை மட்டுமே பயன்படுத்துகிறோம். சீப்பு வாங்கிய கொஞ்ச நாட்களுக்கு மட்டுமே பளபளக்கும். அதன் பிறகு அழுக்கு, பொடுகு, எண்ணெய், கிருமிகள் தேங்கி கருப்பாக காட்சியளிக்கும். இவை அனைத்திலும் தலைமுடியில் இருந்து சீப்பிற்கு பரிமாற்றம் ஆனவை. தலையில் தேய்த்த எண்ணெய், உடைந்த முடி, அழுக்கு, தலைமுடிக்கு பயன்படுத்திய பொருட்கள் சீப்பை அழுக்காக மாற்றிடும். சீப்பை இரண்டு வாரங்களுக்கு ஒரு சுத்தம் செய்யாவிட்டால் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கும். தலைமுடியை பாதுகாக்க நாம் பல முயற்சிகள் எடுக்கிறோம். ஆனால் சீப்பை சுத்தம் செய்ய தவறிவிட்டால் தலைமுடி ஆரோக்கியத்தை பாதுகாக்க இயலாது. சீப்பு அழுக்கானால் குப்பையில் வீச தேவையில்லை. மர சீப்பு, பிளாஸ்டிக் சீப்பு எதுவாக இருந்தாலும் 5 ரூபாயில் திரவம் தயாரித்து அவற்றை சுத்தம் செய்யலாம்.
சீப்பு சுத்தம் செய்வது எப்படி ?
சீப்பை சுத்தம் செய்வதற்கு சமையலறையில் உள்ள சில பொருட்கள் போதுமானது. வினிகர், பேக்கிங் சோடா கொண்டு சீப்பு சுத்தம் செய்யும் திரவம் தயாரிக்க போகிறோம்.
சீப்பை சுத்தம் செய்ய பொருட்கள்
- வினிகர்
- பேக்கிங் சோடா
- வெதுவெதுப்பான தண்ணீர்
- பெரிய பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றவும். அதில் ஒரு டீஸ்பூன் வினிகர் மற்றும் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா போட்டு கலக்கவும்.
- இதன் பிறகு சீப்பை தண்ணீரில் போட்டு அரைமணி நேரத்திற்கு ஊறவிடுங்கள்.
- இப்போது பல்துலக்கி கொண்டு சீப்பின் பற்களுக்கு இடையில் மெதுவாக தேய்த்தாலே அழுக்கு வந்துவிடும்
- மீண்டும் குழாய் தண்ணீரில் சீப்பை காண்பித்து வெயிலில் 5 நிமிடங்களுக்கு காயவிடுங்கள்.
- சீப்பை சுத்தம் செய்ய வேறு சில வழிகளும் இருக்கின்றன. கொஞ்சம் பற்பசை எடுத்து அதை தண்ணீரில் கலக்கவும்.
- இதில் பிளாஸ்டிக் சீப்பை போட்டு 10 நிமிடத்திற்கு அப்படியே விடுங்கள்.
- இதையடுத்து வெள்ளை துணி அல்லது பல்துலக்கி கொண்டு சீப்பை சுத்தம் செய்யவும்.
சீப்பு சுத்தம் செய்ய 2வது வழி
- எலுமிச்சை
- உப்பு
இதற்கு சிறிய பாத்திரத்தில் ஒரு டீஸ்பூன் உப்பு போட்டு அதில் ஒரு எலுமிச்சையை பாதியாக வெட்டி பிழியவும்.
இதை கலந்துவிட்டு எலுமிச்சை தோலில் தொட்டு எடுத்து சீப்பின் பற்களில் தேய்க்கவும். அழுக்கை எளிதில் அகற்றிவிடலாம்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation