முட்டை விற்பனை கடைகளில் நாட்டு கோழி முட்டைக்கு பக்கத்தில் மிகவும் சிறிதாக நம்முடைய கண் சைஸில் சிறிய முட்டைகள் வைத்திருப்பார்கள். இந்த காடை முட்டைகள் எல்லா கடைகளிலும் கிடைப்பதில்லை. எனினும் கோழி முட்டை போலவே ருசியானது. காடை முட்டையை அவித்து சாப்பிடலாம், வறுவல் செய்யலாம். ஒரு முட்டை சராசரியாக 45-50 கிராம் இருக்கும். அதுவே காடை முட்டை எடை 9 கிராம் மட்டுமே. இதை நீங்கள் தாராளமாக உணவுமுறையில் சேர்த்துக் கொள்ளலாம். காடை முட்டை நம் உடலுக்கு தரும் ஆரோக்கிய நன்மைகள் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 கிராம் எடை கொண்ட காடை முட்டையில் 1.17 கிராம் புரதம், கொழுப்பு 1 கிராம், கொலஸ்ட்ரால் 76 மில்லி கிராம், கார்போஹைட்ரேட் 0.04 கிராம், கால்சியம் 5.76 மில்லி கிராம், மெக்னீசியம் 1 மில்லி கிராம் இருக்கிறது. இதே போல பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி6, ஃபோலேட், வைட்டமின் பி12, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, வைட்டமின் டி, வைட்டமின் கே போன்ற ஊட்டச்சத்துகளும் உண்டு.
காடை முட்டை குறைந்த கலோரி கொண்டது என்றாலும் இதில் ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் புரதச்சத்து உண்டு. புரதம் அதிகப்படியாக எடுத்துக்கொண்டாலும் உடலில் கொழுப்பாக தேங்கிவிடும். காடை முட்டையில் அளவான புரதம் இருப்பதால் தினமும் எடுத்துக் கொள்ளலாம்.
காடை முட்டையில் உள்ள கோலின், ஃபோலேட் மற்றும் நல்ல கொழுப்பு மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதன் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மூளை தொடர்பான அல்சைமர் நோயை தடுத்திடும். கோலின் மற்றும் ஃபோலேட் வயிற்றில் கருவின் வளர்ச்சிக்கு உதவும்.
காடை முட்டையில் பல்வேறு அமினோ அமிலங்கள் சரியான அளவில் உள்ளன. இறைச்சிகளில் உள்ள புரதச்சத்தை உறிஞ்சுவதற்கு செரிமான அமைப்பு சிரமப்படும். ஆனால் காடை முட்டையின் புரதம் எளிதாக உறிஞ்சப்படும். ஹார்மோன் உற்பத்தி, செல் வளர்ச்சிக்கும் பயனளிக்கிறது.
மேலும் படிங்க ஆரோக்கியமான உடலுறவு வைத்துக்கொள்ள குடிக்க வேண்டிய 5 பானங்கள்
காடை முட்டைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள கால்சியம், புரதம், பாஸ்பரஸ், மெக்னீசியம், வைட்டமின் டி தசைக்கூட்டு அமைப்பை வலுப்படுத்தும்.
காடை முட்டையில் உள்ள ஊட்டச்சத்து இரத்த கொலஸ்ட்ரல் மற்றும் இரத்த அழுத்த அளவை சீராக வைக்கும். இதய நோய், மாரடைப்பு அபாயத்தை தவிர்க்கலாம். இதன் இரும்புச்சத்து மற்றும் பி12 இரத்த சோகையை தடுத்திடும்.
இதே போல செரிமான ஆரோக்கியம், நச்சுகளை நீக்கி கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, கண் பார்வையை கூர்மைப்படுத்த, தொற்றுகளை எதிர்த்து போராட காடை முட்டை சாப்பிட்டு பயன்பெறலாம்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com