பெரும்பாலான இந்தியர்கள் இனிப்புகளை விரும்பி சாப்பிடுகிறார்கள். பல நேரங்களில் நாம் இனிப்புகளை தான் அதிகம் சாப்பிட விரும்புகிறோம். எதை பற்றியும் யோசிக்காமல் இனிப்புகளை சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறோம். இனிப்பு நம் உடலுக்கு மிகவும் ஆபத்தானது என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த பதிவில் உங்களுக்கு ஏன் இனிப்புகள் சாப்பிட வேண்டும் என்ற ஆசை வருகிறது என்பதை பற்றி நிபுணர்களிடம் இருந்து கேட்டு தெரிந்துகொள்வோம்.
இதுகுறித்து நிபுணர் டாக்டர் யோகேஷ் அவர்களிடம் பேசியுள்ளோம். இந்த விஷயம் குறிப்பு பல தகவல்களை அவர் நமக்கு வழங்கியுள்ளார்.
பலர் உப்பு அதிகமாக சாப்பிடுகிறார்கள். அப்படி அதிகமாக உப்பு சாப்பிடுபவர்களுக்கு தான் இனிப்புகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும் என்று நிபுணர் கூறியுள்ளார். நீங்கள் உணவில் அதிகமாக உப்பு சேர்த்து சாப்பிடுபவராக இருந்தால், அதை உடனடியாக குறைத்துக்கொள்ள வேண்டும்.
சில சமயம் தேவையான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் கூட நமக்கும் இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆசை வரும். தினமும் மிகக் குறைந்த அளவு தண்ணீர் குடிப்பவர்கள் பலர் இருக்கிறார்கள், அவர்களுக்கு இனிப்பு சாப்பிடும் ஆசை அதிகமாக வரும். நீங்களும் அப்படிப்பட்டவராக இருந்தால் இனி அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்.
இதுவும் உதவலாம்: உடல் எடையைக் குறைக்க பப்பாளி எப்படி உதவுகிறது தெரியுமா?
நீங்களும் அதிகமாக இனிப்பு சாப்பிட விரும்புகிறீர்கள் என்றால், இனிமேல் கவனமாக இருக்க வேண்டும். இதற்காக நிபுணர்கள் சில தீர்வுகளை பகிர்ந்துள்ளனர். தினமும் 10 நிமிடம் நடந்தால், இனிப்பு சாப்பிடும் ஆசை குறையும்.
உங்கள் பற்களை சரியாக சுத்தம் செய்ய வேண்டும். இப்படி செய்தாலும் இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் வராது.
இனிப்புகளை சாப்பிடுவதால் பல நோய்கள் வரும். நீங்கள், இந்த நோய்களைத் தவிர்க்க விரும்பினால், இனிப்புகள் சாப்பிடுவதை குறைக்க வேண்டும். நீங்களும் இனிப்புகளை அதிகமாக சாப்பிட்டாலோ அல்லது இனிப்புகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டாலோ உங்கள் பழக்கங்களை மாற்றிக்கொள்ளவேண்டும்.
இதுவும் உதவலாம்: யாரெல்லாம் கொய்யாப்பழம் சாப்பிட கூடாது?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com