பூசணிக்காய் ஒரு ஆரோக்கியமான காய்கறி. இதன் சதைப்பற்று மட்டுமல்லாமல் இதனுடைய விதைகளும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளன. இதில் நிறைந்துள்ள துத்தநாகம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் மெக்னீசியம் பல உடல் நல பிரச்சனைக்கு தீர்வாக அமைகிறது. இவை உடலுக்கு தேவையான ஆற்றலையும் கொடுக்கின்றன. பூசணி விதைகளை பெண்கள் ஏன் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்பதற்கான காரணங்களை தெரிந்துகொள்வோம். பூசணி விதைகளின் நன்மைகளை படித்தறிந்து பயன்பெறுங்கள்.
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
பூசணிக்காய் விதைகளில் உள்ள வைட்டமின் E நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. மேலும் நோய் தொற்று மற்றும் அல்ர்ஜியை ஏற்படுத்தும் நோய்க்கிருமிகளிடம் இருந்து உடலை பாதுகாக்கிறது.
பூசணி விதைகளில் பூஞ்சை காளான், நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை ஆரோக்கியமான செல்களை தாக்கும் ஃப்ரீ ரேடுக்கல்களை தடுக்கின்றன.
எடை இழப்புக்கு உதவும்
பூசணிக்காய் விதைகளில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது. எனவே இவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளும் பொழுது, வயிறு நிரம்பிய உணர்வை உங்களுக்கு தரும். இதனால் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது, அடிக்கடி சாப்பிடுவதையும் தவிர்க்கலாம். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தங்கள் உணவில் பூசணி விதைகளை சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் ஆரோக்கியமான உணவு முறை மற்றும் உடற்பயிற்சியும் செய்ய வேண்டியது அவசியம்.
கர்ப்ப காலத்திற்கு நல்லது
கர்ப்ப காலத்தில் கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான துத்தநாகம் பூசணி விதைகளில் உள்ளது. எனவே கர்ப்பிணிகளும் பூசணி விதைகளை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
வயது முதிர்வை தடுக்கும்
பூசணி விதைகளில் முதுமையைத் தடுக்கும் பண்புகள் உள்ளன. இவை சரும அமைப்பை மேம்படுத்தவும், முதுமையின் அறிகுறிகளை தடுக்கவும் உதவுகின்றன. இவை சரும ஆரோக்கியத்தை பராமரிப்பதோடு மட்டுமின்றி பளபளப்பான கூந்தலை பெறவும் உதவுகின்றன.
மெக்னீசியம் நிறைந்தது.
எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க மெக்னீசியம் அத்தியாவசியமான சேர்மம் ஆகும். இது உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் சர்க்கரை நோயின் அபாயத்தையும் குறைக்கலாம்.
சைவ உணவு சாப்பிடுபவர்களின் மெக்னீசியம் தேவையை பூர்த்தி செய்ய பூசணி விதைகளை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மெக்னீசியம் நிறைந்த உணவுகள் மனதை அமைதிப்படுத்தி பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகின்றன.
ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்தது
பூசணிக்காய் விதைகளில் உடலுக்கு நன்மை தரக்கூடிய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வலி, சிவத்தல் மற்றும் வீக்கத்திலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது. இருப்பினும் இவை மருந்துக்கு மாற்றாக எடுத்துக் கொள்ள முடியாது. உங்களுக்கு ஏதேனும் நோய் தொற்று அல்லது உடல்நல பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரை ஆலோசனை செய்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: பீன்ஸ் வகைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்
பூசணி விதைகளை உணவில் சேர்த்துகொள்வது எப்படி?
- பூசணிக்காயை வெட்டி அதனுள் இருக்கும் விதைகளை பிரித்து எடுத்து, உலர்த்தி பயன்படுத்தலாம். அல்லது கடைகளில் விற்கப்படும் பூசணி விதைகளை வாங்கி கொள்ளலாம்.
- இதனை ஸ்மூதீஸ், சாலட், சூப், பிரட், குக்கிஸ் போன்ற உணவுகளில் சேர்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: சப்ஜா விதைகளில் உள்ள தீமைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik