உடல் எடை குறைக்க முயற்சிக்கும் போது சப்பாத்தி சாப்பிடலாமா அல்லது சோறு சாப்பிடலாமா என்ற குழப்பம் பலருக்கும் உண்டு. சிலர் இரண்டையும் தவிர்க்கிறார்கள், சிலர் இரண்டையும் சம அளவில் சாப்பிட்டும் உடல் எடை குறைக்கிறார்கள். அந்த வரிசையில் உடல் எடை குறைக்க வேண்டும் என்றால் சப்பாத்தி சாப்பிடணுமா இல்லை அரிசி சாதம் சாப்பிடணுமா என்பது பற்றி ஊட்டச்சத்து நிபுணர் (டயட்டீஷியன்) டாக்டர் ஸ்வாதி பாத்வாலின் ஆலோசனைகளை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
வெள்ளை அரிசியில் ஃபைபர் குறைவாக இருப்பதால் விரைவில் பசி எடுக்கும். பழுப்பு நிற அரிசி போன்ற கரடுமுரடான அரிசி ஃபைபர் அதிகம் கொண்டது. இது பசியை தாமதப்படுத்தி கட்டுப்படுத்த உதவும் என்று டாக்டர் ஸ்வதி கூறுகிறார்.
ரெஃபைண்ட் மாவு (மைதா) சப்பாத்தி தவிர்க்கவும். இது சர்க்கரை அளவை திடீரென உயர்த்தும். பார்லி, சோளம், கேழ்வரகு, போன்ற தானிய மாவுகளை தேர்ந்தெடுக்கவும்.
மதியம் 12 - 2 மணிக்கு உணவு சாப்பிடுங்கள். இந்த நேரத்தில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக இருக்கும் என்று நிபுணர் கூறுகிறார்.
ஒரு தட்டு நிறைய சோறு சாப்பிட்டால் அது 7 அல்லது 8 சப்பாத்திகளுக்கு சமம். இது உடல் எடையை அதிகரிக்கும். ஃபைபர் அதிகம் உள்ளவற்றை முன்னுரிமையாக தேர்ந்தெடுக்கவும் என்று டாக்டர் ஆலோசனை தருகிறார்.
அந்த வரிசையில் சப்பாத்தி அல்லது சோறு இரண்டிலும் கலோரிகள் சமமாக இருந்தாலும், ஃபைபர் அதிகம் உள்ள வகைகளைத் தேர்ந்தெடுப்பதும், சரியான நேரத்தில் சரியான அளவு சாப்பிடுவதுமே எடை குறைக்க உதவும்.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com