மனிதர்களை தங்களுடைய இயல்பு நிலையில் இருந்து நகர்த்திவிட்ட வாழ்க்கைமுறையின் காரணமாக பலரால் ஆரோக்கியமான உடலுறவு வைத்துக்கொள்ள முடிவதில்லை. ஆண், பெண் என இரு பாலினருமே உடலுறவில் பிரச்னைகளை சந்திக்கின்றனர். இதை தீர்ப்பதற்கு இயற்கையான பானங்கள் குடிப்பது பலன் தரும். சில பானங்களுக்கும் ஆரோக்கியமான செக்ஸ் உறவுக்கும் மறைமுக தொடர்பு உண்டு. இந்த பானங்களை சூப்பர்ஃபுட் என்றும் சொல்லலாம். செக்ஸ் செய்வதற்கான ஆற்றலை பெற்றிட சமச்சீரான உணவுமுறைய பின்பற்ற வேண்டும்.
மாதுளைப்பழ ஜுஸில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் உயிரியல் செயல்பாடுடைய சேர்மங்கள் நிறைந்துள்ளன. இந்த உயிரியல் செயல்பாடுடைய சேர்மங்கள் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும். அதே நேரம் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கும். குறிப்பாக மாதுளைப்பழ ஜுஸ் குடித்த விறைப்புத்தன்மை குறைபாடு கொண்ட ஆண்கள் ஆரோக்கியமான செக்ஸ் வைத்துக்கொண்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்ட கற்றாழை ஜெல் செக்ஸ் வாழ்க்கைக்கு கட்டாயம் உதவும். மிருகங்களை வைத்து செய்யப்பட்ட ஆராய்ச்சியில் கற்றாழை ஜெல் சாப்பிட்ட பிறகு அவற்றின் பாலியல் செயல்பாடு அதிகரித்துள்ளன. இரத்த சர்க்கரை பிரச்னையை தீர்க்க கற்றாழை ஜெல் உதவுகிறது. இரத்த சர்க்கரை நோய் உள்ளவர்களின் பாலியல் ஆரோக்கியம் சற்று குறைவு என்பதால் கற்றாழை ஜெல் மறைமுகமாக பயனளிக்கிறது.
இயற்கையான அமினோ அமிலம் கொண்ட தர்பூசணி ஜுஸ் உடலில் நைட்ரிக் ஆக்ஸைட் உற்பத்தியை அதிகரிக்கிறது. நைட்ரிக் ஆக்ஸைட் பிறப்புறுப்பு பகுதியில் இரத்த நாளங்களை தளர்த்தி பாலியல் ஆரோக்கியத்திற்கு உதவும்.
பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழம் இதய ஆரோக்கியத்திற்கும், உடலின் சுற்றோட்ட அமைப்புக்கும் முக்கியமானது. பிறப்புறுப்பின் செயல்பாடுகளுக்கு சுற்றோட்ட அமைப்பு சரியாக வேலை செய்வது முக்கியம். எனவே வாழைப்பழ ஷேக் குடிக்கவும்.
மேலும் படிங்க அதென்ன கோசுக்கிழங்கு ? எலும்புகள் வலுப்பெற, கல்லீரல் பலன்பெற கட்டாயம் சாப்பிடுங்க; நன்மைகள் அதிகம்
இதே போல ஸ்ட்ராபெர்ரி ஜுஸ் உடலில் செல்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கிறது. பீட்ரூட் ஜுஸ் விறைப்புத்தன்மை குறைபாட்டை சரி செய்யக்கூடியது. பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும். உயர் இரத்த அழுத்த பிரச்னை இருந்தால் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட முடியாது.
புரதம், வைட்டமின் மற்றும் கனிமச்சத்து நிறைந்த பால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் பிறப்புறுப்பு செயல்பாட்டுக்கும் உதவுகிறது. ஆரோக்கியமான செக்ஸ் வைப்பதற்கான தசை வலிமையை பாலில் உள்ள புரதச்சத்து கொடுக்கிறது.
உடலை நீரேற்றமாக வைத்திருப்பது விறைப்புத்தன்மை குறைபாட்டை சீராக்கும். உடல் நீரேற்றமாக இல்லாத போது மன அழுத்தம், பதட்டம் ஏற்படும். இதன் காரணமாக செக்ஸில் ஈடுபாடும் இருக்காது. எனவே போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com