உங்கள் உடம்பில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகம் ஆகி விட்டது என்றால், அதனால் பல பிரச்சனைகள் நம் உடம்புக்கு வரும். சாப்பிடும் உணவு, உடற்பயிற்சி இந்த ரெண்டு மூலமாக தான் நம் உடம்பில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும். சர்க்கரையை கட்டுப்படுத்த என்ன தான் மருந்து மாத்திரைகள் இருந்தாலும் சில நேரங்களில் இயற்கை வைத்தியங்கள் நமக்கு பெரிதும் உதவும். இப்போது நாம் இயற்கையான முறையில் உடம்பில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும் ஒரு இயற்கை முறையைத் தான் பார்க்க போறோம். அதுதான் பன்னீர் பூ. இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை வாங்கி பயன்படுத்தினால் சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வர முடியும். அந்த வரிசையில் சர்க்கரையை கட்டுப்படுத்த இந்த பன்னீர் பூவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இது சர்க்கரை நோயை மட்டும் கட்டுப்படுத்தாது. சர்க்கரை நோயால் வரும் பிரச்சனைகள் அதாவது அடிக்கடி சிறுநீர் கழித்தல், கால் மரத்துப்போவது, மூட்டு வலி, உடம்பு மெலிஞ்சு போறது, தலைமுடி கொட்டுறது இந்த மாதிரியான பிரச்சனைகளையும் குணமாக்கும். அது மட்டும் இல்லை வாந்தியை கட்டுக்குள்ள வைக்கும். ஒரு சில பேருக்கு எதை சாப்பிட்டாலும் நாக்கில் சுவையே தெரியாது. அப்படிப்பட்டவங்களுக்கு சுவையை கொண்டுவரும் இந்த பன்னீர் பூ. அதே போல சில ஆண்களுக்கு தன்னையே அறியாமல் இரவில் விந்து வெளியேறிடும். இது போன்ற பிரச்சனையையும் இது கட்டுக்குள் கொண்டுவரும். நா வறட்சியால் ஏற்படும் தண்ணீர் தாகத்தை கட்டுக்குள் வைக்கும். உடம்பில் உடல் சூடு அதிகமாக இருந்தால் அந்த சூட்டை குறைக்க உதவும்.
நாட்டு மருந்து கடைகளில் இந்த பன்னிர்ப்பூ கிடைக்கும். அதை வாங்கி முதல் நாள் இரவே ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கழுவி எடுக்க வேண்டும். இதற்கு பிறகு ஒரு கிளாஸ் எடுத்து அதில் அரை கப் தண்ணீரில் பத்து பன்னீர் பூக்களை சேர்த்து ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலை இந்த பூக்கள் தண்ணீரில் ஊறி அந்த நீரின் நிறம் மாறி இருக்கும். இப்போது அதை வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க: பெண்களுக்கு இதய நோய் வராமல் தடுக்கும் பூசணி விதை; பயன்படுத்துவது எப்படி தெரியுமா?
இந்த அரை டம்ளர் நீரை அப்படியே காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதன் சுவை கொஞ்சம் கசப்பாக தான் இருக்கும். ஆனால் ஒரு மாசம் இதை செய்து வந்தால் உங்களுக்கே ரொம்ப ஆச்சரியமாக இருக்கும். சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும், உடல் சோர்வு, முடி கொட்டுறது, உடல் மெலிஞ்சு போறது போன்ற அணைத்து பிரச்னைகளையும் இது குணப்படுத்தும். குறிப்பாக காலையில் வெறும் வயிற்றில் இந்த பன்னீர் பூ தண்ணீர் குடித்த உடனே வேறு எந்த உணவும் சாப்பிட கூடாது. ஒரு மணி நேரம் கழித்து நீங்கள் உணவு சாப்பிடலாம்.
Image source: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com